புத்தொழில் இந்தியா (Startup India) முன்முயற்சியானது, குறிப்பாக பெண்களிடையே தொழில் முனைவோர் உணர்வை வளர்ப்பதில் ஒரு முக்கியமான படியாக உள்ளது. ஆனால் சமூக மற்றும் குடும்ப பாலின விதிமுறைகளால் முன்வைக்கப்படும் சவால்களுடன் பெண்களின் தொழில்முனைவை எவ்வாறு கடினமாக்குகிறது?
இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் புதுமைகளில் அதன் கவனம் குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கருத்துகளைத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கள் சில தொழில்முனைவோரிடமிருந்து வலுவான எதிர்வினைகளைத் தூண்டின. அவை, இந்தியாவின் தொழில்முனைவோர் நிலப்பரப்பின் மீது மீண்டும் கவனம் செலுத்த வழிவகுத்தன. இருப்பினும், இது பல வழிகளில் தனித்து நிற்கிறது, இதில் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் இந்த அரங்கில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கேற்பு அடங்கும்.
அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தம் 1.6 லட்சம் புத்தொழில்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி (73,000-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள்) குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரைக் கொண்டிருக்கின்றன. பெண் நிறுவனர்களைக் கொண்ட நிறுவனங்களால் திரட்டப்பட்ட நிதியின் அடிப்படையில், இந்திய தொழில்நுட்ப புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது என்று டிராக்ஸின் (Tracxn) அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் 7000 பெண்கள் தலைமையிலான புத்தொழில்கள் உள்ளன. இது நாட்டில் உள்ள அனைத்து புத்தொழில்களிலும் 7.5% ஆகும்.
ஆனால் புத்தொழில் என்றால் என்ன? இந்தியாவில் பெண்கள் தலைமையிலான புத்தொழில்களின் நிலை என்ன? பெண்கள் தலைமையிலான புத்தொழில்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்படி ஆதரவளித்துள்ளது? என்பதை ஆராய்வோம்.
புத்தொழில்கள் என்றால் என்ன?
2016-ல் தொடங்கப்பட்ட இந்திய அரசின் புத்தொழில் இந்தியா முன்முயற்சி (India’s Startup India initiative) இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே தொழில் முனைவோர் உணர்வை வளர்ப்பதில் ஒரு முக்கியமான படியாக உள்ளது. ஒரு புத்தொழிலானது புதிதாக நிறுவப்பட்ட நிறுவனத்தைக் குறிக்கிறது. பொதுவாக, ஒரு சிறிய குழு மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களுடன் உருவாக்கப்பட்டது. இது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்கி அதை நுகர்வோருக்கு சந்தைக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரீசர்ஜென்ட் இந்தியாவின் அறிக்கையின்படி, பரந்த அளவில் ஆறு வகையான புத்தொழில்கள் உள்ளன. அளவிடக்கூடிய புத்தொழில்கள் (Scalable startups), சிறு வணிக புத்தொழில்கள் (Small business startups), வாழ்க்கைமுறை தொடர்பான புத்தொழில்கள் (Lifestyle startups), வாங்கக்கூடியதான புத்தொழில்கள் (Buyable startups), பெரிய வணிக புத்தொழில்கள் (Big business startups) மற்றும் சமூக புத்தொழில்கள் (Social startups) போன்றவை ஆகும். ஒரு புத்தொழில் நிறுவனங்கள் சில அளவுகோல்களை பூர்த்தி செய்தால், அது இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (Department of Promotion of Industry and Internal Trade (DPIIT)) அங்கீகரிக்கப்படுகிறது.
(i) நிறுவனம் இணைக்கப்பட்டு செயல்பாடுகளைத் தொடங்கிய நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது.
(ii) இது ஒரு தனியாராக வரையறுக்கப்பட்ட நிறுவனம், பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை என அமைக்கப்பட வேண்டும்.
(iii) அது இணைக்கப்பட்டதிலிருந்து எந்தவொரு நிதியாண்டிலும் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ. 100 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(iv) ஏற்கனவே இருக்கும் வணிகத்தைப் பிரிப்பதன் மூலமோ அல்லது மறுசீரமைப்பதன் மூலமோ நிறுவனம் உருவாக்கப்படக்கூடாது.
(v) நிறுவனம் ஒரு தயாரிப்பு (product), செயல்முறை (process) அல்லது சேவையின் (service) மேம்பாடு அல்லது மேம்பாட்டிற்காக செயல்பட வேண்டும் மற்றும்/அல்லது செல்வம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அதிக ஆற்றலுடன் அளவிடக்கூடிய வணிக மாதிரியைக் கொண்டிருக்க வேண்டும்.
புத்தொழில் இந்தியா செயல் திட்டம் (Startup India Action Plan) மற்றும் அதைத் தொடர்ந்து வந்த புத்தொழில் இந்தியா : தொடர்ந்து முன்னேறும் திட்டம் (Startup India: The Way Ahead Programme) ஆகியவை விதிமுறைகளை எளிமையாக்கி, நிதியுதவி அளித்து, விரைவான புத்தொழில் சுற்றுச்சூழலை உருவாக்க கூட்டாண்மைகளை வளர்த்துள்ளன. புத்தொழில்கள் இந்தியாவின் முதன்மையான பெண் தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், 10 மாநிலங்களில் சுமார் 24 பயிற்சி பட்டறைகளை நடத்தி, 1,300க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை வழங்குகிறது.
புத்தொழில் இந்தியா விதை நிதித் திட்டம் (Startup India Seed Fund Scheme (SISFS)), புத்தொழில்களுக்கான நிதிகளின் நிதிகள் (Funds of Funds for Startups (FFS)), மற்றும் புத்தொழில்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (Credit Guarantee Scheme for Startups (CGSS)) ஆகியவை ஆரம்பகட்ட புத்தொழில்களுக்கு உதவும் சில திட்டங்களாகும். இந்தத் திட்டங்கள் அவர்களுக்கு நிதி ஆதரவை வழங்குகின்றன. மேலும், புத்தொழில் நிறுவனங்களை நடத்துவதை அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் ஆவணங்களைக் குறைப்பதன் மூலம் இதைச் செய்துள்ளது.
வேறு பல நடவடிக்கைகளும் உதவியுள்ளன. விற்றுமுதல் வரம்புகளைத் தளர்த்துதல் (relaxing turnover limits), காப்புரிமை விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துதல் (speeding up the patent application process) மற்றும் புத்தொழில்களுக்கு வருமான வரி விலக்குகளை வழங்குதல் (giving income tax exemptions to startups) ஆகியவை இதில் அடங்கும். இந்த முயற்சிகள் அனைத்தும் பெண்கள் தலைமையிலான புத்தொழில்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இந்த வளர்ச்சி முக்கியமாக சில்லறை விற்பனை, கல்வி தொழில்நுட்பம் மற்றும் நிறுவன பயன்பாடுகள் போன்ற துறைகளில் காணப்படுகிறது.
பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட, வேறு சில துணைத் துறைகளில் வணிகத்திலிருந்து நுகர்வோர் மின் வணிகம், இணையத்தை முதன்மையாகக் கொண்ட பிராண்டுகள் மற்றும் ஃபேஷன் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களின் கையகப்படுத்துதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021-ம் ஆண்டில், 45 வாங்குதல்கள் (buyouts) இருந்தன. 2024-ம் ஆண்டில், அந்த எண்ணிக்கை வெறும் 16 ஆகக் குறைந்தது.
இருப்பினும், 2024-ம் ஆண்டில், ஐந்து பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் பொதுவில் வெளியிடப்பட்டன. இந்த நிறுவனங்கள் MobiKwik, Usha Financial, Tunwal, Interiors and More, மற்றும் LawSikho ஆகியவை ஆகும்.
வலுவான நிதி ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் வெற்றிபெற உதவுகின்றன என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. கூடுதலாக, கல்வி, குடும்ப ஆதரவு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை பெண்கள் தொழில்முனைவோராக மாறுவதை ஊக்குவிப்பதில் முக்கிய காரணிகளாகும்.
பயிற்சி, திறன் மேம்பாடு, சந்தைப்படுத்தலுக்கான ஆதரவு, ஒழுங்குமுறை விலக்குகள் மற்றும் வாய்ப்புகள் போன்ற பிற காரணிகளும் பெண்களை தொழில்முனைவோருக்குள் கொண்டுவர உதவுகின்றன. தொழில்முனைவு வழங்கும் சுயாட்சி மற்றும் நெகிழ்வுத்தன்மைக் கொண்ட பெண்கள் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க உந்துதலாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும். இது பெண் தொழில்முனைவோருக்கான இந்திய புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த ரீசர்ஜென்ஸ் இந்தியா (Resurgence India) அறிக்கையின்படி உள்ளது.
இருப்பினும், ஒரு முக்கியமான கேள்வி எஞ்சியுள்ளது. இது, பெண்கள் தொழில்முனைவோரில் நுழைவது அவர்களின் சமூக மற்றும் குடும்ப நிலையை மாற்றுமா? பெண்கள் பொருளாதாரத் துறையில் நுழைவது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை அடைய உதவுகிறது என்றும் பாரம்பரிய பாலினத் தன்மைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் மாற்றக்கூடும் என்றும் வாதிடலாம்.
ஆனால் ஆய்வுகள் பெண்களின் இரட்டை வேலைச் சுமையின் நிலைத்தன்மையை உயர்த்திக் காட்டுகின்றன. இதன் பொருள், அவர்கள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருந்தாலும், பெரும்பாலும் வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பு கடமைகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஒரு பெண் நடத்தும் தொழில் வகை, சமூகமும் அவரது குடும்பத்தினரும் தனது பங்கை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதைப் பாதிக்கிறது.
பெண்கள் பணம் சம்பாதித்து வீட்டிற்கு அதிக பங்களிக்கும்போது, முடிவெடுப்பதில் அவர்களின் செல்வாக்கு அதிகரிக்கிறது. இது ஏற்கனவே உள்ள அதிகார இயக்கவியலை மாற்றக்கூடும். தேவை சார்ந்த மற்றும் வாய்ப்பு சார்ந்த இரண்டு வகையான தொழில்முனைவோரை வேறுபடுத்துவதும் முக்கியம். இந்த வணிகங்கள் பெண்களின் பங்கு மற்றும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் தரநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
2021-ம் ஆண்டில், பெண் தொழில்முனைவோருக்கான மாஸ்டர்கார்டு குறியீடு (Mastercard Index) 65 நாடுகளில் இந்தியாவை 57வது இடத்தைப் பிடித்தது. இந்தியாவின் தொழில்முனைவோர் அமைப்பு முக்கியமாக தேவை சார்ந்தது என்றும் உலகளாவிய தொழில்முனைவோர் ஆராய்ச்சி சங்கம் (Global Entrepreneurship Research Association) தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் வயது வந்த பெண்களில் 2.6% பேர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2023-24ஆம் ஆண்டின் MSME ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 80% ஆண்களுக்குச் சொந்தமானவை. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் ஆண்கள் அதிக நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள். நகர்ப்புற இந்தியாவில், பெண்கள் அனைத்து நிறுவனங்களிலும் 18.42% மட்டுமே வைத்திருக்கிறார்கள். சிறிய அல்லது நடுத்தர நிறுவனங்களை விட பெண்கள் மைக்ரோ நிறுவனங்களை வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவில் நிறுவனங்களின் உரிமை பாலின இடைவெளியைக் காட்டுகிறது.
எனவே, பெண்கள் தலைமையிலான புத்தொழில்கள் முக்கியத்துவம் பெறும்போது, இந்திய தொழில்முனைவோர் நிலப்பரப்பின் மறுபக்கத்தை ஆராய்வது முக்கியம். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவான மற்றும் சாதகமான புத்தொழில்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்திய அரசு பணியாற்றியுள்ளது. எவ்வாறாயினும், வாடிக்கையாளர் ஆர்டர்கள் இல்லாதது இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாகும், அதைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் தனிப்பட்ட சவால்கள் மற்றும் கடமைகள் உள்ளன.
இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இவற்றில் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், திறமையான தொழிலாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியா இன்னும் உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களில் ஒன்றாகும். தொழில்முனைவோரில் நுழைய பெண்களை ஊக்குவிப்பது தொழிலாளர் நிலையில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும். இந்தியாவில் சுமார் 71% பெண் தொழில்முனைவோர் ஐந்து பேருக்கு மேல் வேலை செய்ய மாட்டார்கள். அதிக ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்புடன், பெண்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை வளர்க்க உதவ முடியும்.