இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகத்தில் தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகி வருவதால், தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
ஜனவரி தொடக்கத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள் (Digital Personal Data Protection Rules), 2025ஆம் ஆண்டிற்க்கான வரைவு விதிகளை, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (Digital Personal Data Protection Act), 2023-ன் கீழ் பகிர்ந்து கொண்டது. இந்த வரைவு விமர்சனங்களை எதிர்கொண்டது, முக்கியமாக மத்திய அரசு தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு (Data Protection Board (DPB)) உறுப்பினர்களை ஒன்றிய அரசு தேர்வு செய்யலாம் என்பதும் அடங்கும். தரவு பாதுகாப்பு வாரியம் (DPB) நீதித்துறை போன்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதால், நியமனங்கள் மீதான இந்தக் கட்டுப்பாடு அதிகாரங்களைப் பிரிப்பது மற்றும் தரவு பாதுகாப்பு வாரியத்தின் சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
சட்டம் மற்றும் வரைவு விதிகள், தரவு பாதுகாப்பு வாரியத்தின் (DPB) முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)) இணைய வழியில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. TDSAT இந்த மேல்முறையீடுகளை ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
TDSAT இந்த மேல்முறையீடுகளை சிறப்பாகக் கையாள உதவ, மூன்று மேம்பாடுகள் தேவை:
1. தரவுப் பாதுகாப்பில் ஒரு தொழில்நுட்ப நிபுணரை நியமித்தல்.
2. மேல்முறையீடுகளை விரைவாகத் தீர்க்கும் திறனை அதிகரித்தல்.
3. ஆன்லைன் தாக்கல்களைச் செயலாக்குவதற்கான தொழில்நுட்பத்தைப் புதுப்பித்தல்.
ஒரு நிபுணர் தேவை
1. தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) தரவு பாதுகாப்பில் ஒரு தொழில்நுட்ப நிபுணரைக் கொண்டிருக்க வேண்டும்.
2. தீர்ப்பாயங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கையாள்வதில் சிறந்தவை. ஏனெனில், அவை தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டுள்ளன.
3. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் (Telecom Regulatory Authority of India Act), 1997-ன் பிரிவு 14C-ன் படி, ஒரு TDSAT உறுப்பினர் பின்வரும் இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். அவை:
குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அரசாங்கச் செயலாளராக (அல்லது அதற்கு சமமான பதவியில்) பணியாற்றியிருக்க வேண்டும், அல்லது
தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொழில், வணிகம் அல்லது நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
4. TRAI சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு சட்டம், 2023-ன் கீழ் மேல்முறையீடுகளைக் கையாள்வது TDSAT பொறுப்பாகும்.
இருப்பினும், தரவு பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது மற்றும் அதன் சொந்த சவால்களுடன் வருகிறது. தொலைத்தொடர்பு மற்றும் தரவு பாதுகாப்பு மிகவும் வேறுபட்ட பகுதிகள் ஆகும். தரவு பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் ஒப்புதல், அணுகல், சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட தரவை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான விதிகளை உள்ளடக்கியது. இந்த சிக்கல்கள் தொலைத்தொடர்பு தொடர்பான விஷயங்களுக்கு சமமானவை அல்ல. அதனால்தான், தரவு பாதுகாப்பு சட்டங்களில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. இந்தத் துறையில் ஒரு நிபுணரை நியமிக்க, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றிய அறிவைக் கொண்ட ஒரு தொழில்நுட்ப உறுப்பினரை அனுமதிக்கும் வகையில் TRAI சட்டத்தின் பிரிவு 14C மாற்றப்பட வேண்டும்.
வழக்குகளின் சுமை
இரண்டாவதாக, தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) மேல்முறையீட்டு தீர்ப்பாயமாக மாற்றுவதற்கு முன், அது மேல்முறையீடுகளை திறமையாக கையாள முடியுமா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முதலில், தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) என்பது தரவு பாதுகாப்பு வாரியம் (DPB) தொடர்பான மேல்முறையீடுகளைக் கையாளும் நோக்கம் கொண்டதல்ல. தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (Personal Data Protection Bill) 2018, நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஒரு புதிய தீர்ப்பாயத்தை உருவாக்க பரிந்துரைத்தது. அந்தக் குழு ஒரு புதிய தீர்ப்பாயத்தை அமைப்பது அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றுக்கு இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து முன்மொழிந்தது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில், ஒரு புதிய மசோதா இந்தத் திட்டத்தை மாற்றியது. மேல்முறையீடுகள் உயர் நீதிமன்றங்களுக்குச் செல்லும் என்று பரிந்துரைத்தது. உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே அதிக சுமையுடன் இருப்பதால், காலப்போக்கில் அதிக தீர்ப்பாயங்கள் எழுவதற்கு வழிவகுத்ததால், இந்த முடிவு சிறந்ததாக இருக்காது.
இருப்பினும், தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) ஏற்கனவே அதிக பணிச்சுமையைக் கையாள்கிறது. பிப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2025ஆம் ஆண்டு வரை, 3,448 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. புதிய தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, இன்னும் அதிகமான மேல்முறையீடுகள் சேர்க்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு, சட்டத்தின்படி, தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) ஆறு மாதங்களுக்குள் மேல்முறையீடுகளைத் தீர்க்கும் என்று எதிர்பார்ப்பது நம்பத்தகாதது.
ஜனவரி 2025ஆம் ஆண்டில், தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) அதன் அமர்வில் ஒரு உறுப்பினர், ஒரு தொழில்நுட்ப நிபுணர் மட்டுமே இருந்தார். நீதித்துறை உறுப்பினர் இல்லாததால் இது ஒரு பிரச்சனையாக இருந்தது. தீர்ப்பாயங்கள் தங்கள் அமர்வில் நீதித்துறை உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய திறனுடன் கூடிய தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT), வரைவு விதிகளில் உள்ள தரவு பாதுகாப்பு வாரியம் (DPB) காலக்கெடுவிற்குள் மேல்முறையீடுகளை எவ்வாறு கையாளும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட்ஜெட்டை அதிகரிப்பதும், கூடுதல் அமர்வுகளைச் சேர்ப்பதும் பணிச்சுமையைக் குறைக்க உதவும்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது
மூன்றாவதாக, சட்டத்தைப் பின்பற்ற தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். வரைவு விதிகள் மேல்முறையீடுகளை இணைய வழியில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இருப்பினும், தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (TDSAT) வலைத்தளம் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதில்லை. இதைச் சரிசெய்ய, எளிதான வழிசெலுத்தல், வழக்கு விவரங்களுக்கு சிறந்த அணுகல் மற்றும் மென்மையான டிஜிட்டல் தாக்கல் ஆகியவற்றிற்காக வலைத்தளம் மேம்படுத்தப்பட வேண்டும். TRAI ஆண்டு அறிக்கை 2023 ஒரு புதிய "சட்ட வழக்குகள் மேலாண்மை அமைப்பு" ("legal cases management system,") பற்றி குறிப்பிடுகிறது, ஆனால், அது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது அல்லது வழக்கு சுமையைக் குறைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சிக்கலான மற்றும் அதிக அளவு தரவு பாதுகாப்பு மேல்முறையீடுகளைக் கையாள ஒரு வலுவான டிஜிட்டல் அமைப்பு அவசியம்.
தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) மிகவும் திறம்பட செயல்பட சீர்திருத்தங்கள் தேவை. இந்த சீர்திருத்தங்களில் பின்வருவன அடங்கும். அவை:
தரவுப் பாதுகாப்பில் ஒரு தொழில்நுட்ப நிபுணரை நியமித்தல்
மேல்முறையீடுகளை விரைவாகக் கையாளுதல்
அதன் தொழில்நுட்பத்தைப் புதுப்பித்தல்
இது பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இதை உறுதி செய்வதற்கான ஒரு வழி ஆண்டு அறிக்கைகளை வெளியிடுவதாகும். இந்த அறிக்கைகளில் தாக்கல் செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்குகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வழக்கிலும் உள்ள முக்கிய சிக்கல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தத் தகவல் தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் தரவு பாதுகாப்பு வழக்குகளுக்கு தனித்தனியாகப் பகிரப்பட வேண்டும். இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாக கட்டமைப்பில் தரவு பாதுகாப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிப்பதால், இதுபோன்ற விஷயங்களை திறம்பட நிர்வகிக்கும் தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (TDSAT) திறன் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முக்கியமாக இருக்கும்.
நடாஷா அகர்வால், TrustBridge Rule of Law Foundation மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார்.