புதிய விருப்ப ஓய்வூதியத் திட்டமானது 10 ஆண்டுகள் தகுதிபெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ரூ. 10,000 நிச்சயமான ஊதியம் மற்றும் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிச் சேவைக்குப் பிறகு "முழு உறுதியளிக்கப்பட்ட ஊதியம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் UPS, 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டமானது அரசாங்கத்தின் பங்களிப்பை அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில் 18.5 சதவீதமாக முந்தைய 14 சதவீதத்திலிருந்து உயர்த்தும். அதே நேரத்தில் ஊழியரின் பங்கு 10 சதவீதமாக இருக்கும்.
UPS-ன் கீழ், ஓய்வுபெறுவதற்கு கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் என்ற விகிதத்தில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் இருக்கும். குறைந்த தகுதிச் சேவைக் காலம் இருந்தால், விகிதாசார தொகையாக இருக்கும்.
விருப்ப ஓய்வுகளுக்கு, 25 வருட சேவைக்குப் பிறகு UPS தேர்வு கிடைக்கும், மேலும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஊதியம், அவர்கள் பணியில் இருந்திருந்தால், அந்த ஊழியர் ஓய்வு பெற்ற தேதியில் இருந்து தொடங்கும்.
UPS-ன் கீழ் இரண்டு வகையான நிதிகள் உள்ளன. அவை ஒன்று, பணியாளர் பங்களிப்பு மற்றும் இணையான மத்திய அரசின் பங்களிப்புடன் ஒரு தனிப்பட்ட நிதித் தொகுப்பு. இரண்டாவது, மத்திய அரசிடமிருந்து கூடுதல் பங்களிப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நிதி ஆகும்.
யுபிஎஸ் விதிகள், யுபிஎஸ் தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெற்ற கடந்த என்பிஎஸ் ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும். இந்த ஓய்வூதியதாரர்கள் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகையை பொது வருங்கால வைப்பு நிதி விகிதங்களிலான வட்டியுடன் பெறுவார்கள்.
இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்ட நேரத்தில் விவரிக்கப்பட்ட அரசாங்க மதிப்பீடுகளின்படி, UPS அதன் முதல் ஆண்டில் சுமார் ரூ.6,250 கோடி செலவாகும் என்றும், ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகைக்காக ரூ.800 கோடி கூடுதல் செலவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு நிலையான ஓய்வூதியத்தைப் பெற்றனர். இது அவர்களின் கடைசி சம்பளத்தில் 50% ஆகும். இந்தத் திட்டத்தில் ஊழியர்கள் பங்களிக்க வேண்டியதில்லை. ஜனவரி 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த ஊழியர்களுக்குப் பொருந்தும் புதிய ஓய்வூதிய முறை (NPS), பங்களிப்புகளைக் கோருகிறது. ஆனால், ஓய்வூதியம் சந்தை செயல்திறனைப் பொறுத்ததாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?:
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இது அவர்களின் சேவையின் கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக உறுதி செய்கிறது.
ஏப்ரல் 1, 2025 முதல், அரசாங்கத்தில் 25 ஆண்டுகள் சேவை முடித்த அனைவருக்கும் UPS கிடைக்கும். பணியாளரின் இறப்புக்குப் பிறகு ஓய்வூதியத்தில் 60% இணையருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது, குறைந்தது 10 ஆண்டுகள் சேவையை முடித்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000, பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரித்து வரும் விலையைத் எதிர்கொள்ள உதவும் பணவீக்க சரிசெய்தல் மற்றும் ஓய்வு பெறும்போது ஒரு மொத்தத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி ஆகியன அதன் மற்ற முக்கிய அம்சங்கள்.