2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, 12% ஆண்டு வளர்ச்சி விகிதம் தேவை : கணக்கெடுப்பு -திவ்யா சந்திரபாபு

 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 14-ம் தேதி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது கடைசி முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது.


2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 8% வளர்ச்சி விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற திமுக அரசு இலக்கு வைத்துள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வின்படி, இந்த இலக்கை அடைய மாநிலம் 12% ஆண்டு வளர்ச்சி விகிதத்தைத் தக்கவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


"தமிழ்நாடு உள்ளடக்கிய கொள்கைகளின் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம், குறிப்பிடத்தக்க பொருளாதார மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. 2021-22 முதல் தொடர்ந்து 8% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சி விகிதங்களை எட்டியுள்ளது" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 2024-25ஆம் ஆண்டில் மாநிலம் 8%-க்கும் மேல் வளர்ச்சி விகிதத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக, மாநிலத்தின் பொருளாதாரம் உலகளாவிய சந்தை போக்குகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி முறையுடன் ஒப்பிடும்போது உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் இது அதிகம் பாதிக்கப்படுகிறது.


2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 14-ம் தேதி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது கடைசி முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. “வழக்கமாக பட்ஜெட் மாநிலத்தின் வளர்ச்சிக்கான அனைத்து புதிய திட்டங்களையும் அறிவிக்கும். மேலும், மக்களின் பொருளாதாரத்தின் நிலை, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாநிலம் கவனம் செலுத்த வேண்டிய சாத்தியக்கூறுகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் இதுவே முன்னோடியாகும்” என மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறினார். "இது மக்களால் பொருளாதாரம் பற்றிய தகவலறிந்த விவாதத்திற்கு வழிகாட்டியாக இருக்கும்," என்றும், உலகளாவிய நிகழ்வுகளின் கணிக்க முடியாத தன்மை ஒரு பெரிய சவாலாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


உலகப் பொருளாதாரம் 2023-ம் ஆண்டில் 3.33% உண்மையான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது மற்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2022-23-ல் 7.61%, 2023-24ஆம் ஆண்டில் 9.19% மற்றும் 2024-25-ல் 6.48% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2022-23ல், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹2.78 லட்சமாக இருந்தது, இது தேசிய சராசரியான ₹1.69 லட்சத்தை விட அதாவது, 1.6 மடங்கு அதிகமாகும். இது பல ஆண்டுகளாக தேசிய சராசரியை விட தொடர்ந்து முன்னேறி வருகிறது" என்று அறிக்கை கூறியது. இதன் மூலம் தனிநபர் வருமானத்தில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைப் போலல்லாமல், ஒரு பெருநகர மையத்தைச் சுற்றி பொருளாதார நடவடிக்கைகள் குவிந்துள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பல நகர்ப்புற மையங்களில் சமமாக விநியோகிக்கப்படுகிறது என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. முதலீடுகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாண்டி கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு நகர்ப்புற-கிராமப் பிரிவினையைக் (urban-rural divide) குறைக்க உதவுகின்றன.


இருப்பினும், ஒரு டிரில்லியன் இலக்கை அடைய, தமிழ்நாடு கிராமப்புற தொழில்முனைவோரை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கணக்கெடுப்பு கூறியது. இது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரப்ப உதவும். மாநிலம் அதன் மக்கள்தொகைக்கான நன்மையைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பதன் மூலமும், பெண்கள் பணியிடத்தில் சேர ஊக்குவிப்பதன் மூலமும், அதிக மதிப்புள்ள உற்பத்தி மற்றும் சேவைகளை ஊக்குவிப்பதன் மூலமும் இதைச் செய்ய முடியும். எல்லைப்புற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதையும் அது பரிந்துரைத்துள்ளது.


"தமிழ்நாடு ஏற்கனவே இந்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது என்பது ஊக்கமளிக்கிறது. குறைக்கடத்தி (semiconductor) மற்றும் மேம்பட்ட மின்னணுத் தொழிற்துறைக்கான (advanced electronics industry) கொள்கைகளை மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கைகள் வணிகரீதியிலான நட்பு சூழலை உருவாக்க உதவுகின்றன. இதன் விளைவாக, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகள் விரிவடைந்து வருகின்றன."


2023-24ஆம் ஆண்டில், 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 8-வது மிகக் குறைந்த சில்லறை பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது. தமிழ்நாட்டில் நகர்ப்புற பணவீக்கம் 2019-20ஆம் ஆண்டில் 6% ஆக இருந்து 2024-25ஆம் ஆண்டில் (ஜனவரி 2025 வரை) 4.5% ஆகக் குறைந்துள்ளது.  கிராமப்புற பணவீக்கம் 5.4% ஆக இருந்தது. “நிலத்தடி நீர் குறைவு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை தமிழ்நாடு எதிர்கொண்டால் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைய முடியும்” என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


2024-ம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு, ₹6.64 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்தது. இந்த முதலீடுகள் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தனது பணியாளர்களை மறுதிறன் மூலம் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கணக்கெடுப்பு கூறியுள்ளது. இது தொழிலாளர்கள் தொழில் 4.0 தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்கும்.


வங்கி நெட்வொர்க்குகளில் தமிழ்நாடு 24,390 ATM-களுடன் நாட்டிலேயே முன்னிலை வகிக்கிறது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத் துறை (service sector in Tamil Nadu) வலுவாக மீண்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்புற பணியாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் பணியாற்றினர். இது தேசிய சராசரியான 58.07%-க்கு நெருக்கமாக உள்ளது. அவர்களில், 16.28% பேர் வர்த்தகம் மற்றும் மோட்டார் வாகன பழுதுபார்ப்பில் பணியாற்றினர். 7.53% பேர் போக்குவரத்து மற்றும் சேமிப்புத் துறைகளில் பணிபுரிந்தனர். 6.28% பேர் தகவல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரிந்தனர். 5% பேர் கல்வித் துறையிலும், 4.86% பேர் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளிலும் பணிபுரிந்தனர். 2.84% பேர் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளிலும் பணிபுரிந்தனர். 11.84% பேர் பிற சேவைகளிலும் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு அரசு அதன் சமூகத் துறை செலவினங்களை அதிகரித்து வருகிறது. 2019-20ஆம் ஆண்டில், இது ₹79,859 கோடியாக இருந்தது. 2023-24 வாக்கில், இது ₹1.16 லட்சம் கோடியை எட்டியது. இதன், முக்கிய முயற்சிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமும் அடங்கும். இந்தத் திட்டம் பள்ளி வருகை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களுக்கான திட்டங்களையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஒரு திட்டம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ₹1,000 ரொக்கமாக வழங்குகிறது. மற்றொன்று அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறது போன்ற முயற்சிகளும் அடங்கும்.


2023-24ஆம் ஆண்டில், சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினத்தில் தமிழ்நாடு முக்கிய மாநிலங்களில் 4-வது இடத்தைப் பிடித்தது. இந்த தரவரிசை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள் இரண்டிற்கும் பொருந்தும். அதேபோல், ஆண்டு தனிநபர் வருமானத்திலும் மாநிலம் 4-வது இடத்தைப் பிடித்தது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அடிக்கடி இயற்கைப் பேரிடர்களை, முக்கியமாக வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இதனால், காலநிலை மாற்ற சவால்களைச் சமாளிப்பதில் கவனம் செலுத்துமாறு ஆணையம் மாநிலத்திற்கு முதன்மையாக அறிவுறுத்தியது.



Original article:

Share: