இந்திய நகரங்கள் குறித்த உலக வங்கி அறிக்கை. -குஷ்பூ குமாரி

 'இந்தியாவில் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி' (Towards Resilient and Prosperous Cities in India) என்ற உலக வங்கி அறிக்கையின்படி, காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்க இந்திய நகரங்களுக்கு 2050-ஆம் ஆண்டுக்குள் $2.4 டிரில்லியன் தேவைப்படும். அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன?


தற்போதைய செய்தி:


சமீபத்தில், உலக வங்கி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியாவில் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை உருவாக்க இந்திய நகரங்களுக்கு 2050-ஆம் ஆண்டுக்குள் $2.4 டிரில்லியன் தேவைப்படும் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்து 951 மில்லியனாக உயரும் என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள், புதிய வேலைவாய்ப்புகளில் 70 சதவீதத்தை நகரங்கள் கொண்டிருக்கும் என்றும் அறிக்கை கணித்துள்ளது. வேகமான நகர்ப்புற வளர்ச்சியுடன், வழக்கமான செயல்முறைகள் தொடர்ந்தால் வெள்ளம் மற்றும் கடுமையான வெப்பம் போன்ற இரண்டு பெரிய பிரச்சினைகளை இந்திய நகரங்கள் எதிர்கொள்ள வாய்ப்புள்ளன.


2. பருவநிலை மாற்றம் மற்றும் நகரங்கள் வளர்ந்து வரும் விதம் ஆகியவை கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று அறிக்கை கூறுகிறது. 2070-ஆம் ஆண்டில், இந்த வகையான வெள்ள அபாயம் 3.6 முதல் 7 மடங்கு வரை அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும், இந்த வெள்ளத்தால் ஏற்படும் இழப்புகள் 2023-ஆம் ஆண்டில் $4 பில்லியன்களிலிருந்து 2070-ஆம் ஆண்டில் $14–30 பில்லியன்களாக உயரும், இதனால் 46.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.


3. புவி வெப்பமடைதல் மற்றும் நகர்ப்புற வெப்ப தீவு நிகழ்வு (urban heat island phenomenon) காரணமாக 2050-ஆம் ஆண்டுக்குள் வெப்பம் தொடர்பான இறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாக 3 லட்சமாக உயரக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது. வேலை நேரத்தை அதிகாலை மற்றும் பிற்பகலுக்கு மாற்றுதல், நகர்ப்புற பசுமையாக்கல், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் குளிர் கூரைகள் போன்ற நடவடிக்கைகள் 1.3 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றும் என்று அது மேலும் கூறியது.


4. நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு, பெருகி வரும் மற்றும் கடுமையாகும் வெப்ப அலைகளின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. எதுவும் மாறவில்லை என்றால், 2050-ஆம் ஆண்டளவில் இந்திய நகரங்களில் வெப்பம் தொடர்பான இறப்புகள் இரு மடங்காக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நகர்ப்புற வெப்ப தீவு விளைவு (urban heat island effect) என்ன?


நகர்ப்புற வெப்ப தீவு என்பது ஒரு உள்ளூர் மற்றும் தற்காலிக நிகழ்வாகும். இது ஒரு நகரத்திற்குள் உள்ள சில பகுதிகள் சுற்றியுள்ள அல்லது அருகிலுள்ள பகுதிகளைவிட ஒரே நாளில் அதிக வெப்ப சுமையை அனுபவிக்கும் போது ஏற்படுகிறது. இந்த மாறுபாடுகள் பெரும்பாலும் கான்கிரீட் காடுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இடங்கள் அருகிலுள்ள பகுதிகளை விட 3 முதல் 5°C வரை வெப்பமாக இருக்கும்.


5. தனியார் துறை ஈடுபாட்டை அதிகரித்தல், நிதியளிப்பு வரைபடத்தை உருவாக்குதல் மற்றும் நகராட்சித் திறன்களை உருவாக்குவதற்கான தரநிலைகளை அமைத்தல் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான தலையீடுகளுக்கு இந்த அறிக்கை பல பரிந்துரைகளை வழங்குகிறது. நகரங்களைப் பொறுத்தவரை, தணிப்பு மற்றும் தகவமைப்பு முயற்சிகளை ஆதரிக்க இடர் மதிப்பீடு மற்றும் தனியார் முதலீடு உட்பட மூலதனத் திரட்டலை இந்த அறிக்கை கோருகிறது.


நகர்ப்புற வெள்ளப் பெருக்கின் வகைகள்:


உலக வங்கியின் கூற்றுப்படி, நகர்ப்புற வெள்ளப்பெருக்கு மூன்று முக்கிய வகைகளில் உள்ளது:


(அ) நீர்வழி வெள்ளம் (Pluvial flooding): அதிக மழைப்பொழிவு மண்ணின் உறிஞ்சும் திறனையும் வடிகால் திறனையும் மீறும்போது இது நிகழ்கிறது இதனால் மேற்பரப்பில் தண்ணீர் தேங்குகிறது. நகரங்கள் வளர்ச்சியடையும்போது, அதிக கான்கிரீட் மற்றும் சாலைகள் தண்ணீரை தரையில் ஊறவிடாமல் தடுத்து வெள்ளத்தை அதிகரிப்பதன் மூலம் நிலைமையை மோசமாக்குகின்றன.


(ஆ) கடலோர வெள்ளம் (Coastal flooding): ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் அறிக்கை (United Nations Office for Disaster Risk Reduction (UNDRR)) கடலோர வெள்ளப்பெருக்கு பொதுவாக புயல் எழுச்சி மற்றும் பலத்த காற்று வீசும் அதே நேரத்தில் அதிக அலைகள் ஏற்படும்போது ஏற்படுகிறது. குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடல் மட்டம் உயர்வதால் இந்த எழுச்சி ஏற்படுகிறது என்று கூறுகிறது.


(இ) நீர்நிலை வெள்ளம்: கனமழை அல்லது உருகும் பனி ஆறுகளில் நிரம்பி வழியும் போது, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பு, நீர் மட்டம் விரைவாக உச்சத்தை அடைந்து பின்னர் மெதுவாகக் குறைகிறது. வெள்ளப்பெருக்கின் தாக்கம், மக்கள் நிறைந்த பகுதிகளில் ஆபத்தானதாக மாறும். இது அவர்களை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகிறது.


நகரங்களில் அடிக்கடி திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன. மேலும், வெள்ளப்பெருக்கு பொதுவாக 3 முதல் 6 மணி நேரம் வரை நீடிக்கும். அவை உள்ளூர் அளவில் ஏற்படுகின்றன. சிறிய பகுதிகளை பாதிக்கின்றன. இந்தியாவில், மேக வெடிப்புகள் காரணமாக, திடீர் வெள்ளப்பெருக்குகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.  இமயமலை மாநிலங்கள் பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் பனிப்பாறை (glaciers) ஏரிகள் நிரம்பி வழியும் சவாலை மேலும் எதிர்கொள்கின்றன. மேலும், அவற்றின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.



நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs))


"ஊடகவியலாளர் சந்திப்பில், உலக வங்கியைச் சேர்ந்த அகஸ்டே டானோ கோமே, நகரங்கள் தங்களை வலிமையாக்கிக் கொள்ளவும், காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் முதலீடு செய்ய, முடிவுகளை எடுக்கவும் செயல்படுத்தவும் சுதந்திரம் தேவை என்று கூறினார். 74வது திருத்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இது நடக்கும் என்று சிலர் நம்புகிறார்கள், இருப்பினும் மற்றவர்கள் அதை ஏற்கவில்லை."


1. 1992-ஆம் ஆண்டின் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளூர் சுயாட்சியை வலுப்படுத்துவதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு (Urban Local Bodies (ULBs)) அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது. இருப்பினும், 2022-ஆம் ஆண்டு வரையிலான அதிகாரப்பூர்வ தணிக்கைகள் பல மாநிலங்கள் இன்னும் அதன் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று கண்டறிந்துள்ளன.


2. முதல் நகராட்சி அமைப்பு 1687-ஆம் ஆண்டு மதராஸில் நிறுவப்பட்டது, அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. 1882-ஆம் ஆண்டு, லார்ட் ரிப்பன் (பெரும்பாலும் இந்தியாவில் உள்ளூர் தன்னாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்) உள்ளூர் தன்னாட்சிக்கான தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார், இதன்மூலம் நகரங்களை நிர்வகிக்க ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி நிர்வாகத்தின் அடித்தளத்தை அமைத்தார்.



3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)), மாநகராட்சிகள் (Municipal Corporations), நகராட்சிகள் (Municipalities), அல்லது நகர் பஞ்சாயத்துகள் (Nagar Panchayats), நம் நகரங்களில் நகர்ப்புற ஆட்சியின் அடிப்படை அலகாகும். அவை குடிமக்களுக்கான முதல் தொடர்பு புள்ளியாக இருக்கின்றன மற்றும் கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன.


4. இந்திய அரசியலமைப்பின் பகுதி IX-A இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அமைப்பு, பங்குகள் மற்றும் பொறுப்புகளை விவரிக்கிறது மற்றும் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நில பயன்பாடு முதல் பொது சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை வரையிலான பல்வேறு சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரங்களை அவற்றுக்கு வழங்குகிறது.


5. அரசியலமைப்பின் 12-வது அட்டவணை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள 18 செயல்பாடுகளை குறிப்பிடுகிறது. இந்த திருத்தம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் தேர்தல்களை நடத்துவதையும் கட்டாயமாக்கியது. உள்ளூர் தொகுதிகளிலிருந்து (wards) நகர சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மரபுரீதியான தலைவராக (ceremonial head) பணியாற்றும் போது, உண்மையான நிர்வாக அதிகாரம் மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியான நகராட்சி ஆணையரிடம் (municipal commissioner) உள்ளது.


6. இருப்பினும், நகராட்சி அமைப்புகள் கழிவு சேகரிப்பு முதல் நகர திட்டமிடல் வரை அனைத்தையும் நிர்வகிப்பதில் மிகவும் சிரமப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பலவிதமான சிக்கலான நகர்ப்புற பிரச்சினைகளை எதிர்கொள்ள போதுமான வளங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளன.


7. இதை நிவர்த்தி செய்யும் வகையில், 2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், ‘வளர்ச்சி மையங்களாக நகரங்கள்’, ‘நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு’ மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரம்’ ஆகிய திட்டங்களை செயல்படுத்த, அரசாங்கம் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை உருவாக்கும் என்று அறிவித்தது.



Original article:

Share: