இந்த ஆண்டு மழைக்கான இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பு என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : வரும் ஜூன்-செப்டம்பர் பருவமழை காலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதன் மூலம், நாட்டில் மற்றொரு நல்ல பருவ மழை பெய்யத் தயாராக உள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• இந்த பருவத்திற்கான அதன் முதல் நீண்ட கால முன்னறிவிப்பில், பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் உள்ள எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation (ENSO)), இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) மற்றும் வட துருவத்தைச் சுற்றியுள்ள பனி மூட்டம் உட்பட இந்தியப் பருவமழையின் அனைத்து முக்கிய சூழல்களும் சாதகமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


• பருவமழை காலத்தில் நீண்டகால சராசரியில் 105 சதவீதம் மழை பொழியக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவத்திற்கான நீண்டகால சராசரி மழைப்பொழிவு 87 செ.மீ ஆகும். இதன் பொருள், இந்த நான்கு மாத பருவத்தில் இந்தியா 91 செ.மீ (87 செ.மீ.யில் 105 சதவீதம்) மழையைப் பெறக்கூடும்.


• அது அவ்வாறு மாறினால், கடந்த ஏழு ஆண்டுகளில்- 2019 முதல் - ஐந்தாவது முறையாக நாடு பருவ மழை காலத்தில் 100 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மழை பொழிவைப் பெறும்.


• இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக “இயல்பைவிட அதிகம்” மழை பெய்யும் ஆண்டாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்தலின்படி, இது சாதாரண அளவைவிட 104 சதவீதத்திற்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 96-104 சதவீத மழைப்பொழிவை “சாதாரண” மழை பொழிவு என்றும், 104 முதல் 110 சதவீதம் வரை “இயல்பை விட அதிகம்” என்றும், அதற்கு மேல் பொழியும் மழை பொழிவை “அதிகப்படியான” மழை பொழிவு என்று வரையறுக்கிறது. கடந்த ஆண்டு, வழக்கமான மழையில் 108 சதவீதம் பெய்தது.


உங்களுக்கு தெரியுமா?


• எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation (ENSO)) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) ஆகியவை பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் நிலையைக் குறிக்கின்றன. இவை இரண்டும் பருவமழை அளவைப் பாதிக்கின்றன. தென் அமெரிக்காவின் கடற்கரையில் உள்ள கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தால், எல் நினோ (El Nino) என்ற நிலை ஏற்படுகிறது.  இந்தியாவில் பருவமழை பொதுவாக எல் நினோவின் போது பலவீனமடைகிறது. இதற்கு நேர்மாறாக, லா நினா என்று அழைக்கப்படுகிறது, இது அதிக மழையைப் பெற உதவுகிறது. இந்திய பெருங்கடல் இருமுனை என்பது இந்தியப் பெருங்கடலின் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் உள்ள வெப்பநிலை வேறுபாட்டைக் குறிக்கிறது. அரபிக் கடல் பகுதி வங்காள விரிகுடா பகுதியைவிட அதிக வெப்பமாக இருக்கும்போது இந்தியப் பெருங்கடல் இருமுனை நேர்மறையாக கருதப்படுகிறது. இது பொதுவாக இந்திய பருவமழைக்கு சாதகமாக இருக்கும்.


• இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவில் சுமார் 75% நான்கு மாத பருவமழையின் போது தான் கிடைக்கிறது. இந்த மழை விவசாயம், குடிநீர், மின்சாரம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.


Original article:
Share: