இந்தியாவுக்குத் தேவைப்படுவது, உயர்கல்வியை அர்த்தமுள்ள வகையில் சீர்திருத்துவதற்குத் தேவையான நுண்ணறிவு விவரங்களை வழங்கக்கூடிய நாடு தழுவிய, ஆற்றல்மிக்க தரவுத்தளமாகும்.
நாடு தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு ஒரு முக்கியமான சந்திப்புப் புள்ளியில் மீண்டும் எழும்போது, கல்வித் துறையில் அதன் சாத்தியமான விளைவுகளைப் பற்றி சிந்திப்பது முக்கியம். கடைசியாக விரிவான சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931-ல் நடத்தப்பட்டது. ஆனால், அது இல்லாத நிலையிலும், முக்கிய கொள்கைகளும் முக்கியமான தீர்ப்புகளும் காலாவதியான தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்து நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போதைய கட்டமைப்பின் காலாவதியான நிலை மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Classes (OBCs)) ஒதுக்கப்பட்ட பேராசிரியர் பணியிடங்களில் 60%-க்கும் மேற்பட்டவை நிரப்பப்படாமல் உள்ளன. இது மண்டல் ஆணையத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள ஆழமான முறைமை இடைவெளிகளை வெளிப்படுத்துகிறது. 2023ஆம் ஆண்டில் ஒரு முழு ஆட்சேர்ப்பு சுழற்சி முடிவடைந்த பிறகும் கூட, உயர் கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions (HEIs)) அனைத்து பேராசிரியர் நிலைகளிலும் OBC பிரதிநிதித்துவம் 27% மட்டுமே இருந்தது. இது அவர்களின் மக்கள் தொகை பங்குக்கு விகிதாசாரமாக இல்லை. இந்த பழைய மக்கள்தொகை கட்டமைப்பை திருத்துவது இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை மறுசீரமைக்கலாம். இது தொழிலாளர் சந்தைகள், கல்வி சாதனை மற்றும் வேலைவாய்ப்பு சமத்துவம் ஆகியவற்றில் விரிவான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால், கணக்கெடுப்பு 21-ம் நூற்றாண்டின் சமத்துவமின்மைக்கு இட ஒதுக்கீடுகளின் வடிவமைப்பே காலாவதியாகிவிட்டது என்பதை வெளிப்படுத்தினால் என்ன? மண்டல் ஆணையத்தின் இட ஒதுக்கீடுகள் முதலில் அதன் கட்டமைப்பை மாற்றியமைத்த காலத்திலிருந்து - தற்போது தனியார்மயமாக்கல், சீரற்ற தரம் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டாயங்களால் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பான இந்தியாவின் உயர்கல்வி நிலப்பரப்பை மக்கள்தொகை ரீதியாக எவ்வாறு மறுவடிவமைக்கக்கூடும் என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
அடிப்படை
சமீபத்திய (All India Survey on Higher Education (AISHE)) 2022-23 தரவு இந்தியா முழுவதும் உயர் கல்வி சேர்க்கையில் நிலைத்திருக்கும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது. பட்டியல் சாதியினர் 6.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை, பட்டியல் பழங்குடியினர் 2.76 மில்லியனுக்கும் அதிகமானோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 16.7 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களையும் உள்ளடக்கியது. இவை சேர்ந்து இந்தியாவின் உயர் கல்வி மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இருப்பினும், மாநிலங்கள் மற்றும் சமூகக் குழுக்களிடையே அணுகல் சீரற்றதாகவே உள்ளது.
உத்தரப் பிரதேசம் மொத்த சேர்க்கையில் (6.9 மில்லியனுக்கும் அதிகமாக) முதலிடத்தில் உள்ளது. மேலும், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்கேற்பிலும் முன்னிலை வகிக்கிறது. அதே, நேரத்தில் மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை ஒப்பீட்டளவில் அதிக பட்டியல் பழங்குடியினர் சேர்க்கையைக் காட்டுகின்றன. லடாக் மற்றும் லட்சத்தீவு போன்ற சிறிய யூனியன் பிரதேசங்கள் குறைந்த மொத்த எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும் அதிக பழங்குடியினர் பிரதிநிதித்துவத்தைக் காட்டுகின்றன. இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: சாதிவாரிக் கணக்கெடுப்பு எவ்வாறு இந்தியாவின் உயர் கல்விக் கொள்கையை அடிப்படையாக மாற்றியமைக்கும்? விவாதம் பெரும்பாலும் குறுகலாகிறது. விவாதம் பெரும்பாலும் சுருங்குகிறது. அது அதிக சந்தேகங்களுக்கு வழிவகுக்குமா? ஆனால், இதன் தாக்கங்கள் ஆழமானவை.
இட ஒதுக்கீடுகளை மறுசிந்தனை செய்தல்
சாதிவாரிக் கணக்கெடுப்பு இட ஒதுக்கீடுகளின் அவசர விரிவாக்கத்தை தாண்டி கொள்கையை வழி நடத்த வேண்டும். சாதி இன்று கடந்த காலத்தைவிட வித்தியாசமாக செயல்படுகிறது. அதன் கடுமையான தொழில் படிநிலைகள் மென்மையாகியிருக்கலாம். ஆனால், அதன் பொருளாதார மற்றும் சமூகத் தடைகள், குறிப்பாக மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து நிலைபெற்றுள்ளன. மேல்நோக்கிய இயக்கம் இட ஒதுக்கீடு பெறும் பிரிவுகளுக்குள் ஒரு சலுகை அடுக்கை உருவாக்கும் அதே நேரத்தில், கீழ் அடுக்குகள் தொடர்ந்து புறக்கணிப்பைச் சந்திக்கின்றன எனும் முரண்பாடு மறுக்க முடியாதது. இது ஒரு கொள்கை மாற்றத்தைக் கோருகிறது. பொதுவான ஒதுக்கீடுகளிலிருந்து, சாதியால் இன்னும் விலங்கிடப்பட்டவர்களுக்கும், சாதியின் பிடியிலிருந்து தப்பிக்க இட ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தியவர்களுக்கும் இடையே வேறுபடுத்தும் நுணுக்கமான வழிமுறைகளுக்கு வழிவகுக்கிறது .
கல்வி மற்றும் வேலைகளில், நியாயமான எண்ணிக்கையை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல், உண்மையான சமத்துவத்தை அடைவதே நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வருவதால் இது மிகவும் சவாலானதாக மாறுகிறது.
இந்தியாவின் உயர் கல்வி கொள்கையில் இல்லாவிட்டாலும் உண்மையில் பெரும்பாலும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது: 54,985 தனியார் நிறுவனங்கள் (91% உதவித்தொகை பெறாதவை), 32 அரசு ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. இந்த சந்தைமயமாக்கல் சாதி சமத்துவத்தை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது - 29,016 கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் முதலில் செல்வத்தால் அணுகலை வடிகட்டும்போது இட ஒதுக்கீடுகள் சிதைகின்றன. சாதிக் கணக்கெடுப்பு இந்த அமைப்பு ரீதியான புறக்கணிப்பை எதிர்கொள்ள வேண்டும், வெறுமனே அதன் பாதிக்கப்பட்டவர்களை எண்ணி, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதற்கு ஒரு நம்பகமான பதிலைத் தர வேண்டும்?
மறைக்கப்பட்ட சமத்துவமின்மைகள்
உயர்கல்வியில், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் பயனடையும் சிலர், வெற்றி பெற்றவுடன் தங்கள் சாதியை மறைக்கத் தொடங்குகிறார்கள். ஒதுக்கீடுகள் மூலம் அணுகலைப் பெற அவர்கள் தங்கள் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் பட்டம் பெற்று நல்ல வேலைகளைப் பெற்றவுடன், சாதி ஒரு பொருட்டல்ல என்பது போல் நடந்து கொள்கிறார்கள். இது ஒரு மறைக்கப்பட்ட சமத்துவமின்மையை உருவாக்குகிறது. இவ்வாறு இந்த அமைப்பு ஒரு விபரீதமான ஆபத்தை நிலைநிறுத்துகிறது. வெற்றி பெற்றவர்கள் இடஒதுக்கீட்டிற்காக சாதியைத் தேர்ந்தெடுத்து 'நினைவில்' வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் அதை 'மறந்துவிடலாம்'.
