ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அறிமுகம்: மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் - தாமினி நாத், அபூர்பா விஸ்வநாத்

 இந்தியாவில், ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election): அரசியலமைப்பில் புதிய பிரிவை சேர்க்கவும், 3 பிரிவுகளில் திருத்தம் செய்யவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  


இந்த மசோதாவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலையும் நடத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்று குறிப்பிடப்படும் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான பாஜகவின் நீண்டகால வாக்குறுதியை செயல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொண்டது.


சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் மக்களவையில் இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தார். ஒன்று அரசியலமைப்பு திருத்த மசோதா. இது மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளின் விதிமுறைகளை சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றொன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லிக்கான சட்டங்களில் மாற்றங்களை முன்மொழிகிறது. அங்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 


இரண்டு மசோதாக்களில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? 


முதலாவதாக, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமே பொருந்தும், நகராட்சிகளுக்கு அல்ல. 


இரண்டாவதாக, இந்த மாற்றங்கள் சாதாரண சூழ்நிலைகளில் 2034-ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்த மாற்றங்கள் நிகழலாம். அரசியலமைப்பு திருத்த மசோதா, பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசியலமைப்பின் முதல் அமர்வின் தேதியில் “குடியரசுத் தலைவர் பொது அறிவிப்பை வெளியிடலாம்" என்று அரசியலமைப்பு திருத்த மசோதா கூறுகிறது.  இந்த அறிவிப்பு இந்த பிரிவின் விதியை நடைமுறைக்கு கொண்டு வரும். அறிவிப்பின் தேதி "நியமிக்கப்பட்ட தேதி" (appointed date) என்று அழைக்கப்படும்.

 

சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 2029-ஆம் ஆண்டு இருக்கும். 18வது மற்றும் 19வது மக்களவைகள் இரண்டும் தங்கள் முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என வைத்துக் கொண்டால், இந்த தேர்தல் நடைமுறைகள்  2034-ஆம் ஆண்டில் இருக்கும். 


மாநில அல்லது மத்திய அளவில் இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலைகள் போன்ற கூடுதல் விவரங்கள் இரண்டு மசோதாக்களிலும் அடங்கும்.


அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் "சிறப்புப் பெரும்பான்மை" (special majority) தேவை.  திருத்தம் செய்ய அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 368-வது பிரிவின் கீழ் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 


முதலாவதாக, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாதி உறுப்பினர்கள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இரண்டாவதாக, "அவையில் இடம்பெற்றுள்ள" அனைத்து உறுப்பினர்களிலும், மூன்றில் இரண்டு பங்கு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். 


நகராட்சித் தேர்தலை இப்போதைக்கு விலக்கி வைப்பது நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் நாட்டில் உள்ள பாதி மாநிலங்களின் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட (ratified) வேண்டும். 


திருத்தங்கள் என்ன கூறுகின்றன? 


முன்மொழியப்பட்ட திருத்தங்கள் முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உள்ளன. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 


முதல் அரசியலமைப்பு திருத்த மசோதாவானது, 129வது திருத்த மசோதா, (2024) என்று அழைக்கப்படுகிறது. இது அரசியலமைப்பின் மூன்று பிரிவுகளை திருத்த முன்மொழிகிறது. பிரிவு 82A(1-6) என்ற புதிய பிரிவை சேர்க்க பரிந்துரைக்கிறது.

 

இந்த புதிய விதியானது ஒரே நேரத்தில் நடத்துவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சட்டப்பிரிவு 82க்குப் பிறகு சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. பிரிவு 82 எல்லை நிர்ணயம் பற்றிக் கூறுகிறது. இது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மாநிலங்களுக்கிடையேயான மக்களவை இட ஒதுக்கீடுகளை மறுசீரமைப்பதாகும்.

 

இந்த மசோதாவின்படி, மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 82ஏ பிரிவு வழிவகை செய்கிறது. 


முதல் பிரிவு காலக்கெடுவை அமைக்கிறது. மக்களவையின்  முதல் கூட்டத் தொடரின் தேதியில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை குடியரசுத் தலைவர் செயல்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

நியமிக்கப்பட்ட தேதிக்குப் பிறகும், மக்களவையின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலமும் "மக்களவையின் முழு பதவிக்காலம் முடிவடைவதுடன் முடிவடையும்" என்று இரண்டாவது பிரிவு கூறுகிறது. அதாவது, சில சட்டமன்றங்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் குறைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

 

சட்டப்பிரிவு 82A(3)ன் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும்.


சட்டப்பிரிவு 82A(4) ஒரே நேரத்தில் தேர்தல்களை "மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒன்றாக நடத்தப்படும் பொதுத் தேர்தல்கள்" என வரையறுக்கிறது.


சட்டப்பிரிவு 82ஏ(5) இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விருப்பத்தை வழங்குகிறது. மக்களவை தேர்தலுடன் ஒரு குறிப்பிட்ட சட்டசபை தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்ய இது அனுமதிக்கிறது.

 

மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கருதினால், குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் அதன்பிறகு சட்டப் பேரவைத் தேர்தலை சில காலத்திற்கு பின்னர்  நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று  உத்தேச சட்டப்பிரிவு 82ஏ(5) கூறுகிறது. 

 

ஒரு சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அந்த சட்டமன்றத்தின் முழு பதவிக்காலமும் பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையின் முழு பதவிக்காலத்துடன் முடிவடையும் என்று பிரிவு 82ஏ (6) கூறுகிறது. 


ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடிப்பதற்குள் ஒரு அரசாங்கம் கவிழ்ந்தால் என்ன நடக்கும்?


அரசியலமைப்பின் 83வது பிரிவான தற்போதைய விதியை மாற்றுவதன் மூலம் இந்தச் சூழ்நிலை மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 83வது பிரிவு, நாடாளுமன்றத்தின் கால அளவை (duration of Houses of Parliament) நிர்ணயிக்கிறது. மாநிலங்கவை கலைக்கப்படவில்லை; அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வு பெறுகிறார்கள். மக்களவைக்கு ஐந்தாண்டு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது முன்னதாகவே கலைக்கப்படலாம்.

 

இந்தச் சட்டத்தில் புதிய பிரிவுகளைச் சேர்க்க மசோதா முன்மொழிகிறது. மக்களவையின் முழு பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்கப்பட்டால், அடுத்த மக்களவை மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே செயல்படும் என்று இந்த மாற்றங்கள் கூறுகின்றன. இந்தக் காலம் புதிய மக்களவையின் முதல் கூட்டத்திற்குப் பிறகு கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.


மக்களவை பதவிக்காலம் முடிந்து மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் புதிய மக்களவைக்கு வரும்.  இந்த மக்களவை இருபத்தி இரண்டு மாதங்கள் மட்டுமே செயல்படும்.


மற்றொரு முன்மொழியப்பட்ட துணை விதி, இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய அவை, பழையதைத் தொடராது என்று விளக்குகிறது. அதாவது, சபையில் நிலுவையில் உள்ள எந்த மசோதாக்களும் காலாவதியாகிவிடும். சபை அதன் முழு காலத்தையும் நிறைவு செய்தாலும் இது நடக்கும்.

 

சட்டப்பிரிவு 372க்கு மாற்றங்களையும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது. இந்த சட்டப்பிரிவு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. "ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு" (‘simultaneous polls’) நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை நீட்டிப்பதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும்.

 

தற்போதுள்ள சட்டப்பிரிவு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அல்லது மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் குறித்த விதிகளை நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுகிறது. வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல், தொகுதிகளை வரையறுத்தல் மற்றும் இச்சபைகளை முறையாக அமைப்பதற்குத் தேவையான பிற விஷயங்கள் ஆகியவை இதில் அடங்கும். முன்மொழியப்பட்ட திருத்தம், "தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு" (delimitation of constituencies) பிறகு "ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துதல்" என்ற வார்த்தைகளைச் சேர்க்க பரிந்துரைத்துள்ளது. 


மாநில சட்டசபைகள், இடைத்தேர்தல்கள் பற்றி என்ன? 


சட்டப்பிரிவு 172இல் முன்மொழியப்பட்ட மாற்றங்கள், சட்டப்பிரிவு 83 இல் உள்ள மாற்றங்களைப் போலவே உள்ளன. பிரிவு 172 மாநில சட்டமன்றங்களின் காலம் பற்றி கூறுகிறது. ஒரு மாநில சட்டமன்றம் அதன் முழு பதவிக்காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டால், முந்தைய சட்டமன்றத்தின் மீதமுள்ள பதவிக்காலத்திற்கு தேர்தல் நடத்தப்படும். 


திங்களன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது மசோதா என்ன கூறுகிறது ? 


இரண்டாவது மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, (2024), யூனியன் பிரதேசங்களின் அரசுச் சட்டம் (1963), டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசுச் சட்டம் (1991), மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (2019), ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 




Original article:

Share: