சர்வதேச நாணய நிதியம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund  (IMF)) தனது சமீபத்திய பொருளாதார கண்ணோட்டத்தில் அமெரிக்கா விதித்த வர்த்தகக் கட்டணங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை காரணமாக இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சி கணிப்புகளை குறைத்துள்ளது.


முக்கிய அம்சங்கள் :


• இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு 2025-26 நிதியாண்டிற்கு 6.5 சதவீதத்திலிருந்து 0.3 சதவீத புள்ளிகள் குறைத்து 6.2 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டான 2026-27க்கு 6.1 சதவீதத்திலிருந்து 0.2 சதவீத புள்ளிகள் குறைத்து 6.3 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.


• "இந்தியாவைப் பொறுத்தவரை, 2025ல் வளர்ச்சி கண்ணோட்டம் ஒப்பீட்டளவில் 6.2 சதவீதமாக நிலையாக உள்ளது. இது தனியார் நுகர்வால், குறிப்பாக கிராமப்புறங்களில் ஆதரிக்கப்படுகிறது. ஆனால், இந்த விகிதம் ஜனவரி 2025 உலக பொருளாதாரக் கண்ணோட்டம் (World Economic Outlook (WEO)) புதுப்பிப்பைவிட 0.3 சதவீத புள்ளி குறைவாக உள்ளது. இது அதிகரித்த வர்த்தக பதற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை காரணமாக" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2025-26-க்கான இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற முந்தைய கணிப்பைவிட குறைவாக 6.5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டு வளர்ச்சி 6.5 சதவீதமாகவும்; இரண்டாம் காலாண்டு 6.7 சதவீதமாகவும்; மூன்றாம் காலாண்டு 6.6 சதவீதமாகவும் மற்றும் நான்காம் காலாண்டு 6.3 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


• IMF தனது ஜனவரி மாத கணிப்பிலிருந்து 2025ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 0.5 சதவீத புள்ளி குறைத்து 2.8 சதவீதமாகவும், 2026ஆம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளி குறைத்து 3 சதவீதமாகவும் மாற்றியுள்ளது. "வர்த்தக பதற்றங்களின் விரைவான அதிகரிப்பு மற்றும் மிக அதிகமான கொள்கை நிச்சயமற்ற தன்மை உலகளாவிய பொருளாதார செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்கான கணிப்பும் 1.5 சதவீத புள்ளி குறைத்து 1.7 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.


•  அதிக கொள்கை நிச்சயமற்றத் தன்மை, வர்த்தக பதற்றங்கள் மற்றும் மென்மையான தேவை வேகம் காரணமாக அமெரிக்காவில் வளர்ச்சி 1.8 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரி கணிப்பைவிட 0.9 சதவீத புள்ளி குறைவாகும். அதே, சமயம் யூரோ பகுதியில் 0.8 சதவீத வளர்ச்சி 0.2 சதவீத புள்ளி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• உலக பொருளாதார கண்ணோட்டம் (World Economic Outlook (WEO)) என்பது IMF ஊழியர்களால் பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படும் வாய்ப்புகள் மற்றும் கொள்கைகளின் ஆய்வாகும். இடையில் சில புதுப்பிப்புகளுடன் கொள்கைகள் வெளியிடப்படுகின்றன. இது அருகில் உள்ள மற்றும் நடுத்தர காலத்தில் உலக பொருளாதாரத்தின் பகுப்பாய்வுகள் மற்றும் கணிப்புகளை வழங்குகிறது. இவை சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund  (IMF)) உறுப்பு நாடுகளில் உள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார அமைப்பின் கண்காணிப்பின் முக்கிய அம்சங்களாகும். அவை முன்னேறிய, வளர்ந்துவரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களை பாதிக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்கின்றன மற்றும் தற்போதைய அவசரத் தேவையுள்ள தலைப்புகளை எடுத்துரைக்கின்றன.


Original article:
Share: