எரிசக்தித் திறன் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க மாவட்ட குளிரூட்டும் அமைப்புகளை மாநிலத் திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது -சங்கீதா கந்தவேல்

 மாவட்ட குளிரூட்டும் அமைப்புகள் (District Cooling System (DCS)) தண்ணீரை திறம்பட மறுபயன்பாடு செய்வதன் மூலம் தமிழ்நாட்டின் நிலையான மேலாண்மைக்கு உதவும் என்று மாநிலத் திட்டக் குழு கூறுகிறது. மாவட்ட குளிரூட்டும் அமைப்புகளானது வெப்ப தீவு விளைவுகளை (heat island effects) கணிசமாக குறைக்கலாம். இது நிலையான குளிர்ச்சியை வழங்கலாம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறைந்த உமிழ்வை வெளிப்படுத்தலாம். 


மாநில திட்டக் குழுவின் (State Planning Commission (SPC)) பகுப்பாய்வின்படி, மின்சார கட்டமைப்புகளின் சுமையை குறைக்கவும், எரிசக்தி சேமிப்பை மேம்படுத்தவும், மாவட்ட குளிரூட்டும் அமைப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று குளிரூட்டும் தீர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


மாவட்ட குளிரூட்டும் அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பல வழிகளில் பயனளிக்கும் என்று குழுவின் அறிக்கை கூறுகிறது. மாவட்ட குளிரூட்டும் அமைப்புகள் தண்ணீரை திறம்பட மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் நிலையான முறையில் நிர்வகிக்க முடியும். இது வெப்பத் தீவு விளைவுகளையும் குறைக்கலாம் மற்றும்  சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குளிர்ச்சியை வழங்கலாம். மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேற்றும் உமிழ்வைக் குறைக்கலாம்.

 

ஒரு மாவட்ட குளிரூட்டும் அமைப்பு என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பாகும். இது நிலத்தடி காப்பிடப்பட்ட குழாய்கள் மூலம் பல கட்டிடங்களுக்கு குளிர்ந்த நீரை அனுப்புகிறது. கட்டிடங்கள் இந்த தண்ணீரை காற்றுப் பதனாக்கி (air conditioning) அல்லது தொழில்துறை குளிரூட்டலுக்கு பயன்படுத்துகின்றன.


குளிர்ச்சியானது மனிதனின் ஆறுதல், ஆரோக்கியம், தொழில்துறை செயல்முறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானது. இருப்பினும், அதிக மின்சார தேவை பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கலாம். திறமையான குளிரூட்டும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான சவாலை அவர் குறிப்பிட்டார். இந்த தொழில்நுட்பங்கள் மின் கட்டங்களின் சுமையை குறைக்க வேண்டும் மற்றும் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும். மாவட்டக் குளிரூட்டும் அமைப்பானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்ச்சித் தீர்வாகக் கருதப்படுவதாக அவர் மேலும் கூறினார். இந்த அமைப்பு பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இது வள பயன்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது ஆற்றல் நுகர்வு குறைக்கிறது மற்றும் தொடர்புடைய உமிழ்வைக் குறைக்கிறது என்று மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் கூறினார்.


“தமிழ்நாட்டில் மாவட்ட குளிரூட்டும் அமைப்புகளுக்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட குளிரூட்டும் மாதிரியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை இது மாநில அரசுக்கு வழங்குகிறது. இந்த அறிக்கை செயல்படுத்துவதற்கு உதவக்கூடிய தொடர்புடைய துறைகள் மற்றும் முகமைகளையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


கணிசமான குளிரூட்டும் அமைப்புகள் தேவைப்படும் சென்னை அல்லது கோயம்புத்தூரில் உள்ள அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் அல்லது கல்வி வளாகங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில்  பொது மாவட்ட குளிரூட்டும் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு இந்த அமைப்புகளை தொடங்கலாம். சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலை அல்லது கோயம்புத்தூரின் டைடல் பூங்கா அல்லது தூத்துக்குடி மற்றும் மதுரை போன்ற நகரங்களில் நடக்கும் புதிய வளர்ச்சிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அல்லது பெரிய வணிக வளாகங்கள் போன்ற அதிக தேவை உள்ள தனியார் ரியல் எஸ்டேட் தொகுப்புகளில் மாவட்ட குளிரூட்டும் அமைப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். 


தமிழ்நாடு மாவட்ட குளிரூட்டும் கொள்கையை ஏற்கலாம். இந்தக் கொள்கை தனியார் உருவாக்குபவர்களுக்கான தெளிவான தரநிலைகளை உருவாக்கும். இதில் கட்டண விதிமுறைகள், செயல்திறன் அளவுகோல்கள் மற்றும் ஆற்றல் திறன் இலக்குகள் ஆகியவை அடங்கும். அரசாங்கம் வரிச் சலுகைகளை வழங்கலாம் மற்றும் முதலீட்டை ஈர்க்க நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகளை எளிதாக்கலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் TamilNadu Generation & Distribution Corporation Limited (TANGEDCO)) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் போன்ற மாநகராட்சிகள் இந்த அமைப்புகளை சொந்தமாக வைத்து நிர்வகிக்கலாம். 


இது மாநிலத்திற்கு கட்டணங்களை குறைவாக வைத்திருக்கவும், பொது உள்கட்டமைப்பை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த ஆற்றல் நிர்வாகத்தில் குளிரூட்டும் முறைகளை ஒருங்கிணைக்கவும் உதவும். Tabreed, ENGIE அல்லது Danfoss போன்ற மாவட்ட குளிரூட்டும் வழங்குநர்கள் தங்கள் சேவை மாதிரியின் ஒரு பகுதியாக மாவட்ட குளிரூட்டும் அமைப்பிற்கு நேரடியாக நிதியளிக்கலாம் அல்லது இணை நிதி வழங்கலாம்.

 

இந்த திட்டங்களுக்கு மாநில வரவு செலவுத் திட்டங்கள், சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் மானியங்கள் அல்லது பசுமை உள்கட்டமைப்பு திட்டங்களை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகள் மூலம் சர்வதேச நிதியுதவி மூலம் நிதியளிக்கப்படலாம். மற்றொரு பரிந்துரை தனியார் குளிரூட்டும் வழங்குநர்களை மேற்பார்வையிடவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரிக்கும் அதே நேரத்தில் நியாயமான விலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.


சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து, பாரம்பரிய குளிரூட்டும் (air conditioning) அலகுகளுடன் ஒப்பிடும்போது எரிசக்தி விலைகளில் நிச்சயமற்ற தன்மை மாவட்ட குளிரூட்டும் அமைப்பின் பொருளாதார நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று மாநில திட்டக் குழு தெரிவித்தது. மாவட்ட குளிரூட்டும் அமைப்பை நிறுவுவதற்கான முன்செலவு அதிகமாக இருக்கலாம். பயன்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை செயல்பாடுகளை தடுக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.




Original article:

Share: