நெகிழிப் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தும் தீர்மானத்தை (plastic phase-out resolution) இந்தியா முன்னிலைப்படுத்துகிறது -ஜெயஸ்ரீ நந்தி

 இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட சில வளரும் நாடுகள் முதன்மை பாலிமர் உற்பத்தியைக் (primary polymer production) கட்டுப்படுத்துவதை எதிர்த்தன. அதற்குப் பதிலாக நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு மேலாண்மையில் (plastic waste management) கவனம் செலுத்த முயன்றன.


மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், 2019-ம் ஆண்டு நடைபெற்ற UNEP இன் ஐ.நா. சுற்றுச்சூழல் சபையின் (UN Environment Assembly) நான்காவது அமர்வில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் குறித்த தீர்மானத்தை இந்தியா அறிமுகப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.


ஜெனீவாவில் நடந்த பேசல் (Basel), ரோட்டர்டாம் (Rotterdam) மற்றும் ஸ்டாக்ஹோம் (BRS) மாநாடுகளுக்கான கட்சிகளின் (COPs) மாநாட்டில் பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டதாவது, பி.ஆர்.எஸ். உடன்படிக்கைகளை முறையாக செயல்படுத்துவது பல காரணிகளைப் பொறுத்தது என்று அவர் கூறினார். நிதி அணுகல், தொழில்நுட்ப பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை இதில் அடங்கும்.


'செயல்படுத்தும் வழிமுறைகள்' (Means of Implementation) குறித்த அமைச்சர்கள் வட்டமேசையில், சுற்றுச்சூழல் மரபுகளை அமல்படுத்துவதற்கான இந்தியாவின் அணுகுமுறையை அமைச்சர் விளக்கினார். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் (Environment (Protection) Act), அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய இயக்கம்) விதிகள் (Hazardous and Other Wastes (Management and Transboundary Movement) Rules) மற்றும் மின்-கழிவு மேலாண்மை விதிகள்-2016 (E-Waste Management Rules) போன்ற தேசிய சட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களானது, நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் நிலையான முதலீடுகளால் ஆதரிக்கப்படுகின்றன.


COP மாநாடுகளின் போது, ​​பூபேந்தர் யாதவ் ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதில், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த நாடுகளின் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் (Intergovernmental Negotiating Committee (INC)) பணிகள் குறித்து விவாதிக்க நார்வேயால் இது ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உள்நாட்டில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார். சில ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்தல் மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (Extended Producer Responsibility (EPR)) அமல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.


"பலதரப்பு சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும், வளரும் நாடுகளின் நலன்களுக்காக தொடர்ந்து வாதிடும் அதே வேளையில் பூமிக்கு (planet) சமமான, அறிவியல் அடிப்படையிலான மற்றும் நிலையான தீர்வுகளை உறுதி செய்யும்" என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழலுக்கான கூட்டாச்சி அலுவலகத்தின் இயக்குனர் கேத்ரின் ஷ்னீபெர்கருடன் நடந்த இருதரப்பு சந்திப்பின்போது, ​​பூபேந்தர் யாதவ் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சட்டப்பூர்வமாக சர்வதேச வழிமுறையை உருவாக்குவது மற்றும் UNEA தீர்மானங்களின்படி, இரசாயனங்கள் மற்றும் கழிவுகள் குறித்த அறிவியல்-கொள்கை குழுவை (Science-Policy Panel) நிறுவுவதற்கு இந்தியாவின் ஆதரவு தொடர்பான விஷயங்களை விவாதித்தார்.


கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி, பூசனில் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச சட்டப்பூர்வ வழிமுறையை உருவாக்க, அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் (INC) 5வது கூட்டு அமர்வு ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது. இருப்பினும், 2025-ல் மற்றொரு INC அமர்வுக்கு பேச்சுவார்த்தைகளைத் தொடர வழிவகுத்தது.


"எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளும் வரை எதுவும் இறுதியானது அல்ல. உரையில் இன்னும் சில பகுதிகள் உள்ளன... நாங்கள் உண்மையான முன்னேற்றம் அடைந்துள்ளோம், மேலும் பேச்சுவார்த்தைக்கான தொடக்கப் புள்ளியாக வரைவைப் பயன்படுத்த குழு ஒப்புக் கொள்ளும் என்று நம்புகிறேன்" என்று INC 5-ன் தலைவர் லூயிஸ் வயஸ் வால்டிவிசோ கூறினார்.


இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட சில வளரும் நாடுகள் முதன்மை பாலிமர் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதை எதிர்த்தன. அதற்குப் பதிலாக, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்த முயன்றன.


BRS COP களின் உயர்மட்டப் பிரிவு, "கண்ணுக்குத் தெரியாதவற்றைக் காணச் செய்யுங்கள் : இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் சிறந்த மேலாண்மை" (Make visible the invisible: Sound management of chemicals and wastes) என்ற கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இதில் உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்தும் அமைச்சர்களின் வட்டமேசைகள் மற்றும் ஊடாடும் உரையாடல்கள் அடங்கும்.


Original article:
Share: