சாதகமான கொள்கைகள், வலுவான புதுமை கலாச்சாரம் மற்றும் துறைகள் முழுவதும் உள்ள கூட்டு முயற்சிகள் ஆகியவை புத்தொழில்களை (startups) உலகளாவிய வணிகங்களாக வளர்ப்பதற்கான அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன.
இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு (startup ecosystem) மையமானது அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது மிகவும் ஆரம்ப கட்டத்திலிருந்து புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான உலகின் மூன்றாவது பெரிய மையமாக மாறியுள்ளது. இன்று, 1,30,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்கள் உள்ளன. இது 2015-16ஆம் ஆண்டில் சுமார் 400 ஆக இருந்தது. இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில், புத்தொழில்களுக்கு நிதி 15 மடங்கு வளர்ந்தது. முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகரித்தது. மேலும், இன்குபேட்டர்களின் (incubators) எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்தது. இந்த மாற்றம் பெரும்பாலும் இந்தியாவின் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பால் ஏற்படுகிறது. இந்த உள்கட்டமைப்பு நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், நிதி உள்ளடக்கத்தை வளர்ப்பது மற்றும் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் போன்ற முக்கிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உதவியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI), இயந்திர கற்றல் (machine learning (ML)), பெரிய தரவு, ஆற்றல் மாற்றம், மின்சார வாகனங்கள் (electric vehicles (EV)), குவாண்டம் கம்ப்யூட்டிங் (quantum computing), மரபணுவியல், 3D அச்சிடுதல், ரோபோட்டிக்ஸ், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் மகத்தான வாய்ப்புகளை வழங்கி, தொழில்நுட்ப புரட்சியின் நுழைவாயிலில் இந்தியா நிற்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு (research and development (R&D)) ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்குவதோடு, தேசிய குவாண்டம் திட்டம் (National Quantum Mission), இந்தியா AI திட்டம் (India AI Mission) மற்றும் செமிகண்டக்டர் திட்டம் (Semiconductor Mission) போன்ற முயற்சிகள் மூலம் இந்த முன்னேற்றத்தை அரசாங்கம் தீவிரமாக வளர்த்துள்ளது.
முற்போக்கான கொள்கைகள் புதிய துறைகளைத் திறந்துவிட்டன. இவற்றில் விண்வெளி, புவிசார் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் ட்ரோன்கள் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் தொடக்க நிறுவனங்கள் அதிநவீன துறைகளை ஆராய ஊக்குவித்தன. இந்த முன்னேற்றங்களின் முழுத் திறனையும் திறக்க, ஒத்துழைப்பு தேவை. கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்திய தொடக்க நிறுவனங்கள், குறிப்பாக ஆழமான தொழில்நுட்பத் துறைகளில் (deep tech sectors), சவால்களை எதிர்கொள்கின்றன. அவை, சாதகமற்ற மூலதனத்தை (patient capital) அணுக போராடுகின்றன. புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதிகளின் நிதி (Fund of Funds for Startups (FFS)) 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது ஒரு திருப்பு முனையாக உள்ளது. 151 மாற்று முதலீட்டு நிதிகள் (Alternative Investment Funds(AIF)) மூலம் ரூ.11,688 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இது ரூ.81,000 கோடி மூலதன தொகுப்பை உருவாக்கியுள்ளது. இது குறிப்பிடத்தக்க பல்பெருக்கு செயற்திறன் விளைவை (multiplier effect) உருவாக்கியுள்ளது.
இருப்பினும், ஆழமான தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவிற்கு ஒரு சிறப்பு நிதிகளின் நிதி தேவை. இந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால முதலீடுகளும் தேவை. உள்நாட்டு மூலதன ஆதாரங்களை அதிகரிப்பதும் அவசியம். 2024-ம் ஆண்டில், இந்திய புத்தொழில் நிறுவனங்கள் $12 பில்லியனுக்கும் அதிகமாக திரட்டின. இருப்பினும், இந்த நிதியில் சுமார் 75 சதவீதம் சர்வதேச மூலங்களிலிருந்து வந்தது. காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் போன்ற பெரிய உள்நாட்டு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்க தங்கள் கூடுதல் நிதியில் சிலவற்றை ஒதுக்கலாம். குடும்ப அலுவலகங்கள் மற்றும் வணிகங்களும் ஏஞ்சல் முதலீட்டாளர்களாக (angel investors) மிகவும் சுறுசுறுப்பான பங்கை வகிக்க வேண்டும்.
இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பை (startup ecosystem) வடிவமைப்பதில் தனியார் பங்கு (Private equity (PE)) மற்றும் துணிகர மூலதனம் (venture capital (VC)) குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இந்த ஆதாரங்களில் இருந்து நிதி 2015-ல் $19.7 பில்லியனில் இருந்து 2021-ல் $77.07 பில்லியனாக வளர்ந்தது. 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில், இது $49.54 பில்லியனை எட்டியது. இந்தியாவின் யூனிகார்ன் (unicorns) நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை PE மற்றும் VC முதலீடுகளால் ஆதரிக்கப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகளின் நிலைத்தன்மையை (sustainability) உறுதி செய்ய, உள்நாட்டு நிதிகள் வளர வேண்டும் மற்றும் நீண்ட கால மதிப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். லாபம், அளவை விட தரம் மற்றும் மிகவும் வலுவான வணிக மாதிரிகளை நோக்கிய மாற்றம் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிலையான வளர்ச்சியை அடைய உதவும்.
புத்தொழில் இந்தியாவை (Startup India) வடிவமைப்பதில், அதிகப்படியான விதிமுறைகளைத் தவிர்ப்பதில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருகிறது. அதிகப்படியான விதிகள் மூலம் புத்தொழில் நிறுவனங்களைத் தடுக்கக்கூடும். இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு குறைந்தபட்ச ஒழுங்குமுறை குறுக்கீடுகளுடன் செழித்து வளர்கிறது, இது புதுமைகளை வளர்க்கிறது. இருப்பினும், பைஜூஸ் (Byju’s), டன்சோ (Dunzo) மற்றும் பாரத்பே (BharatPe) போன்ற புத்தொழில் நிறுவனங்களில் சமீபத்தில் நடந்த பெறுநிறுவன தவறான மேலாண்மை சம்பவங்கள் கவலைகளை எழுப்பியுள்ளன.
புத்தொழில் நிறுவனங்கள் சுய ஒழுங்குமுறை கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த கட்டமைப்புகள் பொறுப்புத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு வலுவான வழிகாட்டுதல், தொழில்முறை வாரியங்கள் மற்றும் நல்ல நிதி மேலாண்மை தேவை. துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவை நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும், நீண்டகால நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்த புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்கும் உதவுகின்றன.
IITs, IIMs மற்றும் IIITs உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை திறமையான நிபுணர்களை உருவாக்குகின்றன மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கின்றன. புதிய கோரிக்கைகளை பூர்த்தி செய்ய, தயாரிப்பு மேம்பாடு, தரவு அறிவியல் மற்றும் AI-ML போன்ற துறைகளில் திறன் பற்றாக்குறையை பாடத்திட்டங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.
கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம். இது கல்வித் திட்டங்கள் உலகச் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய உதவுகிறது. பயிற்சி, திறன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கு திறமைகளை ஈர்க்கும். இந்தத் திட்டங்கள் திறன் இடைவெளிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
புதிய தொழில்நுட்பங்கள் தொழில்களை சீர்குலைக்கின்றன. ஒழுங்குமுறை நிறுவனங்கள் இந்த மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு மேற்பார்வையுடன் புதுமைகளை சமநிலைப்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்தப்படாத வளர்ச்சியின் அபாயங்களை நிர்வகிக்கும் அதே வேளையில் புத்தொழில் நிறுவனங்கள் வளர இது உதவ வேண்டும். இந்தியாவின் போட்டித்தன்மையை நிலைப்படுத்த புதுமையான ஆதரவு கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 24,000 PhD பட்டதாரிகளை உருவாக்குகிறது. இது அறிவியல் மற்றும் பொறியியலில் முன்னேற்றங்களுக்கு பங்களிக்கிறது. இருப்பினும், 2024-ம் ஆண்டில், நாடு $14.3 பில்லியன் ஐபிஆர் ராயல்டிகளை (IPR royalties) செலுத்தியது. அதே நேரத்தில் $1.5 பில்லியன் மட்டுமே சம்பாதித்தது.
இது ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியைக் காட்டுகிறது. இந்த இடைவெளியை குறைப்பதற்கும், அதிக புதுமை மற்றும் முன்னேற்றங்கள் தேவை. அறிவுசார் சொத்துரிமைக்கு வெகுமதி அளித்து பாதுகாக்கும் ஒரு வலுவான சூழல் அமைப்பை உருவாக்குவது, இந்தியாவை புதுமைக்கான உலகளாவிய மையமாக மாற்ற உதவும். புத்தொழில் நிறுவனங்கள் இந்த முயற்சியை வழிநடத்தி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்கள் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு அப்பால் விரிவடைந்து வருகின்றன. நாட்டின் தொடக்க நிறுவனங்களில் சுமார் 50% இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் போன்ற சிறிய நகரங்களிலிருந்து வருகின்றன. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இந்த நகரங்களில் வசிப்பதால், அவை சிறந்த வளர்ச்சித் திறனை வழங்குகின்றன.
சண்டிகர், விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகின்றன. இந்தப் பகுதிகளில் திறமையை வெளிப்படுத்த, குறிப்பாக இந்தப் பகுதிகளில் பெண்களின் தலைமையை அதிகரிப்பதன் மூலம், சிறந்த உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் உள்ளடக்கத்தை வழங்குவது முக்கியம். இது புதுமைகளை ஊக்குவிக்க உதவும்.
உலகின் சிறந்த புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறுவதற்கு இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இது சாதகமான கொள்கைகள், புதுமைக்கான செழிப்பான கலாச்சாரம் மற்றும் துறைகள் முழுவதும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இந்த காரணிகள் புத்தொழில்களை உலகளாவிய நிறுவனங்களாக அளவிடுவதற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) தொலைநோக்குப் பார்வையை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டை புதுமையில் முன்னணியில் மாற்றுவதிலும் புத்தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
காந்த், இந்தியாவின் G20 ஷெர்பா மற்றும் NITI ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.