ஒரு வாரத்திற்கும் மேலாக, பாகிஸ்தான் இராணுவம் ஒவ்வொரு இரவும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் (Line of Control(LoC)) போர் நிறுத்தத்தை மீறி வருகிறது. ஒவ்வொரு மீறலுக்கும் இந்தியாவிலிருந்து பதிலானது தகுந்தளவில் கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தன்மை என்ன? இந்த மீறல்கள் ஏன் நடக்கின்றன? அவை ஏன் நிறுத்தப்படுகின்றன?
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control(LoC)) மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள பல இராணுவப் பிரிவுகளில் வியாழக்கிழமை இரவும் தொடர்ந்து 8-வது நாளாக பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர். இது, இந்திய இராணுவம் இந்த ஒவ்வொரு மீறலுக்கும் "அளவீடு மற்றும் விகிதாசார முறையில்" (calibrated and proportionate manner) பதிலளித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் இந்தியாவின் பதிலடி, இதுவரை இரு தரப்பிலும் எந்த இறப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், பிப்ரவரி 2021-ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ இயக்குநரகங்கள் (Directorates General of Military Operations (DGMOs)) ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் போர்நிறுத்தத்தை புதுப்பித்ததில் இருந்து இந்த மீறல்கள் போர்நிறுத்தத்தின் மிகத் தீவிரமான முடிவைக் குறிக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் எப்படி உருவானது? நெருக்கடி காலங்களில் போர் நிறுத்தத்தை மீறுவது எதைக் குறிக்கிறது?
கட்டுப்பாட்டுக் கோடு : இயற்கை மற்றும் பரிணாமம்
இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்பது ஒரு முறையான ஒப்பந்தத்தைவிட ஒரு புரிதலாக உள்ளது.
இரண்டு வழக்கமான இராணுவப் படைகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் பொதுவாக ஒரு போர் முடிந்த பிறகு நடக்கும். இது நிலப்பரப்பில் ஒரு கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு இராணுவப் படையும் இந்தக் கட்டுப்பட்டு எல்லைக் கோட்டில், சொந்த நாடுகளில் உள்ள பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இதுபோன்ற போர் நிறுத்தம் கடைசியாக டிசம்பர் 1971-ல் ஏற்பட்டது. இதற்கான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பெரும்பாலும் 1948-49 போருக்குப் பிறகு கராச்சி ஒப்பந்தத்தால் (1949) நிறுவப்பட்ட "போர் நிறுத்த எல்லைக் கோடு" (Ceasefire Line) போலவே இருந்தது.
சிம்லா ஒப்பந்தம் 1972-ல் கையெழுத்தானது. இது எல்லையை "கட்டுப்பாட்டு எல்லைக் கோடு" (LoC) என்று மறுபெயரிட்டது. இது ஒரு இராணுவ எல்லையாகும். இது இந்தியா அல்லது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பிராந்தியளவில் உரிமைகோரல்களைப் பாதிக்காது. இதன் பொருள், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை அல்ல. மாறாக, இரு நாட்டு இராணுவப் படைகளும் தற்போது நாடுகளின் நிலைகளை குறிப்பதற்காக வைத்திருக்கும் ஒரு கோடாகக் கருதப்படுகிறது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு சுமார் 740 கி.மீ தூரம் உடையது. இது காஷ்மீரில் உள்ள சங்கம் (Sangam) அருகே தொடங்கி சியாச்சின் பனிப்பாறைக்கு அருகிலுள்ள NJ-9842 புள்ளி Point (NJ-9842) வரை செல்கிறது. ஜம்மு பகுதியில், கட்டுப்பாடு எல்லைக் கோடு இந்தியாவிற்கான சர்வதேச எல்லையாக (International Border (IB)) மாறுகிறது. இந்தக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் பகுதி பஞ்சாபின் எந்தப் பகுதியையும் இந்தியாவானது உரிமை கோரவில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்த எல்லையை ஒரு "வேலை செய்யும் எல்லை"யாகக் (Working Boundary) கருதுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் இந்தியப் பகுதியின் அருகில் உள்ள ஜம்முவை உரிமை கோருகிறது. எனவே, இதனால் பாகிஸ்தான் இந்த எல்லையை தீர்க்கப்படாததாகக் கருதுகிறது.
பல ஆண்டுகளாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பயனுள்ள எல்லையாக மாறியுள்ளது.
அதன் இராணுவத்தின் இயல்பான தன்மையின் காரணமாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பெரும்பாலும் இரு நாடுகளின் படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் சர்வதேச எல்லையிலிருந்து (IB) வேறுபட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் வலுவான தற்காப்பு கட்டமைப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் உள்ளனர்.
இரு நாட்டு தரப்பினரும் மறுபக்கமாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் எந்தவொரு "ஒருதலைப்பட்ச மாற்றங்களையும்" (unilateral changes) செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் பனி உருகும்போது (snow melts) அல்லது குவியும் போது (accumulates seasonally) போன்ற பருவகால மாற்றங்கள் காரணமாக கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு இயற்கையாகவே மாறக்கூடும். இதில் இராணுவ வீரர்கள் அல்லது பொதுமக்கள் (எ.கா., மேய்ப்பர்கள்) போன்ற அங்கீகரிக்கப்படாத நபர்கள் எல்லையைக் கடப்பதைத் தடுக்கவும் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இரண்டு அணு ஆயுத நாடுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள், ஒருவருக்கொருவர் எதிரெதிரே நிலைநிறுத்தப்பட்ட போர் வரலாற்றைக் கொண்டிருப்பதால், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு எப்போதும் பதட்டங்களுக்கு உள்ளாகிறது.
எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் "எல்லை நடவடிக்கைக் குழுக்களின்" (Border Action Teams) தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட அர்த்தமற்றதாக்கியுள்ளன. ஏனெனில், 1989-ல் காஷ்மீரில் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இது குறிப்பாக உண்மையின் வெளிப்பாடாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, 1972-க்குப் பிறகு முதல் துப்பாக்கிச் சூடு நடந்தபோது போர் நிறுத்தம் காலாவதியானது.
அப்போதிருந்து, ஒரு சில பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு நிலை நிறுத்தப்படும் போதெல்லாம், இரு நாடு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்கிறார்கள். சில சமயங்களில், 1990-களில் அல்லது 2016 மற்றும் 2021-க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீறல்கள் நடந்தன. குறிப்பாக, 1990கள், இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளைப் பிரிவின் (Northern Command) இராணுவ வீரர்களால் "அனைவருக்கும் இலவசம்" (free for all) என்று பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன.
ஷேக்ஸ்பியரின் வழியில், போர்நிறுத்தம் பெரும்பாலும் "கடைபிடிப்பை விட மீறலில் அதிக மரியாதைக்குரியது" (more honoured in the breach than the observance) (ஹேம்லெட், சட்டம் I) என்று குறிப்பிடுகிறது.
மீறல்கள் : நிறுத்தமும் தொடக்கமும்
மீறல்கள் ஏன் நிகழ்கின்றன?, அவை ஏன் நிறுத்தப்படுகின்றன?
1972-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நெருக்கடியின் போதும் கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளன.
2016ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு எதிரான இந்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் போன்ற வரையறுக்கப்பட்ட சிறிய-ஆயுத துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் இருந்து முழு அளவிலான எல்லை தாண்டிய நடவடிக்கைகள் வரை இத்தகைய மீறல்கள் உள்ளன.
சில நேரங்களில், இந்த மீறல்கள் தரையில் உள்ள உள்ளூர் இயக்கவியலின் விளைவாக (local dynamics on the ground) இருக்கலாம். இந்த காரணிகள் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை அல்ல.
இந்த "தன்னாட்சி இராணுவ காரணிகள்" (ஹேப்பிமான் ஜேக்கப், ”லைன் ஆன் ஃபயர்: போர் நிறுத்த மீறல்கள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் விரிவாக்க இயக்கவியல்”, 2019) இரு இராணுவங்களும் எல்லையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதிலிருந்து எழுகின்றன. இதில் மறுபுறம் உள்ள பிரிவுகளை தொடர்ந்து "சோதிக்க" வேண்டிய அவசியம், இராணுவ வீரர்களின் மன உறுதியைப் பேணுதல், இராணுவ வெறுப்புகளைத் தீர்த்து வைத்தல் அல்லது மறுபக்கத்தைவிட மேன்மையைக் காட்ட வேண்டிய அவசியம் ஆகியவை இதில் அடங்கும்.
முன்னாள் வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எச் எஸ் பனாக் உட்பட பல இந்திய ஜெனரல்கள் கூறியது போல், ஒரு தரப்பினர் மற்றவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தடுக்கும் கடுமையான உத்திக்கான விதிகள் எதுவும் இல்லை.
இருப்பினும், எழுதப்படாத நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.
உள்ளூர் கமாண்டர்களுக்கு இடையேயான "கொடி சந்திப்புகள்" (flag meetings) மற்றும் புதுதில்லி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள இரண்டு இராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநரகங்களுக்கு இடையேயான தீவிர நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அத்துமீறல்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதம் அளிக்கவில்லை, மேலும் அவ்வாறு செய்யவுமில்லை. கட்டுப்பாடு எல்லைக் கோடு ஒரு தனித்துவமான எல்லையாகும். இங்கு, வன்முறை பொதுவானது மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
தற்போதைய நெருக்கடி: இப்போது என்ன?
2021-ம் ஆண்டில், இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இரண்டும் கட்டுப்பாட்டு எல்லை கோட்டில் போர் நிறுத்தத்தை மீறுவதை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன. இந்தியா-பாகிஸ்தான் கூட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் 2003 ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய "புரிந்துணர்வு" அடைய அவர்கள் இலக்கு வைத்தனர்.
பாகிஸ்தான் இராணுவம் புதிய உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் கையாண்டது. அது ஆப்கானிஸ்தானுடனான நிலைதன்மையின்மைக்குட்பட்ட எல்லையையும் எதிர்கொண்டது. இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை, போர் நிறுத்தம் லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) சீனாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் அதிகக் கவனம் செலுத்த அவர்களுக்கு வாய்ப்பளித்தது.
விதிமீறல்கள் வருடத்திற்கு ஒரு சில குறிப்பிட்ட சம்பவங்களாகக் குறைந்ததால், உள்ளூர் மக்கள் பயனடைந்தனர். எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள் எல்லையோர கிராமங்களை நேரடியாகப் பாதிக்கிறது. இதில் வெளிப்பட்ட தவறான குண்டுகள் அல்லது தோட்டாக்கள் பொதுமக்களைக் கொல்லும். மேலும், இதில் குறிப்பிடும்படியாக, மகத்தான பயிர் விளைச்சல் மற்றும் நிலையான வாழ்வாதாரங்களில் நன்மைகள் காணப்பட்டன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த புரிதலைப் பேணுவதற்கு காரணங்கள் உள்ளன. 2019 முதல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் முறிந்ததிலிருந்து, இரு நாடுகளும் முக்கியமாக இராணுவ வழிகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன.
2021-ம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சங்கா கூறுகையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உள்ள முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்ய இயக்குநரகத்தில் உள்ள தீவிர நிகழ்வு கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் பயன்படுத்தப்படுகிறது. முக்கிய சம்பவங்களின் போது, இயக்குநர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசுகிறார்கள்.
ஏப்ரல் 29 அன்று, இராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநர் (Director General of Military Operations(DGMO)) இருந்து பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் அவசர தொலைபேசி எண்ணில் பேசினர். பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் போர் நிறுத்த மீறல்களுக்கு இந்தியத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் இந்தியப் படைகள் மீது அழுத்தம் கொடுக்க உதவுகிறது. குறிப்பாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று அஞ்சுவதால், பாகிஸ்தானின் பலவீனங்களை சோதிக்கவும் இது அனுமதிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுப்பது மட்டுமே பிரச்சினை அல்ல. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் விவகாரத்தைப் போலவே, இந்தியாவும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை (International Border (IB)) தற்செயலாகக் கடந்ததிலிருந்து அவர் பாகிஸ்தான் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெருக்கடி காலங்களில், இந்த தற்செயலான கடவுகள் (accidental crossings) ஒரு தரப்பினரால் மறுபுறம் செல்வாக்கு செலுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு என்பது பெரும்பாலும் நெருக்கடியின் போது இரு நாடு தரப்பினரும் எடுக்கும் முதல் நடவடிக்கையாகும். இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். ஏனெனில், இரு தரப்பினரும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் பல ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இருப்பினும், நிலைமை மோசமடையக்கூடிய ஆபத்து எப்போதும் உள்ளது.
பஷீர் அலி அப்பாஸ் புது தில்லியில் உள்ள இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலில் மூத்த ஆராய்ச்சி நிபுணராக உள்ளார்.