குடியரசு தினம் 2025: ஜனவரி 26 அன்று வழங்கப்படும் பல்வேறு விருதுகள் யாவை?

 குடியரசு தினம் 2025 விருதுகள்: இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு மத்திய மற்றும் மாநில காவல்துறைப் படைகளின் பணியாளர்களுக்கு 95 வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் உட்பட 942 சேவைப் பதக்கங்களை ஒன்றிய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.


குடியரசு தின விழா 2025: 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். மொத்தம் 49 பேர் இந்த விருதுகளைப் பெறுவார்கள். முன்னதாக, மத்திய மற்றும் மாநில காவல்துறையினருக்கு 942 சேவை பதக்கங்களை அரசாங்கம் அறிவித்தது. இதில் துணிச்சலான செயல்களுக்கான 95 பதக்கங்களும் அடங்கும். இந்தியாவின் 76வது குடியரசு தினத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பல்வேறு வகையான விருதுகள் என்ன? 


குடிமைச் சேவை விருதுகள்


மிகவும் பிரபலமான விருதுகள் பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் ஆகும். பத்ம விருதுகளில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவையும் அடங்கும். இவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரம் ஆகும்.


பாரத ரத்னா என்பது இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க குடிமக்களுக்கான அங்கீகாரம் ஆகும். இது கலை, இலக்கியம், அறிவியல் அல்லது பொது சேவை ஆகியவற்றில் தனித்தன்மைவாய்ந்த சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியான நபர்களை பிரதமர் பரிந்துரைக்கிறார். மேலும், ஒரு வருடத்தில் அதிகபட்சம் மூன்று நபர்களுக்கு பாரத ரத்னா வழங்க முடியும். இதுவரை 53 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.


பத்ம விபூஷண் தனித்தன்மைவாய்ந்த மற்றும் சிறப்பான சேவைக்காகவும், பத்ம பூஷண் உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காகவும், பத்மஸ்ரீ விருது எந்தவொரு துறையிலும் சிறந்த சேவைக்காகவும் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களை பத்ம விருதுகள் குழு தேர்வு செய்கிறது. அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர  எந்தவொரு துறையிலும் பணிபுரியும் எவரும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். நியமனச் செயல்முறை பொதுமக்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், மக்கள் தங்களைத் தாங்களே முன்மொழிய அனுமதிக்கிறது.


இந்த விருதுகள் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையில் உள்ள பணியாளர்களின் சிறப்பான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றன. அவை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் அறிவிக்கப்படுகின்றன.


குடியரசுத்தலைவரின் சிறப்புமிக்க சேவைக்கான பதக்கம் (President’s Medal for Distinguished Service (PSM))  சிறப்பு வாய்ந்த சாதனைக்காக வழங்கப்படுகிறது.  அதே சமயம் திறமையான சேவைக்கான பதக்கம் (Medal for Meritorious Service (MSM)) வளம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு, 101 PSMகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 85 காவல்துறையினருக்கும், ஐந்து தீயணைப்பு சேவைக்கும், ஏழு குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைக்கும், நான்கு சீர்திருத்த சேவைக்கும் வழங்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு 746 MSMகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 634 போலீஸ் சேவைக்கும், 37 தீயணைப்பு சேவைக்கும், 39 சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைக்கும், 36 சீர்திருத்த சேவைக்கும் அடங்கும்.


ஆயுதப் படைகளுக்கு, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal), அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal ) மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் (Vishisht Seva Medal) ஆகியவை மிக உயர்ந்த மரியாதை வாய்ந்தது ஆகும். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரின் தனித்தன்மைவாய்ந்த மற்றும் சிறப்புமிக்க சேவைக்கு இந்த மூன்று விருதுகளும் அளிக்கப்படுகின்றன.


கேலண்ட்ரி விருதுகள்


துணிச்சலுக்கான பதக்கங்கள் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு வீரம் மற்றும் வீரச் செயலுக்காக வழங்கப்படுகின்றன.


போர்க்கால விருதுகள்:  இந்த விருதுகள் எதிரிக்கு எதிரான போர்களில் காட்டப்படும் துணிச்சலுக்காக வழங்கப்படுகின்றன. இவை முக்கியமாக ஆயுதப்படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன. போர்க்காலத்தின் மிக உயர்ந்த துணிச்சலான விருதுகள் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா மற்றும் வீர் சக்ரா ஆகும்.


அமைதிக் கால விருதுகள்: அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா ஆகியவை அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகள்.


ஒரு அரசாங்க செய்திக்குறிப்பு இந்த விருதுகளை வேறுபடுத்துகிறது, “பரம்வீர் சக்ரா, எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலான மற்றும் சுய தியாகத்திற்கான மிகவும் வெளிப்படையான செயலுக்காக வழங்கப்படுகிறது. அதே சமயம் அசோக் சக்ரா வீரம் மற்றும் சுய தியாகம் போன்ற செயல்களுக்காக வழங்கப்படுகிறது. 


அமைதிக்கால விருதுகள் ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள், காவல்துறை அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படலாம்.


காவல் துறையின் வீரப் பதக்கங்கள்: காவல்துறை உறுப்பினர்களுக்கான விருதுகள் ஆண்டுக்கு இருமுறை அதாவது குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களின் துணிச்சல், சிறப்புமிக்க சேவை மற்றும் முன்மாதிரியான நடத்தை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்படுகின்றன.


"உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல், குற்றங்களைத் தடுப்பது அல்லது குற்றவாளிகளைக் கைது செய்தல், அவர்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பது போன்றவற்றில் தனித்தன்மைவாய்ந்த துணிச்சலும் திறமையும் கொண்ட அரிதான வெளிப்படையான துணிச்சலான செயலைச் செய்தவர்களுக்கு குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கம் வழங்கப்படுகிறது. 


துணிச்சலுக்கான காவல் பதக்கம், கடமையின் வரிசையில் துணிச்சலையும் தைரியத்தையும் அங்கீகரிக்கிறது.


உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 95 துணிச்சலான பதக்கங்களில் 17 தீயணைப்புப் படை வீரர்களுக்கும், மீதமுள்ளவை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. துணிச்சலான பதக்கங்களில், இடதுசாரி தீவிரவாதத்தால் (Left Wing Extremism (LWE)) பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவை செய்ததற்காக உள்ளூர் போலீசார் உட்பட பாதுகாப்புப் பணியாளர்களுக்கு 28 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த 28 வீரர்களும், வட கிழக்கைச் சேர்ந்த 3 பேரும், பிற பிராந்தியங்களைச் சேர்ந்த 36 வீரர்களும் வீரப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.


கடந்த ஆண்டு 1,132 சேவைப் பதக்கங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. இதில் 277 வீரத்திற்கான பதக்கங்களும் அடங்கும்.


சிவிலியன் கேலண்ட்ரி பதக்கங்கள்: இந்த விருதுகள் துணிச்சலான செயல்களுக்காகவும் உயிரைக் காப்பாற்றியதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.


ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் அசோகா விருதுகளின் ஒரு பகுதியாக உருவானது. அவை அனைத்து தரப்பு மக்களாலும் உயிர்காக்கும் செயல்களுக்காக வழங்கப்படுகின்றன. மேலும், அவை மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இந்த விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.


இந்த ஆண்டு, 17 பேருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஒன்பது பேருக்கு உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் 23 வீரர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக் வழங்கப்படும். இந்த விருதுகளில் ஆறு பேருக்கு மரணத்திற்குப் பின் விருதுகள் வழங்கப்படுகின்றன.


தேசிய துணிச்சலான விருதுகள், விதிவிலக்கான தைரியத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை அங்கீகரித்து, இந்தியக் குழந்தைகள் நலக் கவுன்சிலால் (Indian Council for Child Welfare (ICCW)) வழங்கப்படுகிறது.




Original article:

Share: