கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


•  கூட்டுறவு அமைச்சகம் (Cooperation Ministry) வெளியிட்ட அறிக்கையின்படி, புதிய கொள்கை நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் ஒன்றிய அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாகும். மேலும் 2025-2045 வரையிலான அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய சாதனையாக இது நிரூபிக்கப்படும்.


• கடந்த இருபது ஆண்டுகளில் உலகமயமாக்கல் (globalisation) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக புதிய கொள்கை தேவைப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.


• கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசால் தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்டது. அமித்ஷா அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1979 முதல் அதுவரை, கூட்டுறவு துறை விவசாய அமைச்சகத்தின் கீழ் இருந்தது.


• பிரதமர் மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஜூலை 7, 2021 அன்று மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, புதிய அமைச்சகமான கூட்டுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பில் இரண்டு பக்க அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் தொலைநோக்குப் பார்வை கூட்டுறவு மூலம் செழிப்பு (Sahakar se Samriddhi) என்று அறிவிக்கப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா?


•  அறிவிப்பு புதிய கூட்டுறவு அமைச்சகத்தின் பரந்த அதிகார எல்லையை வகுத்துள்ளது: துறைகள் முழுவதும் கூட்டுறவு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் கொள்கையை வகுப்பது; கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் அதன் வரம்பை ஆழப்படுத்துதல்; கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை ஊக்குவிப்பது; ஒரு மாநிலத்திற்கு மட்டுப்படுத்தப்படாத நோக்கங்களைக் கொண்ட கூட்டுறவு சங்கங்களை கலைப்பது; மற்றும் கூட்டுறவு துறைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகும்


• கூட்டுறவு மீதான அரசின் முக்கியத்துவம், அமித்ஷாவை அதற்கு அமைச்சராக தேர்ந்தெடுத்ததிலும் பிரதிபலிக்கிறது. இது பொருளாதாரத்திற்கான துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பின் ஆதாரமாக இருப்பதன் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளத்தக்கது.


• கடந்த நான்கு ஆண்டுகளில், அமைச்சகம் பல பெரிய முயற்சிகளைக் கண்டுள்ளது. பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2023 (Multi-State Cooperative Societies Act, 2023), தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (National Cooperative Exports Limited (NCEL)) உட்பட மூன்று புதிய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியது. "உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்" மற்றும் இரண்டு லட்சம் புதிய பல்நோக்கு முதன்மை விவசாய கடன் சங்கங்கள் (Multi-Purpose Primary Agricultural Credit Societies) திட்டங்களுடன் தொடங்கப்பட்டுள்ளன.


• செப்டம்பர் 8, 2022 அன்று ஒரு அறிக்கையில், கூட்டுறவு துறை நாட்டின் மொத்த விவசாய கடனில் 20%, உர விநியோகத்தில் 35% கூட்டுறவு துறையால் செய்யப்படுகிறது என்றும் உர உற்பத்தியில் 25%, சர்க்கரை உற்பத்தியில் 31%, பால் உற்பத்தியில் 10%-க்கும் மேல் கூட்டுறவு மூலம் செய்யப்படுகிறது என்றும் கோதுமை கொள்முதலில் 13%-க்கும் மேல் மற்றும் நெல் கொள்முதலில் 20%-க்கும் மேல் கூட்டுறவு துறையால் செய்யப்படுகிறது என்றும்  மீனவர்களின் வணிகத்தில் 21%-க்கும் மேல் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றுகிறது என்று கூட்டுறவு அமைச்சகம் கூறியது.


• கூட்டுறவுத் துறையின் வரலாறு சுதந்திரத்திற்கு முன்பு தொடங்குகிறது, 1904-ல் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குள், இந்தத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கம் ஏற்பட்டது, 1911-ஆம் ஆண்டளவில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் எண்ணிக்கை 5,300 ஆகவும், அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேலாகவும் உயர்ந்தது.



Original article:

Share: