IRCTC மற்றும் IRFC-க்கான நவரத்னா தரநிலை (Navratna Status) என்றால் என்ன? -தீரஜ் மிஸ்ரா

 இந்திய இரயில்வேயின் இரண்டு பெரிய நிறுவனங்களும் இப்போது நிதி முடிவுகளை மிகவும் சுதந்திரமாக எடுக்க முடியும். அவை, குறைவான அதிகாரத்துவ தடைகளுடன் சர்வதேச அளவிலும் செயல்பட முடியும். இந்திய இரயில்வேயின் பட்டியலிடப்பட்ட ஏழு மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் (Central Public Sector Enterprises (CPSE)) இப்போது நவரத்னா தரநிலையைப் (Navratna status) பெற்றுள்ளன.


மார்ச் 3, திங்கட்கிழமை அன்று, ஒன்றிய அரசு இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)) மற்றும் இந்திய இரயில்வே நிதிக் கழகம் (Indian Railway Finance Corporation (IRFC)) ஆகியவற்றை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இவை இப்போது நமது நாட்டின் 25-வது மற்றும் 26-வது நவரத்னா நிறுவனங்களாகும்.


இந்திய இரயில்வேயின் பட்டியலிடப்பட்ட ஏழு மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் (Central Public Sector Enterprises (CPSEs)) இப்போது நவரத்னா தரநிலையைப் பெற்றுள்ளன. தற்போது, இந்திய இரயில்வேயில் மொத்தம் 12 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) உள்ளன.


நவரத்தினங்கள் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான 'ரத்னா' (Ratna) நிறுவனங்களின் இரண்டாவது வகையாகும். அவை, மகாரத்னாக்கள் (Maharatnas) மற்றும் மினிரத்னாக்களுக்கு (Miniratnas) இடையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தரவரிசை லாபம், நிகர மதிப்பு, வருவாய் மற்றும் துறைகளுக்கு இடையேயான செயல்திறன் போன்ற அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்தப்பட்டுள்ளது.


நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்கள் துறை (Department of Public Enterprises (DPE)) நவரத்னா தரநிலைக்காக மத்திய பொதுத்துறை நிறுவனங்களைத் (CPSE) தேர்ந்தெடுக்கிறது. இந்த தேர்வுக்கு ஆறு குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது:


1. நிகர லாபத்திற்கும் நிகர மதிப்புக்கும் உள்ள விகிதம்.


2. உற்பத்தி அல்லது சேவைகளின் மொத்த செலவுக்கும் மனிதவள செலவிற்கும் உள்ள விகிதம்.


3. தேய்மானம், வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாப விகிதம் (profit before interest and taxes (PBIT)) பயன்படுத்தப்பட்ட மூலதனத்திற்கு அல்லது பயன்படுத்தப்பட்ட மூலதனத்தின் மீதான வருமானம்.


4. வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய லாப விகிதம் (PBIT) விற்பனை அளவு (turnover).


5. ஒரு பங்குக்கான வருவாய்.


6. மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நிறுவனத்தின் செயல்திறன் (நிறுவனத்தின் துறைகளுக்கு இடையேயான செயல்திறன்).


ஆறு குறிகாட்டிகளும் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன. இதில், ஒரு பங்கின் வருவாய் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், நிகர லாபத்திற்கும் நிகர மதிப்புக்கும் இடையிலான விகிதம் அதிகபட்சமாக 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது.


ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் நவரத்னா தரநிலையைப் பெறலாம். முதலாவதாக, ஆறு குறிகாட்டிகளிலும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு மதிப்பெண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளில் அது ஒரு சிறந்த அல்லது மிகவும் நல்ல புரிந்துணர்வு ஒப்பந்த (MOU) மதிப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும்.


பொது நிறுவனங்கள் துறை (DPE) X வலைதளத்தில் பதிவிடுகையில் இரண்டு நிறுவனங்களின் நவரத்னா தரநிலையை அறிவித்தது. IRCTC-ன் ஆண்டு வருவாய் ரூ.4,270.18 கோடி என்றும், இதன் வரிக்குப் பிந்தைய லாபம் (profit after tax (PAT)) ரூ.1,111.26 கோடி என்றும், 2023-24 நிதியாண்டில் நிகர மதிப்பு ரூ.3,229.97 கோடி என்றும் அது கூறியது.


IRFC-யைப் பொறுத்தவரை, இந்த புள்ளிவிவரங்கள் ஆண்டு விற்பனை அளவு (turnover) ரூ.26,644 கோடியாகவும், வரிக்குப் பிந்தைய லாபத்துக்கு (PAT) ரூ.6,412 கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.49,178 கோடியாகவும் இருந்ததாக X-வலைதளத்தில் பொது நிறுவனங்கள் துறை (DPE) பதிவு தெரிவிக்கிறது.


IRCTC என்பது இந்திய இரயில்வேயின் ஒரு நீட்டிக்கப்பட்ட அமைப்பாகும். மேலும், இணையவழியில் இரயில் பயணச் சீட்டுகளை விற்கும் ஒரே நிறுவனம் இதுவாகும். IRCTC-ல் இரயில்வே அமைச்சகம் 62.40% பங்கைக் கொண்டுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, அதன் விற்பனை அளவு (turnover) ரூ.4,270 கோடியாகவும் லாபம் ரூ.1,111 கோடியாகவும் இருந்தது. இதன் நிகர மதிப்பு ரூ.3,230 கோடி மற்றும் சந்தை மூலதனம் ரூ.74,376 கோடியாக உள்ளது.


இந்திய இரயில்வேயின் கூடுதல் பட்ஜெட் வளங்கள் (extra budgetary resources (EBR)) தேவைகளைப் பூர்த்தி செய்வதே இந்திய இரயில்வே நிதிக் கழகத்தின் (IRFC) முக்கியப் பங்காகும். சிறந்த விகிதங்கள் மற்றும் விதிமுறைகளில் சந்தையில் இருந்து பணத்தை கடன் வாங்குவதன் மூலம் இதைச் செய்கிறது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, இரயில்வே அமைச்சகம் IRFC-ன் 86.36% பங்குகளை வைத்திருக்கிறது. மார்ச் 2024 நிலவரப்படி, நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1,86,030 கோடியாக இருந்தது.


இந்த நிலை, அதிக நிதி சுயாட்சி, எளிதான உலகளாவிய விரிவாக்கம் மற்றும் வலுவான சந்தை நிலை போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.


நவரத்னா தரநிலையுடன், IRCTC மற்றும் IRFC ஆகியவை அரசாங்க ஒப்புதல் இல்லாமல் ஒரே திட்டத்தில் ரூ.1,000 கோடி அல்லது அவற்றின் நிகர மதிப்பில் 15% வரை முதலீடு செய்யலாம். இது அவர்களுக்கு அதிக நிதி சுதந்திரத்தை அளிக்கிறது என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


நிறுவனங்கள் கூட்டு முயற்சிகள் மற்றும் துணை நிறுவனங்களையும் உருவாக்கலாம். அரசாங்கத்தின் நேரடி தலையீடு இல்லாமல் அவர்கள் இணைப்புகள் அல்லது கையகப்படுத்துதல்களில் நுழையலாம். இது அவர்கள் சுதந்திரமான வணிக மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுக்கவும், தனியார் துறை நிறுவனங்களுடன் போட்டியிடவும் அனுமதிக்கிறது என்று அதிகாரி மேலும் கூறினார்.


அதிகாரியின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையிலும் நுழைய முடியும். அவர்கள் உத்திக்கான கூட்டாண்மைகளை உருவாக்கி உலகளவில் விரிவாக்க முடியும். அவர்கள் கடுமையான அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். நவரத்னா நிறுவனங்கள் நிதி ரீதியாக நிலையானவை. இந்த நிலைத்தன்மை அவர்களுக்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க உதவுகிறது. இது பங்குதாரர்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்கவும் அனுமதிக்கிறது.


IRCTC மற்றும் IRFCக்கு முன், மற்ற ஐந்து இந்திய இரயில்வே நிறுவனங்கள் நவரத்னா தரநிலையைப் பெற்றிருந்தன. இந்த நிறுவனங்கள் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Container Corporation of India (CONCOR)), இரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Ltd (RVNL)), RITES லிமிடெட், IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் இரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel Corporation of India Ltd) ஆகியவை ஆகும்.


CONCOR ஜூலை 2014-ல் நவரத்னா தரநிலையைப் பெற்ற முதல் இரயில்வே நிறுவனமாக மாறியது. RVNL, IRCON மற்றும் RITES ஆகியவை 2023-ம் ஆண்டில் இந்த தரநிலையைப் பெற்றன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2024-ம் ஆண்டில் ரயில்டெல் ஆகியவைப் பெற்றன.


CONCOR என்பது சரக்கு போக்குவரத்திற்கான பன்மாதிரி போக்குவரத்து (multimodal logistics for freight transport) வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். ரயில்டெல் நிலையங்களில் ஐபி அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு அமைப்புகள் (IP-based video surveillance systems) மற்றும் NIC 'e-Office' சேவைகள் உள்ளிட்ட இணைப்பு சேவைகளை வழங்குகிறது.


IRCON இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது.


RITES என்பது போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கான ஒரு ஆலோசனை அமைப்பாகும். இரயில் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க மற்றும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களில் இரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Ltd (RVNL)) செயல்படுகிறது.



Original article:
Share: