முக்கிய அம்சங்கள்:
600க்கும் மேற்பட்ட கொள்கலன்களுடன் ஒரு கப்பல் மூழ்கியது. சில கொள்கலன்கள் திங்கட்கிழமை கரையில் ஒதுங்கியது. இதுவரை, எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடலோர காவல்படை உட்பட இந்திய நிறுவனங்கள் நிலைமையைக் கையாள ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடலோர காவல்படையின் கூற்றுப்படி, MSC ELSA 3 என்ற கப்பல் குறைந்தது 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367 மெட்ரிக் டன் உலை எண்ணெயை ஏற்றிச் சென்றது. ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையத்தின் (Indian National Centre for Ocean Information Services (INCOIS)) கணினி மாதிரி, இந்த எரிபொருள் அனைத்தும் கசிந்தால், அது கேரள கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதைக் காட்டுகிறது. அதனால், ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் இடையேயான பகுதிகள் பாதிக்கப்படலாம்.
ஒவ்வொரு எண்ணெய் கசிவும் வேறுபட்டது. ஏனெனில், அதன் எண்ணெயின் வகை முக்கியமானது. எந்த வகையான எண்ணெய் கசிந்துள்ளது மற்றும் கசிவு எவ்வளவு பெரியதாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள வல்லுநர்கள் தண்ணீரில் உள்ள எண்ணெயின் நிறத்தை (கருப்பு, வானவில், பழுப்பு அல்லது தெளிவானது) ஆய்வு செய்கிறார்கள். அதை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதைத் திட்டமிட இது அவர்களுக்கு உதவுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?:
எண்ணெய் கசிவுகள் கடல் சுற்றுச்சூழலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அவை மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம். மேலும், சதுப்பு நிலங்கள் மற்றும் பவளப்பாறைகளை சேதப்படுத்தும். கடற்கரைக்கு அருகில் கசிவு ஏற்பட்டால், அது மீன்பிடித் தொழிலையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
எண்ணெய் கசிவுகள் ஆபத்தானவை. ஏனெனில், எண்ணெய் தண்ணீரை விட இலகுவானது மற்றும் மேற்பரப்பில் மிதந்து, சிலிக் (slick) எனப்படும் மெல்லிய அடுக்கை உருவாக்குகிறது. காற்று மற்றும் கடல் நீரோட்டங்கள் காரணமாக இந்த கசிவு விரைவாக பரவுகிறது. எண்ணெயின் பல பகுதிகள் தண்ணீரில் தங்கி, நீண்ட கால சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களால் விரைவாக சுத்தம் செய்யப்படுவது மிகவும் முக்கியம்.
எண்ணெய் கசிவுகளை சுத்தம் செய்ய, எண்ணெய் ஈர்க்கும் பொருட்களால் செய்யப்பட்ட சிறப்பு தலையணைகள் (pillows) முதலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தலையணைகள் ஒரு பஞ்சு போல எண்ணெயை ஊறவைத்து, தண்ணீரை விட்டு விடுகின்றன.
அதன் பிறகு, அதிக எண்ணெயை உறிஞ்ச பருத்தி அல்லது பருத்தி போன்ற தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எண்ணெய் நீரை வெளியேற்ற மோட்டார்களைப் பயன்படுத்துவது மற்றொரு முறை. ஆனால் இவை ஏரிகள் போன்ற அமைதியான நீரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
எண்ணெய் தண்ணீரில் கலக்காததால், எண்ணெய் கசிவை சுத்தம் செய்வது கடினம். இதற்கு நிறைய பணம் செலவாகும் மற்றும் அதிக முயற்சி எடுக்கும். மேலும், பல மாதங்கள் நீடிக்கும்.
ஆறுகள் மற்றும் கடல்களில், நீரின் தொடர்ச்சியான இயக்கம் சுத்தம் செய்வதை கடினமாக்குகிறது. MSC ELSA 3 போன்ற ஒரு கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், கரையை அடைவதைத் தடுப்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.