தேசிய வனவிலங்கு சுகாதாரக் கொள்கை, ஒரே சுகாதார அணுகுமுறையுடன் (One Health approach) எவ்வாறு இணைந்து செயல்படுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு : கோவிட்-19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்றியம் ஒரு தேசிய வனவிலங்கு சுகாதாரக் கொள்கையின் (National Wildlife Health Policy (NWHP)) வரைவை மதிப்பாய்வு செய்து வருகிறது. இந்த தொற்றுநோய் SARS-CoV-2 என்ற வைரஸால் ஏற்பட்டது. இது வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு, ஒருவேளை ஒரு இடைநிலை விலங்கு மூலம் பரவியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், முன்மொழியப்பட்ட கொள்கையில் ஒருங்கிணைந்த வனவிலங்கு நோய் கண்காணிப்பு, ஆராய்ச்சி மற்றும் புதிய நோயறிதல் ஆய்வகங்களை அமைத்தல் ஆகியவை அடங்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. அமைச்சர்களின் மதிப்பாய்வு மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு, வெவ்வேறு அமைச்சகங்களுக்கு இடையே மேலும் ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


2. அரசாங்கத்தின் கூற்றுப்படி, மனிதர்களில் வளர்ந்துவரும் தொற்று நோய்களில் 60%-க்கும் அதிகமானவை விலங்குகளிலிருந்தே வருகின்றன. இதன் காரணமாக, மனிதன், விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை இணைக்கும் ஒரு சுகாதாரக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.


3. தேசிய வனவிலங்கு சுகாதாரக் கொள்கை (NWHP) மையத்தின் தேசிய ஒரே சுகாதாரத் திட்டத்துடன் (National One Health Mission) இணைந்திருக்கும். இது தொற்றுநோய்க்கான தயார்நிலை, ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்ப் பரவல் போன்றவற்றிற்கு பதிலளிக்கவும் பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கிறது.




உங்களுக்கு தெரியுமா? :


1. வனவிலங்குகள் பல நோய்க்கிருமிகளைக் கொண்டுள்ளன. இதனால், காடுகளிலும் பிடிபட்ட நிலையிலும் அவற்றின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது அவசியம். அரசாங்கத் தரவுகளின்படி, இந்தியாவில் 1,014 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (protected areas) உள்ளன. இவற்றில் 106 தேசிய பூங்காக்கள் (national parks), 573 வனவிலங்கு சரணாலயங்கள் (wildlife sanctuaries), 115 பாதுகாப்பு இருப்புக்கள் (conservation reserves) மற்றும் 220 சமூக காப்புகள் (community reserves) ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சேர்ந்து, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 5.32% ஐ உள்ளடக்கியது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பல்வேறு நிலப்பரப்பு, பறவைகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.


2. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (Central Zoo Authority (CZA)) கொள்கை வரைவை (policy drafting) தொகுத்து வருகிறது. இதன் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் நிபுணர்களுடன் ஆலோசனைகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய், இந்த நிறுவனங்களுக்கு கொள்கை உருவாக்குவதில் உதவுகிறது. இந்த மூன்று அமைப்புகளும் தனியார் ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst and Young) உள்ளிட்ட ஒரு முக்கிய பணிக்குழு, இந்தக் கொள்கையில் இணைந்து செயல்பட்டது.


3. ஏழு பணிக்குழுக்கள் நோய் கண்காணிப்பு மற்றும் வனவிலங்கு சுகாதார ஆராய்ச்சி முதல் திறன் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு வரையிலான கருப்பொருள்களில் முக்கிய பரிந்துரைகளை வழங்கியும், சேகரிக்கப்பட்டும் வருகிறது. இந்தப் பணிக்குழுக்கள் கடந்த ஆண்டு சுமார் நான்கு மாதங்கள் கலந்துரையாடல்களை நடத்தி கருப்பொருளுக்கான பரிந்துரைகளை வழங்கின. உதாரணமாக, நோய் கண்காணிப்பு தொடர்பான குழு நிலப்பரப்பு, கடல் மற்றும் பறவை சுற்றுச்சூழல் அமைப்புகளை மையமாகக் கொண்ட ஒரு கண்காணிப்பு அமைப்பை முன்மொழிந்தது.


4. மார்ச் 3-ம் தேதி குஜராத்தின் ஜூனகாத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு தேசிய வனவிலங்கு பரிந்துரை மையம் (National Referral Centre for Wildlife (NRC-W)) நிறுவப்பட்டது. இது புதிய வனவிலங்கு சுகாதார மேலாண்மை கட்டமைப்பின் ( new wildlife health management framework) ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். NRC-W வனவிலங்கு இறப்புகள் மற்றும் நோய்ப் பரவல்கள் குறித்து விசாரிக்க ஒரு பரிந்துரை மையமாக செயல்படும். இது நோய் கண்டறிதவதுடன், சிகிச்சைகளுக்கும் உதவும். கூடுதலாக, இது வனவிலங்கு நோய் கண்காணிப்புக்கான முக்கிய அதிகாரிகளில் (nodal authorities) ஒன்றாக மாறக்கூடும்.


5. தேசிய வனவிலங்கு சுகாதார தரவுத்தளம் (national wildlife health database) மற்றும் வனவிலங்கு சுகாதார தகவல் அமைப்பு (wildlife health information system) இரண்டு முக்கிய கொள்கை பரிந்துரைகள் ஆகும். தேசிய வனவிலங்கு சுகாதார தரவுத்தளமானது, நிகழ்நேர அல்லது அருகிலுள்ள நேரக் கண்காணிப்பு தரவுகளுக்கான மைய இடமாக செயல்பட முடியும். இது வரலாற்றுத் தரவு மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் மனிதனின் ஆரோக்கியத்தின் தகவல்களையும் உள்ளடக்கும். வனவிலங்கு சுகாதார தகவல் அமைப்பானது, நோய் கண்காணிப்பை மேம்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது வசதி-நிலை அறிக்கையிடல் மற்றும் இடஞ்சார்ந்த-தற்காலிகத் தரவைக் கண்காணிப்பதற்கும் உதவும்.


6. செயற்கைக்கோள் கண்டறியும் ஆய்வகங்களை நிறுவுதல் என்பது கொள்கையில் வெளிப்படும் மற்றொரு பரந்த கருப்பொருளாகும். இந்த ஆய்வகங்கள், வனவிலங்கு நோய் கண்டறிதல் மற்றும் நோயறிதலை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விரைவான முடிவுகளுக்காக முக்கிய வனப்பகுதிகளுக்கு அருகில் அவற்றை அமைக்க இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.



Original article:

Share: