பழங்குடியினருக்கு நிரந்தர குடியேற்றம் தேவை -சுப்ரான்ஷு சவுத்ரி

 இடம்பெயர்ந்த பழங்குடியினரில் பெரும்பாலோர் இளையவர்கள். இவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிறந்த வேலை வாய்ப்புகளால் ஈர்க்கப்படுகிறார்கள்.


2005ஆம் ஆண்டில், சுமார் 50,000 கோண்ட் பழங்குடி மக்கள் சத்தீஸ்கரில் இருந்து அன்றைய ஆந்திரப் பிரதேசத்திற்கு (இப்போது தெலுங்கானா) இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அரசாங்கம் 'திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள்' (‘strategic hamleting’) என்ற திட்டத்தைத் தொடங்கியதால் இது நடந்தது. இது 1960ஆம் ஆண்டுகளில் தெற்கு வியட்நாமில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. மாவோயிஸ்டுகளை அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவதே குறிக்கோளாக இருந்தது. ஆனால், திட்டம் தோல்வியடைந்தது. பழங்குடியினர், சாலைகளுக்கு அருகிலுள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் இறுதியில் காடுகளில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். மீண்டும் மாவோயிஸ்டு இயக்கங்களில் இணையாமல், இறுதியில் பாதுகாப்புப் படைகளில் சேர்ந்தனர்.


வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சில பழங்குடியினர், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட பாதுகாப்புப் படையினருக்கு உதவுவதில் இப்போது முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சரணடைந்த பல முன்னாள் மாவோயிஸ்டுகளும் அவர்களுடன் இணைந்துள்ளனர். இந்த பழங்குடி போராளிகள் மத்தியப் படைகள் மற்றும் உள்ளூர் பழங்குடியினர் அல்லாத போலீசாரைவிட மிகவும் திறமையானவர்கள், ஏனெனில் அவர்கள் உள்ளூர் மொழி மற்றும் நிலப்பரப்பைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம் மார்ச் 31, 2026-க்குள் முடிவடையும் என்று கூறியுள்ளார்.


பல வருட போராட்டம்


கம்யூனிச கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கு 'திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள்' (‘strategic hamleting’) திட்டத்தைப் பயன்படுத்துவது இந்தியாவில் புதிதல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, 1949ஆம் ஆண்டின் இறுதியில், இந்திய அரசாங்கம் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து சாலைகளில் உள்ள முகாம்களுக்கு மாற்றியது. நிஜாம் சரணடைந்த பிறகு தெலுங்கானாவில் கம்யூனிச கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக இது செய்யப்பட்டது. ஈட்டிகள் மற்றும் கோடரிகள் போன்ற அடிப்படை ஆயுதங்களை மட்டுமே வைத்திருந்தாலும், இராணுவப் பயிற்சி இல்லாத போதிலும், இந்தக் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களை "சிறப்பு காவலர்களை"“ (special police constables”) அரசாங்கம் நியமித்தது. அத்தகைய ஒரு குழு  "புலிப் படை" (“Tiger Squad”) ஆகும்.  இது சுமார் 300 கோயா பழங்குடியினரைக் கொண்டது.


1960ஆம் ஆண்டுகளில் மிசோரமில் 'திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள்' (‘strategic hamleting’) திட்டம் சிறப்பாக செயல்பட்டது. அந்த நேரத்தில், மிசோ போராளிகளுடன் அரசாங்கத்தால் சமாதானம் செய்ய முடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு, மிசோ மற்றும் புரு (ரியாங்) பழங்குடி குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் திரிபுராவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ, புரு மக்களை ஆதரித்து மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை இந்திய அரசாங்கம் தொடங்கியது.


குட்டி கோயா பழங்குடியினரை அரசாங்கம் நன்றாக நடத்தவில்லை. இந்த மக்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நிலத்தின் மீது சட்டப்பூர்வ உரிமைகள் இல்லாமல் காடுகளில் வசித்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரி ஒருவர், தொடர்ச்சியான வன்முறை காரணமாக சுமார் 10,000 கோண்ட் பழங்குடியினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று கூறினார். அவர்களில் பெரும்பாலோர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள், சத்தீஸ்கரில் இருந்து முறையே 24,000 மற்றும் 8,000 இடம்பெயர்ந்த பழங்குடியினரைப் பெற்றுள்ளதாகக் கூறினர்.


இடம்பெயர்ந்த மக்களின் கணக்கெடுப்பை மூன்று மாதங்களுக்குள் முறையாக நடத்த வேண்டும் என்று தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம் (National Commission for Scheduled Tribes (NCST)) கேட்டுக் கொண்டுள்ளது. இதேபோன்ற உத்தரவு 2019ஆம் ஆண்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அந்த நேரத்தில் கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று சத்தீஸ்கர் அரசு கூறியது. இப்போது சத்தீஸ்கர் அரசாங்கத்தின் அணுகுமுறை கொஞ்சம் மேம்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்தரைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர், வன்முறை காரணமாக பஸ்தரிலிருந்து வேறு மாநிலங்களுக்கு எந்த பழங்குடி மக்களும் இடம்பெயர்ந்ததில்லை என்று கூறினார். எனவே, யாரையும் மறுவாழ்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.


உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு (IDPs) உதவுவதற்காக இந்தியா பின்பற்றும் தேசிய அல்லது சர்வதேச சட்டம் இல்லாததால், இந்த பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் பிற உள்ளூர் பழங்குடி குழுக்களிடமிருந்தும்கூட அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் மற்றவர்களை தங்கள் வளங்களை அபகரிக்கும் வெளியாட்களாகக் கருதுகிறார்கள். மாவோயிஸ்டுகள் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தடுத்துள்ளனர். மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசாங்கங்கள் அவர்களை பழங்குடி மக்களாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க விரும்பவில்லை.


வன உரிமைகள் சட்டத்தின் (FRA) பிரிவு 3.1(m) படி, டிசம்பர் 13, 2005ஆம் ஆண்டுக்கு முன்பு ஒரு பழங்குடி நபர் வன நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அரசு அவருக்கு புதிய வன நிலத்தை வழங்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடம்பெயர்ந்த பல பழங்குடி மக்கள் (IDPs) FRA-ன் கீழ் இந்த மாநிலங்களில் நிலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சத்தீஸ்கர் அரசு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே மாநிலத்தில் மட்டுமே நிலம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறவில்லை. இருப்பினும், சத்தீஸ்கர் மாநிலம் இந்த பிரச்சினையை டெல்லியில் உள்ள பழங்குடி விவகார அமைச்சகத்திடமோ அல்லது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிடமோ பலமுறை கேட்டபிறகும் விவாதிக்கவில்லை.


2019ஆம் ஆண்டு புரு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், புரு பழங்குடி மக்களுக்கு அவர்கள் மிசோரமுக்குத் திரும்பலாம் அல்லது மாநில அரசின் குறைந்த உதவியுடன் திரிபுராவில் தங்கலாம் என இரண்டு விருப்பத்தேர்வுகள் இருந்தன. இதற்கிடையில், கடந்த 20 ஆண்டுகளாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குட்டி கோயா பழங்குடியினரின் புதிய தலைமுறை வளர்ந்து வருகிறது. ஆனால், இந்த இரண்டு மாநிலங்களும் அவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் அவர்களை புலம்பெயர்ந்தோராக நடத்துகிறார்கள். மேலும், பழங்குடியினர் வழக்கமாகப் பெறும் சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதில்லை. பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCST) கூட்டத்தில், இரு மாநிலங்களின் அதிகாரிகளும், “இந்த இடம்பெயர்ந்த பழங்குடியினருக்கு கருணையுடன் உதவ முயற்சிக்கிறோம். ஆனால், எங்களால் அதிகம் செய்ய முடியாது மற்றும் நாட்டில் உள்ள மற்ற இடம்பெயர்ந்த குழுக்களுக்குச் செய்தது போல், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும்” என்று கூறினர்.


இடம்பெயர்ந்த பல பழங்குடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பொருளாதார வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு, அங்கு தங்க விரும்புகிறார்கள். தெலுங்கானா பல இடம்பெயர்ந்த பழங்குடியினரிடமிருந்து வேளாண் நிலங்களை கையகப்படுத்தி, அங்கு மரங்களை நட்டு, அவர்களை சத்தீஸ்கருக்குத் திரும்ப கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது. ஆந்திராவில், காட்டில் புதிய வீடுகளைக் கட்டும் முயற்சிகள் வன்முறையில் நிறுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் சில நேரங்களில் இடம்பெயர்ந்த பழங்குடியினருக்கு உதவியிருக்கின்றன.  ஆனால், புதிய தலைமுறையினர் கண்ணியத்துடன் வாழ நிரந்தர இடம் தேடுகிறார்கள்.


சுப்ரான்ஷு சவுத்ரி, "Let’s call him Vasu: With Maoists in Chhattisgarh" என்ற புத்தகத்தின் ஆசிரியர். அவர் புதிய அமைதி செயல்முறையின் (New Peace Process) உறுப்பினராகவும் உள்ளார்.


Original article:
Share: