சர்வதேச நாணய நிதியத்தின் கண்ணோட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல செய்தி

 இந்தியாவின் 6%-க்கும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள், வலுவான உள்நாட்டு வளர்ச்சியின் காரணமாக அமையும் விளைவாகும்.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF), சமீபத்திய உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (World Economic Outlook (WEO)) படி, இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும். இருப்பினும், டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போரினால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் (global economic turmoil) காரணமாக, 2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரியில் கணிக்கப்பட்ட 6.5% வளர்ச்சியை விடக் குறைவு. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.5 சதவீத புள்ளிகள் குறைந்து 2.8% ஆக இருக்க வாய்ப்புள்ள போதிலும், இந்தியாவின் வளர்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. இந்தியாவின் 6%-க்கும் அதிகமான வளர்ச்சிக்கு வலுவான உள்நாட்டு காரணிகளே காரணம் என்று IMF கூறுகிறது.


இந்தியாவின் செயல்திறன் இருந்தபோதிலும், உலகப் பொருளாதாரம் மற்றும் தற்போதுள்ள பொருளாதார அமைப்பு பெரும் சிக்கலான காலகட்டத்தை கடந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. உலகமயமாக்கல் மற்றும் வர்த்தகத்தால் லாபம் ஈட்டியவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் இடையிலான சமச்சீரற்றத் தன்மை, அவர்களின் நாடுகள் வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்தனவா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், உலகளாவிய ஒழுங்கின் மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கவலை, அதன் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரில் உலகம் பாதிக்கப்படுவதைக் காண்பதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கையை உருவாக்குவதாகத் தெரிகிறது.


இதை சர்வதேச நாணய நிதியம் நிறைவேற்ற முடியுமா? உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (WEO) அறிக்கைக்குப் பிறகு, டிரம்ப் நிர்வாகத்தின் சமரசக் கொள்கைகள், அமெரிக்க கூட்டாட்சி ரிசர்வ் தலைவரை (US federal reserve chairman) பதவி நீக்கம் செய்ய மாட்டேன் என்று டிரம்ப் கூறுவதும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தற்போதைய வரிவிதிப்புகள் நீடிக்க முடியாதவை என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் கூறுவதும், அனைத்து நம்பிக்கையும் இழக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. இந்தியா சிறந்ததை எதிர்பார்க்க வேண்டும் மற்றும் மோசமானவற்றுக்குத் தயாராக வேண்டும்.


Original article:
Share: