முக்கிய அம்சங்கள்:
இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தின் தலைவரான திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேலின் பெயரிடப்பட்ட திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழக மசோதா, 2025. கூட்டுறவுத் துறையில் பயிற்சி அளிக்க குஜராத்தில் உள்ள ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் (Institute of Rural Management Anand (IRMA) ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதா கிராமப்புற பொருளாதாரம் வளரவும் கூட்டுறவுத் துறைக்கு புதிய தலைமையைக் கொண்டுவரவும் உதவும் என்று ஷா கூறினார். பயிற்சி பெற்ற நிபுணர்கள் தேவை என்றும், இந்தப் பல்கலைக்கழகம் அவர்களை வழங்கும் என்றும் அவர் விளக்கினார். திறமையான தொழிலாளர்களுக்குப் பதிலாக மக்கள் தங்கள் சொந்த உறவினர்களையோ அல்லது அறிமுகமானவர்களையோ வேலைக்கு அமர்த்தியதால் கூட்டுறவுகள் பலவீனமடைந்தன என்று அவர் சுட்டிக்காட்டினார். கூட்டுறவுத் துறையில் சிறப்புப் பட்டங்கள் இல்லாததால், தெளிவான தரநிலைகள் இல்லை.
இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் மூலம், தொடர்புடைய பட்டயங்கள் மற்றும் பட்டங்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தத் துறையில் வேலை கிடைக்கும். தற்போது, நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் கூட்டுறவுகள் குறித்த பொதுவான படிப்புகள் எதுவும் இல்லை. இந்தப் பல்கலைக்கழகம் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கும், மேலும் இந்தத் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?:
திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் மகாத்மா காந்தியைப் பின்பற்றினார். மேலும், இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1946ஆம் ஆண்டு கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைத் தொடங்க உதவினார் மற்றும் ஆனந்த் கூட்டுறவு இயக்கத்தை வழிநடத்தினார்.
நவம்பர் 26, 1921ஆம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்த டாக்டர் வர்கீஸ் குரியன், 1940ஆம் ஆண்டில் இயற்பியலிலும், இயந்திரப் பொறியியலிலும் பட்டம் பெற்றார். பின்பு 1943ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பொறியாளராக சேர எண்ணினார்.
மே 1949ஆம் ஆண்டில், குரியன் குஜராத்தின் ஆனந்தில் உள்ள ஒரு அரசு கிரீமி தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அங்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன் அங்கு இருந்து பிறகு வெளியேற திட்டமிட்டார். வேலை செய்யும் போது, கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான திரிபுவந்தாஸ் படேலுடன் நட்பு கொண்டார். 1945-46 ஆண்டு முதல், பால் சேகரிப்பைக் கட்டுப்படுத்தி விவசாயிகளைச் சுரண்டிய போல்சன் நிறுவனத்திற்கு எதிராகப் போராட பால் விவசாயிகள் ஒன்றுபட படேல் உதவி செய்து வந்தார்.
படேலின் வேண்டுகோளின் பேரில், குரியன் கூட்டுறவு இயந்திரங்களை நிர்வகிக்க ஒரு பொறியாளராகத் தொடங்கினார். காலப்போக்கில், அவர் அதன் அன்றாட வேலைகளிலும் விவசாயிகளுடனும் ஈடுபட்டார். இறுதியில், அவர் பொது மேலாளரானார்.
குரியனின் தலைமையின் கீழ், கூட்டுறவு வளர்ந்து பால் பொருட்களை பதப்படுத்தவும் சேமிக்கவும் புதிய உபகரணங்களைப் பெற்றது. இது முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரை நம்பியிருந்த பகுதிகளுக்கு பால் வழங்க உதவியது. மிக முக்கியமாக, இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி தொடர்பை உருவாக்கியது.
இந்தக் கூட்டுறவு நிறுவனம் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் (Anand Milk Union Limited (Amul)) எனப் பெயர் மாற்றப்பட்டு, அதன் தயாரிப்புகளை அமுல் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யத் தொடங்கியது. இந்தப் பால் கூட்டுறவு மாதிரி மிகவும் வெற்றிகரமாக மாறியது. மேலும், பலர் இதை ஏற்றுக்கொண்டனர். ஆனந்திடமிருந்து பால் பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்வதற்காக பம்பாயில் ஆரே மில்க் காலனியை அமைத்த தாரா குரோடியுடன் சேர்ந்து, குரியன் மற்றும் படேல் 1963ஆம் ஆண்டு சமூகத் தலைமைத்துவத்திற்கான ரமோன் மகசேசே விருதைப் பெற்றார்.