இந்தியாவின் புதிய நகர்ப்புற கவலை : அதிகரித்து வரும் அதிகப்படியான ஊட்டச்சத்து பற்றி… -சந்திரன் ஜோசப்

 பல பிராந்தியங்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு கவலையாக இருக்கும் ஒரு முரண்பாடான ஊட்டச்சத்து நிலப்பரப்பில், நகர்ப்புறங்களில் அதிகப்படியான ஊட்டச்சத்து எனும் நிலை இப்போது அதிகரித்து வருகிறது.


ஹைதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடையே வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய் (Metabolic Dysfunction-Associated Fatty Liver Disease (MAFLD)) பரவுவதை ஆய்வு செய்த Nature இதழில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை, கவலையளிக்கும் கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தது. சோதனை செய்தவர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது MAFLD-ஐக் குறிக்கிறது. மேலும், 71% பேர் உடல் பருமன் கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க புள்ளிவிவரம் இந்தியாவின் நகர்ப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன் இணைந்து உருவாகி வரும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாள்பட்ட மன அழுத்தம், அதிகப்படியான உப்பை உட்கொள்ளல், போதிய தூக்கமின்மை முறைகள் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களிடையே, இதற்கு அடிப்படைக் காரணிகளாகும். தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் இலவச சிற்றுண்டிகளை  (kiosks) வழங்குவதன் மூலம் ஊழியர்களை தங்கள் மேசைகளிலே அமர வைத்திருக்கின்றன. இருப்பினும், இந்த சிற்றுண்டிகள் ஆரோக்கியமற்றவையாக உள்ளன.


நகர்ப்புற இந்தியாவின் நெருக்கடி


இந்தியா ஒரு முரண்பாடான (paradoxical) ஊட்டச்சத்து நிலப்பரப்புடன் போராடி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு பல பகுதிகளில் இன்னும் கவலையளிக்கும் நிலையில், இப்போது நகர்ப்புறங்களில் ஊட்டச்சத்து வேகமாக அதிகரித்து வருகிறது. 2021-ல், உலகளவில் அதிக எடை மற்றும் உடல்பருமன் பரவலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, இந்தப் போக்கு பெருநகர தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் தெளிவாக உள்ளது. அங்கு தொழில் வல்லுநர்கள் அறியாமல் ஒரு அமைதியான வளர்சிதை மாற்ற நெருக்கடியின் முகமாக மாறி வருகின்றனர். இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டைச் சுமை - பரவலான ஊட்டச்சத்து குறைபாடு அதிக ஊட்டச்சத்துடன் இணைந்து இருப்பது - உலக பசி குறியீட்டில் (Global Hunger Index) அதன் குறைந்த தரவரிசையில் பிரதிபலிக்கிறது.


உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) படி, தொற்றா நோய்கள் (noncommunicable diseases (NCDs)) 2019-ல் உலகளாவிய மரணங்களில் 74%-க்கு காரணமாக இருந்தன (2000-ல் இது 61% ஆக இருந்தது). இந்த நோய்கள் இந்தியா உட்பட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை விகிதாசாரமாக பாதிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின், 2024-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தொற்றா நோய்கள் மற்றும் உடல்பருமன் சமுதாயத்தில் மிகவும் பொருளாதார உற்பத்தித்திறன் உள்ள பிரிவில் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கிறது. கணிசமான கொள்கை தலையீடுகள் இல்லாமல், தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகள் தொற்றா நோய்களிலிருந்து முன்கூட்டிய இறப்பை குறைப்பதற்கான 2030 நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal (SDG)) குறிக்கோள்களை அடைய வாய்ப்பில்லை.


தமிழ்நாட்டில், 2023-24 STEPS கணக்கெடுப்பு, ஒரு அதிர்ச்சிகரமான படத்தை வரைகிறது: சென்னையில் 65%-க்கும் மேற்பட்ட மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் பராமரிப்பு சங்கிலியில் முன்னேற்றம் காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன.


உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுபவர்களில், 16% பேர் மட்டுமே இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டை அடைந்துள்ளனர் மற்றும் 18-44 வயதுடைய நபர்களுக்கு இது 9.3%-ஆக குறைகிறது. அதே வயதுக் குழுவில் உள்ள நீரிழிவு நோயாளிகளில், வெறும் 9.8% பேர் மட்டுமே இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரிக்க முடிகிறது. அதிக எடை மற்றும் உடல்பருமனின் பரவல் 31.6% மற்றும் 14.2% ஆக உள்ளது. கூடுதலாக, பதிலளித்தவர்களில் 94.2% பேர் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதில்லை என்றும், 24.4% பேர் போதுமான உடல் உழைப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் (Makkalai Thedi Maruthuvam (MTM)) திட்டம், தொற்றா நோய்கள் (noncommunicable diseases (NCDs)) கட்டுப்பாட்டுக்கான அதன் பல துறை அணுகுமுறைக்காக குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2024 முதல், பணியிட தலையீடுகள் மூலம் 3,79,635 ஊழியர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 8-கிலோமீட்டர் சுகாதார நடைப்பயிற்சி மற்றும் "சரியாக சாப்பிடும் சவால்" (Eat Right Challenge) நடத்தை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், பெருநகரங்களில் துரித உணவு விற்பனை நிலையங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஒரு வலுவான தடையாக உள்ளது.


தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey-5) உடல்பருமன் வயதுடன் படிப்படியாக உயர்வதைக் காட்டுகிறது. ஆண்களில் 15-19 வயதுவரை உள்ளவர்களில் 7% ஆக இருந்து 40 முதல் 49 வயதுவரை உள்ளவர்களில் 32% ஆக உள்ளது. அதிக எடை அல்லது உடல் பருமனின் பரவல் மிகக் குறைந்த செல்வந்தர்கள் பிரிவில் 10%-லிருந்து அதிக செல்வந்தர்கள் பிரிவில் 37% ஆக உயர்கிறது.


வயதுக் குழுக்கள் மற்றும் வருமான நிலைகள் முழுவதும் அதிக எடை மற்றும் உடல்பருமனின் பரவலான பரவல் இது ஒரு தனிப்பட்ட தொழில்சார் ஆபத்து அல்ல. மாறாக அதிகரித்து  வரும் மக்கள் தொகை அளவிலான சுகாதார நெருக்கடி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த போக்குகள் பெண்களுக்கான தரவுடன் நெருக்கமாக பொருந்துகின்றன. இடுப்பு சுற்றளவு விகிதம் (Waist-to-hip ratio (WHR)), வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. பெண்களில் 46% முதல் 65% வரை மற்றும் ஆண்களில் 28% முதல் 60% வரை (15 முதல் 49 வயது) உள்ளனர். தமிழ்நாட்டில், கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் அதிக தொற்றா நோய்கள் (noncommunicable diseases (NCDs)) பரவல் உள்ளது. அதிக எடை அல்லது உடல் பருமன் நகர்ப்புற ஆண்களில் 46.1% பேரையும், நகர்ப்புற பெண்களில் 43.1% பேரையும் பாதிக்கிறது.  கிராமப்புறங்களில் இது முறையே 35.4% மற்றும் 31.6% ஆகும்.


தமிழ்நாட்டின் பெரும்பான்மை தொழிலாளர் வளத்திற்கு பங்களிக்கும் 18 முதல் 59 வயதுக் குழு ஆரம்பகால தொற்றா நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சார்ந்திருப்பது அதிகரித்து வருவதாலும், பிற நிறுவப்பட்ட காரணிகளாலும் அதிகரிக்கிறது.


2025-ஆம் ஆண்டு Lancet கட்டுரை இந்தியாவின் அதிக எடை மற்றும் உடல்பருமன் உள்ள வயது வந்தோர் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் 450 மில்லியனை எட்டக்கூடும் என்று மதிப்பிடுகிறது. இது 2021-ல் 180 மில்லியனயாக இருந்தது. அதே நேரத்தில், குழந்தைப் பருவ உடல்பருமன் கடந்த 30-ஆண்டுகளில் 244% அதிகரித்துள்ளது மற்றும் அடுத்த 30-ஆண்டுகளில் மேலும் 121% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் கவனம்


நுகர்வோர் மட்டத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வளர்ந்து வரும் அதே வேளையில், அது போதுமானதாக இல்லை. அதிக பொறுப்பு கட்டுப்பாட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் உள்ளது. சந்தை வசதியை வழங்கும். ஆனால், ஊட்டச்சத்து குறைவாக உள்ள மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் நிரம்பியுள்ளது. நுகர்வோர் இயல்பாகவே ஆரோக்கியமற்ற விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.


இதைத் தீர்க்க, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) தலைமையிலான Eat Right இந்தியா இயக்கம், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவை ஊக்குவிக்கிறது. இதில் சுகாதார மதிப்பீடுகள், சான்றிதழ் திட்டங்கள், மற்றும் ""இன்றைவிட சற்று குறைவு" (Aaj Se Thoda Kam) போன்ற பிரச்சாரங்கள் அடங்கும். இது நுகர்வோர்களை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்ளலை படிப்படியாக குறைக்க ஊக்குவிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உயர் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (high-fat, salt, and sugar (HFSS)) உணவுகளில் பெயரிடல் செய்வதாக வாதிடுகிறது. நுகர்வோர்களை தகவலறிந்த தேர்வுகள் செய்ய அதிகாரம் வழங்குகிறது. 2022-ல், FSSAI தொகுப்பு செய்யப்பட்ட உணவுகளில் தெளிவான ஊட்டச்சத்து தகவல்களை நோக்கமாகக் கொண்ட சுகாதார நட்சத்திர மதிப்பீட்டை  (Health Star Rating (HSR)) முன்மொழிந்தது. 


எனினும், சுகாதார நட்சத்திர மதிப்பீடு அமைப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களிடையே அதன் செயல்திறன் குறித்து விவாதத்தைத் அதிகரிக்க செய்துள்ளது.


உணவு தொகுப்பு விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய உணவு பாதுகாப்பு விவகரங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு FSSAI-யால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.


இருப்பினும், இந்த முயற்சிகள் கடுமையான செயலாக்கம் மற்றும் பரந்த பல்துறை ஒருங்கிணைப்பால் ஆதரிக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து ஒழுங்குமுறை, உற்பத்தி செய்யப்படும் சந்தைப்படுத்தப்படும் மற்றும் கிடைக்கச் செய்யப்படும் பொருட்களைப் பாதிக்கும் வகையில் செய்தி பிரச்சாரங்களை தாண்டி நீட்டிக்கப்பட வேண்டும்.


சவுதி அரேபிய மாதிரி


சவுதி அரேபியா ஒரு மாதிரியை வழங்குகிறது. அதன் திட்டம் 2030-முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு NCD தடுப்பை அதன் தேசிய கொள்கை கட்டமைப்பில் இணைத்துள்ளது. இது உணவகங்களில் கலோரி பெயரிடலை அமல்படுத்துகிறது. சர்க்கரை-இனிப்பு பானங்களில் 50% கலால் வரி விதிக்கிறது மற்றும் ஆற்றல் பானங்களில் 100% வரி விதிக்கிறது. இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் வரம்புகளை நிறுவியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் சோடியம் குறைப்பு சிறந்த நடைமுறைகளை பூர்த்தி செய்யும் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை நீக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். அதன் வெற்றி அதன் உத்தியின் ஒத்திசைவில் உள்ளது. சுகாதாரம், ஒழுங்குமுறை மேற்பார்வை, தொழில்துறை இணக்கம் மற்றும் குடிமை ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் அதன்  வெற்றியுள்ளது .


இதற்கிடையில், இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு வேகமாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் சென்னை பொருளாதார தளங்களாக மாறியுள்ளன. இவை தொழில்நுட்பத் துறையால் இயக்கப்படுகின்றன. உலகளாவிய செயல்பாடுகளுக்கு இடமளிக்க, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் நெகிழ்வான மற்றும் நீட்டிக்கப்பட்ட வேலை நேரங்களை ஏற்றுக்கொள்கின்றன. இந்த மாற்றம் இரவு நேர உணவகங்கள், cloud kitchens-கள் மற்றும் உணவு விநியோக சேவைகளுக்கான கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. எனினும், இந்த வழங்கல்களில் பெரும்பாலானவை ஆற்றல்-அடர்த்தியான, ஊட்டச்சத்து-குறைவான உணவுப் பொருட்கள். பொருளாதார லட்சிய இலக்குகளுடன் இணையாக இரவு வாழ்க்கை கலாச்சாரம் விரிவடையும்போது, ஊட்டச்சத்து-உந்துதல் பொது சுகாதார நெருக்கடியின் ஆபத்தும் அவ்வாறே அதிகரிக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிபுணர்களிடையே உள்ள எண்ணிக்கைகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், தொற்றா நோய்களின் அதிகரிக்கும் சுமை இந்தத் துறையை தாண்டி விரிவடைந்துள்ளது.


தொற்றுநோய்களின் அலையை மாற்றியமைப்பதற்கு வெறும் விழிப்புணர்வு மட்டுமல்ல, செயல்பாடும் தேவைப்படுகிறது. குறிப்பாக உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை.


சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளில் - அல்லது ஊட்டச்சத்து தரங்களை பூர்த்தி செய்யத் தவறும் உணவுகளில் - வரி விதிப்பது அடுத்த கட்டமாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா ஒருபோதும் புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதில் பின்வாங்கியது இல்லை என்றால், சுகாதாரத்தை ஊக்குவிக்கும் ஒன்றை ஏன் கொண்டு வரக்கூடாது?


டாக்டர் ஏ. சந்திரன் ஜோசப் ஒரு மருத்துவர், தற்போது சென்னையில் சமூக மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறார்.



Original article:
Share: