ஒரு தொகுதியை “பிரதிநிதித்துவப்படுத்துவது” என்றால் என்ன என்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் மூன்றாம் அடுக்கை வலுப்படுத்துவது போன்ற படிகளையும் மையமாகக் கொண்டு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமான மற்றும் அபத்தமான வழிகளில் உணர்ச்சிகளை அதிகரிக்க செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது. அந்த விதிகள் நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தக் கவலைகளுக்கு காரணமாக உள்ளது. மக்கள்தொகையில் அதிகமாகிவிடுவார்கள் என்ற பயத்தில், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மற்றவர்களிடம் கூறுவது ஆபத்தானதாக முடியும்.
உணர்ச்சிகள் எழும்போது, பிரச்சினையை அமைதியாகவும் நியாயமாகவும் பார்ப்பது முக்கியம். அரசாங்கம் அரசியலமைப்பைப் புறக்கணிப்பதாக முன்பு குற்றம் சாட்டிய சிலர் இப்போது அதைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்பது முரண்பாடாக இருக்கிறது. “அரசியலமைப்பின் பாதுகாவலர்கள்” (‘protectors of the Constitution) என்று அழைக்கப்படுபவர்களுக்கு சரியான காரணங்கள் இருந்தாலும், தொகுதி மறுவரையறை செயல்முறையை தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ விரும்புவதன் மூலம் முரண்பாடாக இருக்கிறார்களா?
ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் இடங்களின் எண்ணிக்கை மக்கள்தொகை அடிப்படையில் சரிசெய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இது 42வது மற்றும் அதற்குப் பிந்தைய திருத்தங்களால் 2026 வரை தாமதப்படுத்தப்பட்டது. அடுத்த தொகுதி மறுவரையறை அதன் பிறகு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இருக்கும். இது சில தென் மாநிலங்களை கவலையடையச் செய்துள்ளது. அவர்களின் அச்சங்கள் நிறைவேறும் என்பதற்கு அதிக ஆதாரம் இல்லை என்றாலும், அவர்களின் பயத்தை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை.
மக்கள்தொகை விகிதாச்சாரக் கொள்கை, கூட்டாட்சி கொள்கை மற்றும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள எந்தவொரு கொள்கையும் மற்றொன்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து நியாயமான முறையில் விவாதம் நடந்து வருகிறது. இடங்களைப் பிரிக்க மக்கள்தொகை எண்களை மட்டுமே பயன்படுத்தினால், வேகமாக மக்கள்தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்கள் மற்றவற்றைவிட அதிக இடங்களைப் பெறும் என்பது தெளிவாகிறது.
கடந்தகால மற்றும் போக்குகளின் தரவு
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 1951-52ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் 489 மக்களவை இடங்கள் இருந்தன.
1957இல் 494, மற்றும் 1967இல் 520 (1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மார்ச் 21, 1963-ல் வெளியிடப்பட்ட தொகுதி மறுவரையறை ஆணைய அறிக்கையின்படி). முந்தைய தேர்தலை விட 31 இடங்கள் சேர்க்கப்பட்டன. ஐந்து இடங்கள் குறைக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசத்தில் 43-ல் இருந்து 41 ஆகவும், சென்னை 41-ல் இருந்து 39 ஆகவும், உத்தரப் பிரதேசம் 86-ல் இருந்து 85 ஆகவும் குறைந்தன.
அசாம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் பிற மாநிலங்கள் காலப்போக்கில் இடங்களைப் பெற்றன. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் போன்ற புதிய மாநிலங்களும் இடங்களைப் பெற்றன. 1971 தேர்தலில், இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு இடங்கள் குறைக்கப்பட்டன. மொத்த இடங்களின் எண்ணிக்கை 518 ஆகக் குறைந்தது. 1977-ல், மேலும் 24 இடங்கள் சேர்க்கப்பட்டன. இது 542 இடங்களாக மாறியது. ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்கள் அதிக இடங்களைப் பெற்றன, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் பிற புதிய மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெற்றன. பின்னர், டாமன் மற்றும் டையூவிற்கு தனித் தனி தொகுதி வழங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 543 இடங்கள் கிடைத்தன. இது 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவையில் உள்ள தற்போதைய எண்ணிக்கையாகும்.
எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்
இந்தப் போக்குகளைப் பார்க்கும்போது, தொகுதி மறுவரையறை குறித்த எந்தவொரு விவாதமும் மூன்று விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்: இருக்கை ஒதுக்கீட்டை தீர்மானிக்க மக்கள்தொகையைப் பயன்படுத்துதல், பொதுக் கொள்கைகள் மக்கள்தொகை எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கின்றன மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களை எவ்வாறு உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1951 மற்றும் 2004க்கு இடையில் தொகுதி மறுவரையறை ஆணையங்களால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு, மக்களவை/ சட்ட சபை உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சிறந்த மக்கள்தொகைக்கு எந்த சூத்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. மக்கள்தொகையை மக்களவை/சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்தால், சராசரி 1951-ல் ஒரு தொகுதிக்கு 7.32 லட்சத்திலிருந்து 1967-ல் சுமார் 8.70 லட்சமாகவும், 1977-ல் 10.10 லட்சமாகவும் அதிகரிக்கும். 2024-ல், இது ஒரு மக்களவைத் தொகுதிக்கு சுமார் 27 லட்சமாகும். இதேபோல், 1951-52ஆம் ஆண்டில் 3,283 ஆக இருந்த மக்களவை/சட்ட சபை இடங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 4,123 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் இப்போது அதிக மக்கள் தொகையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 98 கோடி வாக்காளர்களைக் கொண்ட 2024 பொதுத் தேர்தலில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சராசரியாக சுமார் 18 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். உதாரணமாக, லட்சத்தீவில் 57,760 வாக்காளர்கள் இருந்தனர். அதே, நேரத்தில் மல்காஜ்கிரியில் 29.5 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.
பிரதிநிதித்துவத்தின் முதன்மைக் கொள்கையாக மக்கள்தொகை தேர்ந்தெடுக்கப்பட்டாலும், புவியியல் தொடர்ச்சி மற்றும் அரசியல் எல்லைகள் போன்ற பிற கவலைகளுக்கு இடமளிக்காமல் அது பின்பற்றப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. கடந்த காலத்தில் மதம் மற்றும் கல்வி பின்னணியை அடிப்படையாகக் கொண்ட வாக்குரிமைகளைப் போல் இல்லாமல், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான மக்கள்தொகை அளவுகோல் மட்டுமே எந்தத் தகுதிகளும் இணைக்கப்படாத ஒரே அடிப்படையாகும். உலகளாவிய வாக்குரிமை மற்றும் ஒரு வாக்கு, ஒரு மதிப்பை உறுதி செய்வதற்கான எளிய அளவுகோல் இதுவாகும். நமது அரசியலில் விரிசல்களைத் தவிர்ப்பதற்கும், நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ கூட்டாட்சி தன்மையில் சிதைவுகளை உருவாக்குவதற்கும், பிராந்திய அநீதி உணர்வைத் தவிர்ப்பதற்கும் தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்காத அளவுக்கு அளவுகோல் நிலையானதா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கூடும் நிதி ஆணையம், தற்போதைய தேவைகள், பிராந்திய இலக்குகள் மற்றும் தேசிய முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பண விநியோகத்திற்கான அதன் அளவுகோல்களை மாற்றுகிறது.
விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்: "ஒரு தொகுதியை பிரதிநிதித்துவம்” செய்வது என்றால் என்ன"? மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றுவதற்கு முக்கிய பொறுப்பாவார்கள். மேலும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் திறன் அவர்களின் தொகுதியில் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அல்ல. தொகுதியின் அளவு கேள்விகள் கேட்பது அல்லது குழுக்களில் இருப்பது போன்ற பிற கடமைகளையும் பாதிக்காது. ஒரு சிறிய தொகுதி பெரிய தொகுதியைவிட சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்ட எந்த கணக்கெடுப்புகளும் இல்லை. உதாரணமாக, 1977ஆம் ஆண்டு ஹரியானாவில் உருவாக்கப்பட்ட 10-வது நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் அல்லது டாமன் மற்றும் டையூ தொகுதியின் மக்கள், மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதை மதிப்பீடு செய்வோம்? அல்லது ஹரியானாவில், 1.6 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட நர்னால் சட்டமன்றத் தொகுதி, 5.2 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பாட்ஷாபூரைவிட அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியால் சிறப்பாகச் சேவை செய்யப்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்வோம். FPTP (First Past the Post) முறை, தொகுதியின் எண்ணிக்கை பலம் “பிரதிநிதித்துவத்திற்கு” முக்கியமில்லை. மேலும், அன்றாடப் பிரச்சினைகளைச் சமாளிக்க குடிமக்களுக்கு மக்களவை/சட்டசபை பிரதிநிதி எத்தனை முறை தேவை? தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் மூன்றாம் அடுக்குகளை வலுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். மேலும், உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளில் மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் மூட நம்பிக்கைகளைப் (fetish) பின்பற்றி அதிக இடங்களை பற்றி பேசுவதை விட, நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மிதமான தன்மை தேவைப்படும் ஒரு முதன்மை அளவுகோல்
மக்கள் தொகையை முக்கிய காரணியாகக் கொண்டு கவனம் செலுத்துவதை சரிசெய்ய வேண்டும். ஏனெனில், ஒன்றிய அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை ஊக்குவித்துள்ளது. ஒரு கொள்கை அதைப் பின்பற்றுபவர்களுக்கு தீங்கு விளைவிப்பது அரிதானதாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கிடைக்கும் நன்மையைக் குறைக்க நமக்கு ஒரு முறை தேவைப்படலாம். பணவீக்கத்திற்கு ஏற்ப பெயரளவு வளர்ச்சியை சரிசெய்வதன் மூலம் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதால், மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் எதிர்பாராத லாபத்தை நடுநிலையாக்கும் ஒரு வகுப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, 1977 தேர்தலுக்கான 543 இடங்களுக்கான 10.10 லட்சம் சராசரி இடங்களின் அடிப்படையில் மக்களவைக்கு இருக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், 2024ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையின்படி சுமார் 1,440 இடங்கள் நமக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், இந்த எண்ணிக்கையை 2024ஆம் ஆண்டிற்கான தேசிய மொத்த கருவுறுதல் விகிதத்தால் (total fertility rateTFR)), மக்கள்தொகை வளர்ச்சிக்கு விகிதாசாரமாக இருக்கும் ஒற்றை குறிப்பிடத்தக்க காரணி) வகுத்தால், இது சுமார் 680 இடங்களாகக் குறையக்கூடும். மாநில அளவிலான TFR தரவு கிடைப்பதால், மக்கள்தொகை வளர்ச்சி புள்ளிவிவரங்களை மிதப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதைப் பயன்படுத்தலாம். நிபுணர்கள் மிகவும் நுட்பமான சூத்திரத்தை பரிந்துரைக்கலாம்.
தேர்தல்களை நடத்துவதில் நிர்வாகத் திறனை அடைவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்புத் திருத்தங்களைப் பற்றி விவாதிக்க முடிந்தால், தொகுதி எல்லைகளை தீர்மானிக்க மக்கள்தொகையை மட்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் அரசியல் ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்கான வழிகளையும் விவாதிக்க முடியும்.
அசோக் லவாசா இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் மத்திய நிதிச் செயலர் ஆவார்.