ஒன்றிய அரசு, மாநிலங்கள் உட்பட பங்குதாரர்களுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டி, கோதுமை உற்பத்தி குறித்த பொதுவான மதிப்பீட்டை வெளியிட வேண்டும்.
சமீபத்திய ஆண்டுகளில், கோதுமை உற்பத்திக்கான மதிப்பீடுகள் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இது முக்கியமாக, கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியதாலும், கோதுமை விளைச்சலில் அதன் தாக்கத்தாலும் இவை அதிகரித்துள்ளன. வேளாண் அமைச்சகம் சமீபத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகளை வெளியிட்டது. ஆனால், வர்த்தகர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் அவற்றைக் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது, அதிக வெப்பநிலை கோதுமை உற்பத்தியை மீண்டும் பாதித்ததற்கான தெளிவான சான்றுகள் இல்லை. இருப்பினும், எந்தவொரு நிச்சயமற்ற தன்மையும் ஊகங்கள் (speculation), கையிருப்பு (stock accumulation) மற்றும் விலை உயர்வுக்கு (price rise) வழிவகுக்கும்.
கோதுமை உற்பத்தி மதிப்பீட்டை 115 மில்லியன் டன் (mt) என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய ரோலர் மாவு ஆலைகள் கூட்டமைப்பு (Roller Flour Millers Federation) செய்த 110 மெட்ரிக் டன் மதிப்பீட்டைவிட அதிகமாகும். வர்த்தகத்தில் உள்ள சிலர் இந்த இரண்டு மதிப்பீட்டையும் ஏற்கவில்லை. அவர்களின் சொந்த கணிப்பு 104-106 மெட்ரிக் டன் ஆகும். கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டின் 113.29 மெட்ரிக் டன்களைவிட அதிகமாக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர, பெரும்பாலான வளரும் மாநிலங்களில் பயிர் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 நவம்பரில் காரீப் பயிர் மதிப்பீட்டை (kharif crop estimate) ஒன்றிய அரசு வெளியிட்டபோது, அது முதல் முறையாக டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பை (digital crop survey (DCS)) பயன்படுத்தியதாகக் கூறியது. உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசாவில் பயிர்களை மதிப்பிடுவதற்கு டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு (DCS) பயன்படுத்தப்பட்டது. ஆனால், ராபி மதிப்பீடுகளுக்கு DCS பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பருவகாலமற்ற மழை மற்றும் வெப்பம் FY22 மற்றும் FY23-ல் கோதுமை பயிரை பாதித்தது. இதன் விளைவாக, உற்பத்தி முறையே 107.74 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) மற்றும் 110.55 மெட்ரிக் டன் ஆக இருந்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆலைகள் பொருட்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். இது மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கியது. இரண்டு ஆண்டுகளிலும் பயிர் 100 மெட்ரிக் டன்களுக்குக் குறைவாக இருந்ததாக வர்த்தகம் கருதியது.
இந்த சூழ்நிலையில் கருத்தில் கொள்ள சில காரணிகள் உள்ளன. முதலாவதாக, கோதுமை நுகர்வு எதிர்பார்த்ததைவிட வேகமாக அதிகரித்து வரலாம். வர்த்தக மதிப்பீட்டில் சில மாதத்திற்கு 9 மெட்ரிக் டன் நுகர்வு, இது ஆண்டுதோறும் 108 மெட்ரிக் டன் ஆகும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சுகாதார விழிப்புணர்வானது கோதுமை நுகர்வு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. சில்லறை விற்பனைக் கடைகளில் கோதுமை விலைகள் சராசரியாக ஒரு கிலோவிற்கு ₹32 க்கும் அதிகமாக உள்ளன, இது கடந்த ஆண்டைவிட ₹2 அதிகம் ஆகும்.
இரண்டாவதாக, கோதுமை, அரிசி மற்றும் மக்காச்சோளம் விநியோகம் குறைந்து வருகிறது. ஏனெனில், எத்தனால் உற்பத்தி செய்ய 16 மெட்ரிக் டன் தானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சரக்குகளில் அதிக தேவையின் தாக்கம் தெளிவாக இல்லை. மத்திய தொகுப்பில் கையிருப்பு 13.41 மில்லியன் டன்களாக உள்ளது, இது ஏப்ரல் மாத இடையக விதிமுறையான 7.5 மில்லியன் டன்களை விட அதிகமாகும். இந்த பருவத்தில் சுமார் 31 மில்லியன் டன்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 26% அதிகம் ஆகும். இது தேவை நிச்சயமற்றது என்பதைக் குறிக்கலாம். தனியார் இருப்புக்கான வரம்புகள் கடந்த மாதம் குறைக்கப்பட்டன. ஆனால், இது ஒரு நல்ல முடிவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சிறந்த தகவல்கள் சந்தைகள் சீராக இயங்கவும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயனளிக்கவும் உதவும். நவீன தொழில்நுட்பங்கள் தவறுகளைக் குறைக்கக்கூடும் என்பதால், மதிப்பீடுகள் குறித்த விவாதம் நிறுத்தப்பட வேண்டும். 40% இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டவை மற்றும் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும். கோதுமை உற்பத்தி மதிப்பீட்டில் உடன்பட மாநிலங்கள் உட்பட பங்குதாரர்களுடன் ஒன்றிய அரசு ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்.