PM10 என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. டெல்லியில் ஆண்டு சராசரி PM-10 செறிவு 206 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் (µg/m3) பதிவு செய்துள்ளது. அதே சமயம், பைரின்ஹாட்டின் வருடாந்திர PM 10 அளவு 200 µg/m³ ஆகவும், பாட்னாவின் அளவு 180 µg/m³ ஆகவும் இருந்தது.


2. சுத்தமான காற்று திட்டத்தில் உள்ள நகரங்கள் PM 10 அளவை 40% வரை குறைக்க வேண்டும். அவை, 2017 அடிப்படை ஆண்டைவிட 2025-26ஆம் ஆண்டுக்குள் தேசிய காற்று தர தரநிலைகளையும் (national air quality standards) பூர்த்தி செய்ய வேண்டும். தேசிய தூய்மை காற்று திட்டம் (National Clean Air Programme (NCAP)) ஒவ்வொரு நிதியாண்டிலும் PM 10 என்ற அளவில் குறைப்பதற்கு அளவிடுகிறது.


3. டெல்லியின் PM 10 அளவுகள் தேசிய சுற்றுப்புற காற்றின் தரத் தரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தபோதிலும் (ஆண்டு காலத்திற்கு 60 µg/m3), தேசிய தலைநகர் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) அடிப்படை ஆண்டான 2017-18 உடன் ஒப்பிடும்போது PM 10 செறிவில் 15% சரிவை பதிவு செய்துள்ளது.


4. தேசிய தூய்மை காற்று திட்டத்தால் (NCAP) உள்ளடக்கப்பட்ட நகரங்களில் PM 10 அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) ஆய்வு செய்தது. 2017-18 அடிப்படை ஆண்டை ஒப்பிடும்போது, ​​23 நகரங்களில் PM 10 அளவுகள் அதிகரித்து, இரண்டு நகரங்களில் அப்படியே இருப்பதாக பகுப்பாய்வு காட்டுகிறது. மீதமுள்ள 77 நகரங்களில், PM 10 அளவுகள் மேம்பட்டுள்ளன.


5. 2017-18ஆம் ஆண்டின் NCAP அடிப்படை ஆண்டைவிட இருபத்தி ஒன்று நகரங்கள் PM-10 அளவுகளில் 40%-க்கும் அதிகமான முன்னேற்றத்தைக் காட்டின. இந்த 21 நகரங்களில் 10 நகரங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை ஆகும். அவை, பரேலி, வாரணாசி, ஃபிரோசாபாத், ஆக்ரா, மொராதாபாத், பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ, காஜியாபாத் மற்றும் ஜான்சி போன்றவை ஆகும். உத்தரகண்ட் மற்றும் பஞ்சாபிலிருந்து தலா இரண்டு நகரங்களும் இருந்தன. பகுப்பாய்வின்படி, தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், நாகாலாந்து, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து தலா ஒரு நகரம் வந்தது.


6. மகாராஷ்டிராவில் ஐந்து நகரங்களிலும், ஒடிசாவில் ஐந்து நகரங்களிலும் PM-10 அளவு அதிகரித்துள்ளது. அசாமில் நான்கு நகரங்களும், மத்தியப் பிரதேசத்தில் மூன்று நகரங்களும், பீகார், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கரில் தலா இரண்டு நகரங்களும் அதிகரித்துள்ளன.


7. தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 48 நகரங்கள், 15-வது நிதி ஆணையத்தின் மில்லியனுக்கும் அதிகமான நகர சவால் நிதியின் கீழ் நிதியளிக்கப்படுகின்றன. மேலும், 82 நகரங்கள் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் நேரடியாக நிதியளிக்கப்படுகின்றன. 2019-20 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்க மானியமாக ரூ.19,807.6 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


உங்களுக்கு தெரியுமா? 


1. PM என்பது துகள் பொருள்களைக் குறிக்கிறது. மேலும், வலதுபுறத்தில் உள்ள எண் துகள் அளவைக் குறிக்கிறது. எனவே, PM-10 என்பது 10 µm-க்கும் குறைவான காற்றியக்க விட்டம் கொண்ட திட அல்லது திரவத்தின் சிறிய துகள்களைக் குறிக்கிறது.


2. PM-10 பல்வேறு மூலங்களிலிருந்து, உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இருந்து உருவாகலாம். முதன்மை மனித உமிழ்வுகள், இரண்டாம் நிலை வளிமண்டல எதிர்வினைகள் மற்றும் இயற்கை மூலங்கள் ஆகிய மூன்று முக்கிய மூலப் பிரிவுகள் ஆகும்.


3. இந்த இரண்டு துகள் வகைகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு அளவு ஆகும். PM-10 10 µm காற்றியக்க விட்டம் அல்லது சிறிய துகள்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், PM-2.5 என்பது 2.5 µm க்கும் குறைவான காற்றியக்க விட்டம் கொண்ட துகள்களை மட்டுமே கொண்டுள்ளது.


Original article:
Share: