இந்தோனேசியாவுடன் இந்தியா : பண்டைய உறவுகளிலிருந்து புதிய கட்டத்திற்கு

 இரண்டு ஆசிய நாடுகளும் இப்போது தங்கள் வரலாற்று உறவை வலுப்படுத்த வேண்டும்.


குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளைக் காட்டும் சின்னங்களால் நிறைந்திருந்தது. இருப்பினும், இந்த வருகை எந்தவிதமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் பண்டைய உறவுகள் உள்ளன. இந்த உறவு வர்த்தகம், பயணம் மற்றும் ஜாவானிய இந்து மதத்தின் பரவலை அடிப்படையாகக் கொண்டவை. வேதங்கள் மற்றும் சமஸ்கிருத படைப்புகளின் பயன்பாடும் இரு நாடுகளையும் இணைத்துள்ளது. இந்தப் பகிரப்பட்ட கூறுகள் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வலுவான உறவை உருவாக்கியுள்ளன. கடந்த நூற்றாண்டில், இந்தியாவும் இந்தோனேசியாவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்தன. 

இது டச்சு காலனித்துவத்தை எதிர்த்துப் போராடிய இந்தோனேசியத் தலைவர்களை சுதந்திர இந்தியா ஆதரிக்க வழிவகுத்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு டச்சு விமானப் பயணங்களைத் தடை செய்தார். மேலும், இந்தோனேசியப் பிரதமர் மற்றும் துணை அதிபரை  வெளியேற்ற இந்திய விமானங்களை அனுப்பினார். இந்தோனேசியாவின் முதல் அதிபர்சுகர்னோ, ஜனவரி 5, 1950 அன்று தி இந்து இதழில் ஒரு கட்டுரையில் இந்தோனேசியாவின் நன்றியுணர்வைப் பற்றி எழுதினார். இந்தியாவும் இந்தோனேசியாவும் பெரும் வல்லரசு அரசியலை விரும்பாததால் ஒன்றுபட்டன. 


பண்டுங் மாநாட்டில் தொடங்கி அணிசேரா இயக்கம் (non-aligned movement (NAM)) உருவாக்கத்தை அவர்கள் ஆதரித்தனர். அவற்றின் ஒற்றுமைகளால் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன. இரண்டு நாடுகளும்  தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்திய பெரிய ஆசிய நாடுகள். இரு நாடுகளும் கணிசமான சிறுபான்மையினரிடம் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கும் பெரிய மதப் பெரும்பான்மையினரைக் கொண்டிருந்தன. தங்கள் பெரிய மக்கள்தொகைக்கு சமமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பொருளாதார சக்திகளாக இருநாடுகளும்  இருந்தன. 


சமீபத்தில், அவர்களின் உறவு பல்வேறு கவலைகளுக்கு இடையே தொடர்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய தடைகள், அமெரிக்க-சீனா போட்டி, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் "உணவு, உரம் மற்றும் எரிபொருள்" பாதுகாப்பு பற்றிய கவலைகள் ஆகியவை இதில் அடங்கும். பலதரப்பு ஒழுங்கு பலவீனமடைவது குறித்தும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர். பாலி (2022) மற்றும் டெல்லி (2023) ஆகிய இடங்களில் நடைபெற்ற G-20 உச்சிமாநாட்டில் அவர்களின் கூட்டு முயற்சிகள் இப்போது மேலும் பயன்படுத்தப்படும். இந்தோனேசியா BRICS-ல் இணைந்துள்ளது. இது அவர்களின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கிறது. இந்த வகையில், இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டில் சுபியாண்டோவின் வருகை, பண்டுங்கிலிருந்து விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் வரை ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்கிறது.


இருதரப்பு உறவுகளின் வரலாற்று, ராஜதந்திர மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அறிவிப்புகள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாகவே உள்ளன. சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இருப்பினும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை, சபாங் துறைமுகத் திட்டம் அல்லது ஆச்சே-அந்தமான்ஸ் இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட முன்னேற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 


சமீபத்திய, புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகம் மற்றும் சீனாவுடன் பேசுவதற்கான முயற்சிகள் குறித்து அவர்கள் ஒத்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலும், கூட்டு அறிக்கை அவர்களின் உலகக் கண்ணோட்டம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்தியாவின் குடியரசு தின அழைப்பு மற்றும் சுபியாண்டோவின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் வருகை ஆகியவை இரு நாடுகளுக்கும் முக்கியமான செய்தியாக இருந்தன. இரண்டு ஆசிய சக்திகளும் இப்போது அடுத்த கட்டத்தில் தங்கள் உறவை வலுப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.




Original article:

Share: