தேசிய வாக்காளர் பட்டியலை திருத்துதல் மற்றும் சரிபார்த்தல் (National Electoral Rolls Purification and Authentication (NERPAP)) திட்டம் தேர்தல் ஆணையத்தால் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்களுடன் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை (Election photo identity card (EPIC)) எவ்வாறு இணைக்கிறார்கள்? 2018 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது ?
முன்மொழிவின் வரலாறு என்ன?
பிப்ரவரி 2015 ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் பட்டியலை திருத்துதல் மற்றும் சரிபார்த்தல் திட்டத்தை (NERPAP) தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வாக்காளர் பட்டியலில் உள்ள போலியான பதிவுகளின் (duplicate entries) சிக்கலைத் தீர்த்து அவற்றை நீக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது. இதை அடைய, தேர்தல் ஆணையம் ஆதார் தரவுத்தளத்துடன் இணைப்பதன் மூலம் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை தரவை அங்கீகரிக்கத் தொடங்கியது.
மூன்று மாதங்களில், 300 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் இணைத்தது. இருப்பினும், ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. நலத்திட்டங்கள் மற்றும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) இணைப்புக்கு மட்டுமே ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் பட்டியலை திருத்துதல் மற்றும் சரிபார்த்தல் திட்டத்தின் பயிற்சி நிறுத்தப்பட்டது.
செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் ஆதார் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு பிறகு, தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், (Representation of the People Act, 1950) 1950 இல் மாற்றங்களைக் கோரியது. டிசம்பர் 2021-ல், நாடாளுமன்றம் 1950ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுச் சட்டம் மற்றும் 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளை (Registration of Electors Rules) மாற்றியது. இதனால் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க முடிந்தது.
திருத்தங்கள் ஆதார் தகவலைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு வடிவத்தை வழங்கின. புதிய வாக்காளர்கள் பதிவின் போது தங்கள் அடையாளத்தை நிறுவ படிவம் 6யை (Form 6: to establish identity) பயன்படுத்தலாம். ஏற்கனவே, உள்ள வாக்காளர்கள் அங்கீகாரத்திற்காக படிவம் 6Bயை (Form 6B: for the purpose of authentication) பயன்படுத்தலாம். ஒரு வாக்காளருக்கு ஆதார் எண் இல்லையென்றால், அவர்கள் மற்றொரு பட்டியலிடப்பட்ட ஆவணத்தைச் சமர்ப்பிக்கலாம். மாற்றங்களைத் தன்னார்வமாக வைத்திருக்க, “மே” (may) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாரும் சேர்க்க மறுக்கப்பட மாட்டார்கள் என்றும், சரியான காரணங்களால் அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை வழங்க முடியாவிட்டால் எந்தப் பதிவுகளும் நீக்கப்படாது என்றும் இந்தத் திருத்தம் கூறுகிறது.
இந்த நபர்கள் நிரந்தர கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வங்கி கணக்கு புத்தகம் போன்ற பிற ஆவணங்களை வழங்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டன. செப்டம்பர் 2023ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நோக்கத்திற்காக படிவங்களில் தெளிவுபடுத்தும் மாற்றங்களைச் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. இருப்பினும், படிவம் 6 மற்றும் 6B இன்னும் மாற்றப்படவில்லை. மேலும், அவர்கள் இன்னும் விண்ணப்பதாரர்களிடமிருந்து அதே விவரங்களைக் கேட்கிறார்கள்.
வாக்காளர்கள் ஆதார் எண் வழங்குவதைத் தடுக்க, தங்களிடம் ஆதார் எண் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு படிவங்கள் கோருகின்றன.
நன்மை தீமைகள் என்ன?
தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை (Election photo identity card (EPIC)) ஆதார் எண்களுடன் இணைப்பது போலியான உள்ளீடுகளை அகற்ற உதவும். தற்போது, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் போது 650 மில்லியனுக்கும் அதிகமான ஆதார் எண்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செயல்முறையில் சில சிக்கல்கள் உள்ளன.
முதலாவதாக, ஆதார் தரவுத்தளத்தில் உள்ள சிறிய பிழைகள் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து உள்ளீடுகளை தவறாக நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ வழிவகுக்கும். இரண்டாவதாக, ஆதார் குடியுரிமைக்கான சான்று அல்ல, வசிப்பிடத்திற்கான சான்றாகும் (Aadhaar is only a proof of residence and not a proof of citizenship). எனவே, அது குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உதவாது. அதற்காக தேர்தல் ஆணையம் தனி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைசியாக, ஆதார் எண் திரைக்குப் பின்னால் மட்டுமே இணைக்கப்படும். மேலும், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Election photo identity card (EPIC)) அல்லது வாக்காளர் பட்டியலில் அதைக் குறிப்பிடுவது தனியுரிமை உரிமைகளை மீறாது என்றாலும், வாக்காளர் பட்டியல்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளுடன் பகிரப்படுவதால் அது இன்னும் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்கும்?
வாக்களிக்கும் உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் (constitutional right) கீழ் வரும் உரிமை என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அறிவித்துள்ளது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும், சட்டங்களால் அதை குறைக்க முடியாது. குடிமக்கள் ஒரு ஜனநாயகத்தில் மிக முக்கியமானவர்கள். மேலும், எந்தவொரு தேர்தல் செயல்முறையும் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். தேர்தல் செயல்முறையை வலுப்படுத்த உதவும் வாக்காளர் பட்டியலில் இருந்து போலியான உள்ளீடுகளை அகற்ற தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Election photo identity card (EPIC)) மற்றும் ஆதாரை இணைப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த இணைப்பால் தங்கள் வாக்களிப்பின் ரகசியம் பாதிக்கப்படுவது குறித்து வாக்காளர்களிடையே உள்ள கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.
மேலும், செப்டம்பர் 2023 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது போல், ஆதார் வழங்குவது கட்டாயமில்லை என்பதைக் காட்ட படிவங்களை விரைவாகப் புதுப்பிக்க வேண்டும்.
ரங்கராஜன் ஆர்.முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, “Polity Simplified” என்ற புத்தகத்தின் ஆசிரியர்.