சாதிக் கணக்கெடுப்பு இந்த இரட்டைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். வெறும் யார் நிறுவனங்களுக்குள் நுழைகிறார்கள் என்பது மட்டுமல்ல, யார் உண்மையிலேயே சாதியின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதையும் வெளிக்கொண்டு வர வேண்டும். இது சாதி ஒழிப்பு அல்ல, மாறாக தந்திரமான மறைப்பு யுக்தியாகும். இங்கு சலுகை பெற்றவர்கள் சாதியின் சுமைகளை கைவிடுகிறார்கள். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கல்லூரிகளில் யார் நுழைகிறார்கள் என்பதை மட்டுமல்ல, தங்கள் சாதி அடையாளத்தை தங்களுக்கு நன்மை பயக்கும்போது மட்டுமே யார் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். இடஒதுக்கீடு பெற அதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது அவர்களின் சமூக அந்தஸ்துக்கு தீங்கு விளைவிக்கும்போது அதைப் புறக்கணிக்கிறார்கள்.
உதவி தோல்வி
இந்தியாவில், ஒரு இளங்கலை மாணவர், (உதவித்தொகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்)இந்திய ஆட்சி பணி அதிகாரிகளின் குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 கட்டணத்தில் பயிற்சி அளிக்கும் போது நாம் சாதி-மூலதன ஊடுகலவை நிறுவனமயமாக்கியுள்ளோம். உயர் கல்வி ஒரு தனி நபரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சந்திப்புப் புள்ளியில் வருகிறது. இளம் இந்தியர்கள் பெரும்பாலும் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் அல்லது தங்கள் குடும்பங்களை ஆதரிக்க உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் உயர்கல்வி வருகிறது.
பல மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல, பகுதி நேர வேலை படிப்புக்கு ஒரு நடைமுறை துணையாக இருக்கும் இடத்தில், வலுவான தொழிலாளர் பாதுகாப்புகள் இல்லாத நிலையில் இந்தியாவில் அதே மாதிரி சுரண்டலாக மாறும் அபாயம் உள்ளது. இது உயர் கல்வியில் அரசு ஆதரவு அமைப்புகளின் தேவையை அதிகரிக்கிறது. ஆனால் இது நம்மை ஒரு முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விக்கு மீண்டும் கொண்டு வருகிறது: யார் அந்த ஆதரவைப் பெற தகுதியானவர்? முன்னர், இது தகுதி மற்றும் சமூக பாதிப்பு – மிகவும் தெளிவாக, சாதி - இடையே ஒரு சமநிலையாக கட்டமைக்கப்பட்டது. இப்போது, உள்ளடக்கிய கொள்கையின் செலவு அதிகரிக்கும் நிலையில், இந்த கேள்வி இன்னும் அதிக அரசியல் மற்றும் நிதி ரீதியில் முக்கியத்துவம் பெற உள்ளது.
இறுதியில், சாதிக் கணக்கெடுப்பு - தேவையானதாக இருந்தாலும் - இந்திய உயர் கல்வியைப் பாதிக்கும் ஆழமான அமைப்பு ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. அது செய்யவும் எதிர்பார்க்கப்படவில்லை. இது சாதி பிரதிநிதித்துவத்தில் உள்ள தற்போதைய ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே எடுத்துக்காட்ட முடியும். ஆனால், தர பொருந்தாமை, நிறுவன திறனின்மை, அல்லது சீரற்ற கற்றல் விளைவுகள் இடைவெளியை தொடர்ந்து அகலச்செய்வது போன்றவற்றை அல்ல.
இந்தியாவிற்கு உண்மையில் தேவையானது, கல்வி அடைவு, வேலைவாய்ப்பு ஈடுபாடு மற்றும் நிறுவன செயல்திறன் ஆகியவற்றின் இடைவெட்டுகளைக் கைப்பற்றும் நாடு தழுவிய, இயங்குநிலை தரவுத்தளமாகும். இத்தகைய விரிவான, இளைஞர் மையப்படுத்தப்பட்ட ஆய்வு மட்டுமே உயர் கல்வியை பயனுள்ள முறையில் சீர்திருத்த தேவையான நுணுக்கமான அறிவைத் தர முடியும். சாதிவாரிக் கணடக்கெடுப்பால் மட்டும் அதை அடைய முடியாதது.
(ஆசிரியர் பொருளாதார ஆய்வுகள் மற்றும் கொள்கை மையத்தில், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார்)