தற்போதைய செய்தி :
மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலில், செவ்வாய்க்கிழமை குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் நபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே ஒரு புல்வெளியில் இந்தத் தாக்குதல் நடந்தது.
முக்கிய அம்சங்கள்:
சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜெட்டா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு நாடு திரும்ப முடிவு செய்தார். அவர் புதன்கிழமை அதிகாலை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதலைக் கண்டிப்பதில் உலகத் தலைவர்கள் இந்தியாவுடன் இணைந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோடிக்கு அழைப்பு விடுத்து,, "இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக நிற்கின்றன என்றார்".
பைசரன் பள்ளத்தாக்கில் மதியம் தாக்குதல் நடந்தது. இது பஹல்காமில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு சாலைக்கு அருகில் உள்ள ஒரு புல்வெளி. இது சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
மூன்று நான்கு துப்பாக்கி ஏந்திய நபர்கள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பைசரானில் உள்ள கடைக்காரர்கள் தன்னிடம் கூறியதாக பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் வர்த்தகத் தலைவர் ஒருவர் கூறினார்.
முதலமைச்சர் உமர் அப்துல்லா, "சமீப ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நாங்கள் பார்த்ததை விட மிகப் பெரிய தாக்குதல்" என்றார்.
தடை செய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba (LeT)) பயங்கரவாத அமைப்பின் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front (TRF)) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?:
26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (TRF)) பொறுப்பேற்றுள்ளது என்று மத்திய ஏஜென்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)) என்பது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) கிளை ஆகும்.
உள்துறை அமைச்சகம் (MHA) ஜனவரி 2023ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் TRF-ஐ "பயங்கரவாத அமைப்பாக" (“terrorist organisation”) அறிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் காஷ்மீரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் அது ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.
ஆனால் TRF முதன்முதலில் 2020ஆம் ஆண்டில் தலைப்புச் செய்திகளை உருவாக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு மே மாதம், கெரானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து இராணுவ கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஐந்து TRF போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஹந்த்வாரா மற்றும் சோபோரில் இதே போன்ற மோதல்கள் நிகழ்ந்தன. இதில் பாதுகாப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.
முதலாவது, ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டில், சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது, 2018ஆம் ஆண்டில் காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) தலைமை துண்டிக்கப்பட்டது.
லஷ்கர்-இ-தொய்பா 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும், அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று முழு காஷ்மீரையும் பாகிஸ்தானுடன் இணைப்பதாகும். இருப்பினும், 2018ஆம் ஆண்டின் இறுதியில், அது இந்திய பாதுகாப்புப் படைகளின் கைகளில் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்தது.