பாலின இடைவெளியைக் குறைத்தல் -சங்கீதா கொரானா, நிதி பாசின், பத்ரி நாராயணன் கோபாலகிருஷ்ணன்

 நிலம் மற்றும் சொத்து தொடர்பானவற்றைகளுக்கு சமமற்ற அணுகல் இருப்பது, ஒரு பெரிய தடையாக உள்ளது.


பாலின சமத்துவம் சமூகத்திற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உந்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பெரும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இருப்பினும், பாலின சமத்துவத்தை நோக்கிய அதன் பயணம் முன்னேற்றத்தையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. பாலின சமத்துவமின்மை குறியீடு (Gender Inequality Index (GII)) 191 நாடுகளில் இந்தியாவை 122வது இடத்தில் வைத்திருக்கிறது. உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு (Global Gender Gap Index (GGGI)) இந்தியாவை 146 நாடுகளில் 135வது இடத்தில் தரவரிசைப்படுத்துகிறது.


பாலின இடைவெளியைக் குறைக்க குறிப்பிடத்தக்க வேலையின் அவசியத்தை இவை எடுத்துக்காட்டுகின்றன.


மோடி 3.0-ன் முதல் 100 நாட்களில் அரசாங்கம் முன்முயற்சிகளைத் தொடங்கியது. இந்த முயற்சிகள், கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. 2024 பட்ஜெட்டில் நாரி சக்தி முயற்சிகளுக்கு (Nari Shakti initiatives) ₹3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த முயற்சிகள் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பகுதிகளை குறிவைக்கின்றன.


இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்களிப்பு (female labor force participation) அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில், பெண் பங்கேற்பு 32.7 சதவீதமாகவும், ஆண் பங்கேற்பு 76.8 சதவீதமாகவும் இருந்தது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குறைவாக சமூகப் பாதுகாப்பு உள்ள முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர்.


நில உரிமை (Land ownership)


நிலம் மற்றும் சொத்துக்களுக்கான சமத்துவமின்மையானது இந்தியாவில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. ஏறக்குறைய 66 சதவீத பெண்களுக்கு தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட எந்த நிலத்தின் உரிமையும் இல்லை. நிலம் பெரும்பாலும் கடன்களுக்கு பிணையமாகப் பயன்படுத்தப்படுகிறது. சொந்தமாக நிலம் இல்லாததால், பெண்கள் கடன் பெற சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தொழில் தொடங்குவது கடினம்.


நில உரிமை என்பது பொருளாதார சக்தியைவிட அதிகமாக பாதிக்கிறது. வளங்கள் மீது பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு இருக்கும்போது, ​​அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் சமூகத்தில் முன்னேற உதவுகிறது. இது பெண்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலையும் மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. நில உரிமையில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பது பாலின அதிகாரமளிப்புக்கு முக்கியமானது.


பல காரணங்களால் நிலைமை சிக்கலானது. பல இளைஞர்கள் வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வியைப் பெறுவதில்லை. சமூக விதிமுறைகள் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை அணுகுவதை கடினமாக்குகின்றன. கிராமப்புறங்களில், இளமைப் பருவ திருமணங்கள் (early marriages) பொதுவானவை. இதன் விளைவாக, இந்தியாவில் இளம் பருவ கர்ப்பங்களின் விகிதம் அதிகமாக உள்ளது. 2022-ம் ஆண்டில், 15-19 வயதுடைய ஒவ்வொரு 1,000 பெண்களில் 16 பேர் பிரசவிக்கின்றனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் (maternal mortality ratio (MMR)) 1,00,000 நேரடி பிறப்புகளுக்கு 103 இறப்புகள் ஆகும். மகப்பேறு சுகாதாரப் பராமரிப்பில் அதிக முதலீடு தேவை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது. கிராமப்புறங்களில், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஸ்டாண்ட்-அப் இந்தியா (Stand-Up India) மற்றும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana (PMMY)) ஆகியவை பெண்கள் தொழில்களைத் தொடங்கவும் நிதி உதவி பெறவும் உதவுகின்றன. பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் (Beti Bachao Beti Padhao programme) பாலின-தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளைத் தடுக்கவும் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் மாவட்ட பணிக்குழுக்கள் மற்றும் தொகுதி பணிக்குழுக்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் கிராமப்புறங்களை மிகவும் திறம்பட அடைய உதவுகின்றன.


மகிளா சக்தி கேந்திரா முன்முயற்சியானது (Mahila Shakti Kendra initiative) சமூகம் சார்ந்த தலையீடுகள் மூலம் பெண்களுக்கு தகவல், வளங்கள் மற்றும் அரசாங்க திட்டங்களை அணுகுவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க உதவுகிறது. உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான அரசியல் இடஒதுக்கீடு முடிவெடுக்கும் செயல்முறைகளில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க நகர்வை பிரதிபலிக்கிறது.


அரசால் சரியாக அங்கீகரிக்கப்பட்டபடி, பெண் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வது முக்கியமானது. நீண்டகால சமூக விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பாலின உணர்திறன் கல்வி தேவை. பெண்கள் மற்றும் சிறுமிகளை மதிக்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க இது முக்கியம். இது நிகழும்போது, ​​இந்தியா அதன் முழுத் திறனை அடைய முடியும். மேலும், யாரும் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்ய முடியும்.


சங்கீதா கொரானா (Khorana) WTO பாலின மையத்தின் உறுப்பினராகவும், பாசின் டெல்லி பொருளாதாரப் பள்ளியின் வர்த்தகத் துறையின் பேராசிரியராகவும் (சர்வதேச வணிகம்), மற்றும் கோபாலகிருஷ்ணன் இந்திய அரசாங்கத்தின் NITI ஆயோக்கின் குடியுரிமை அல்லாத உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share: