இந்திய சுகாதாரத் துறையை AI புத்தொழில் நிறுவனங்கள் எவ்வாறு மறுவரையறை செய்கின்றன? -ராகுல் பைட்

 செயற்கை நுண்ணறிவு (AI) இன்று பல தொழில்களை மாற்றி வருகிறது. மேலும், சுகாதாரப் பராமரிப்பு மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில், சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு பெரியதாகவும், போதுமான வளங்கள் இல்லாததாகவும் இருக்கும் நிலையில், AI-அடிப்படையிலான புத்தொழில் நிறுவனங்கள் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவர உதவுகின்றன. இந்த தொடக்க நிறுவனங்கள் மருத்துவ நோயறிதலை மேம்படுத்தவும், நோயாளிகளைக் கண்காணிக்கவும், மருந்து வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை மிகவும் திறமையாக்கவும் AI-ஐப் பயன்படுத்துகின்றன.


நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை மேம்படுத்த AI-க்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. குறிப்பாக, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும். இதை ஆதரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, AI-அடிப்படையிலான டிஜிட்டல் சுகாதார சேவைகளை உருவாக்க 1 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை ஒதுக்கியுள்ளது. பாரத் நெட் (Bharat Net) திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சிறந்த இணைய அணுகலுடன் இந்த நிதி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரப் பராமரிப்புக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் AI பயன்பாட்டை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் (National Digital Health Mission) மூலம் சுகாதாரப் பராமரிப்பை டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சி, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சுகாதார அடையாள அட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அதிக அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட தரவை உருவாக்கும், இது சுகாதாரப் பராமரிப்பில் AI பயன்பாட்டை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும்.


இந்தியாவின் சுகாதார அமைப்பு பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. நெரிசலான மருத்துவமனைகள், மிகக் குறைவான மருத்துவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் குறைந்த அணுகல். மருத்துவர்களை ஆதரிக்கும் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு பராமரிப்பை வழங்கும் ஸ்மார்ட், நிகழ்நேர கருவிகள் மூலம் இந்த சிக்கல்களைத் தீர்க்க AI புத்தொழில் நிறுவனங்கள் இப்போது உதவுகின்றன.


இந்த புத்தொழில் நிறுவனங்களில் சில Augsidius, Carewell360 மற்றும் VaidhyaMegha ஆகியவை அடங்கும்.


20,000-க்கும் மேற்பட்ட நோய்கள் மற்றும் சிகிச்சை வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை அணுகுவதன் மூலம் மருத்துவர்கள் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு ஸ்மார்ட் உதவியாளரான Augsidius AstraAI-ஐ உருவாக்கியுள்ளது.


Carewell360 சிறிய நகரங்களில் பெண்கள் சுகாதார சேவைகளை அணுகுவதை எளிதாக்குகிறது. இது தனியார், தேவைக்கேற்ப மகளிர் மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பராமரிப்பை வழங்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் (phygital) முறைகளின் கலவையைப் பயன்படுத்துகிறது.


நோயறிதலை விரைவுபடுத்தவும், நோயாளிகளை சிறப்பாக நிர்வகிக்கவும், மருத்துவமனை செயல்பாடுகளை மேம்படுத்தவும் வைத்யாமேகா (VaidhyaMegha) மருத்துவமனைகளுக்கு மேகக்கணினி அடிப்படையிலான AI கருவிகளை வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்கின்றன. Tata Elxsi AI அடிப்படையிலான இமேஜிங் கருவிகளில் செயல்படுகிறது.


நீரிழிவு நோய்க்கான AI-யால் இயங்கும் கண் பரிசோதனைகளை அதிக மருத்துவமனைகளுக்கு கொண்டு வருவதற்காக கூகிள் Forus Health மற்றும் AuroLab உடன் இணைந்துள்ளது.


AI திரைக்குப் பின்னால் உதவுகிறது. திட்டமிடல், மின்னணு சுகாதாரப் பதிவுகளை நிர்வகித்தல் (EHRs) மற்றும் பில்லிங் போன்ற பணிகளை தானியக்கமாக்க தொடக்க நிறுவனங்கள் AI-ஐப் பயன்படுத்துகின்றன. எத்தனை நோயாளிகள் வருவார்கள் என்பதைக் கணிக்க, பொருட்களை நிர்வகிக்க மற்றும் ஊழியர்களை மிகவும் திறமையாக நியமிக்க மருத்துவமனைகள் இப்போது AI-ஐப் பயன்படுத்தலாம். உரையாடும் இயலி (Chatbots) மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர், பின்தொடர்தல்களைச் செய்கிறார்கள் மேலும் இதில் மனநல ஆதரவையும் வழங்குகிறார்கள்.


இந்தியாவின் சுகாதார அமைப்பில் AI கருவிகள் மிகவும் முக்கியமானவை. அவை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. மேலும், AI மற்ற பணிகளைக் கையாளும் போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அதிகக் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.


AI-ன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுவதாகும். டெலிமெடிசின், மொபைல் சுகாதார கருவிகள் மற்றும் உள்ளூர் மொழிகளில் குரல் அடிப்படையிலான பயன்பாடுகள் மூலம், AI அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை எளிதாக அணுக உதவுகிறது.


Carewell360 மற்றும் SETV போன்ற தொடக்க நிறுவனங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை சரியான நேரத்தில் பெற உதவுகின்றன. பேச்சு மற்றும் உரையைப் புரிந்துகொள்ளும் AI கருவிகள் ஆங்கிலம் படிக்கவோ பேசவோ முடியாதவர்களுக்கு உதவுகின்றன. மொபைல் பயன்பாடுகள் மருத்துவ சேவைகளை மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு வருகின்றன. அதிகமான மக்கள் திறன்பேசிகளை பயன்படுத்துவதாலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (Ayushman Bharat Digital Mission (ABDM)) போன்ற அரசுத் திட்டங்களின் ஆதரவுடனும், இந்தக் கருவிகள் நாட்டில் எங்கும் சுகாதாரப் பராமரிப்பை கிடைக்கச் செய்கின்றன.


அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த இந்தியா பாடுபடுவதால், AI தொடக்க நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையான சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அரசாங்கம், மருத்துவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆதரவுடன், இந்த தொடக்க நிறுவனங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பெரிய சுகாதார தொழில்நுட்ப மாற்றத்திற்கு வழிவகுக்கும். இதில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், அனைவருக்கும் தரமான பராமரிப்புத் கிடைப்பதை உறுதி செய்யும்.


ராகுல் பைட், DST MATH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.


Original article:
Share: