புதைபடிவமற்ற எரிபொருள் (Non-fossil fuels) இப்போது இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனில் 50.1% ஆக உள்ளன—இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே.
இந்தியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெரிய காலநிலை இலக்கை அடைந்துள்ளது. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் நிறுவப்பட்ட மின்சார திறனில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்கள் 50.1 சதவீதத்தைக் கொண்டுள்ளன. 2015ஆம் ஆண்டில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2030-ஆம் ஆண்டுக்குள் 40%-ஐ எட்டுவதாக இந்தியா உறுதியளித்தது. இந்தியா 2022-ஆம் ஆண்டில், இந்த இலக்கை 50% ஆக உயர்த்தியது.
முக்கிய அம்சங்கள்:
1. அணுசக்தி, பெரிய நீர்மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட ஆதாரங்கள் 2015-ல் நிறுவப்பட்ட திறனில் 30 சதவீதத்தையும் 2020-ல் 38 சதவீதத்தையும் மட்டுமே கொண்டிருந்தன. பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் பின்னணியில் கூர்மையாக உயர்ந்தன.
2. ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறன் 485 ஜிகாவாட் ஆக இருந்தது. இதில், சூரிய, காற்று, நீர் மற்றும் உயிரி எரிவாயு உட்பட புதுப்பிக்கத்தக்கவை 185 ஜிகாவாட் என புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பெரிய ஹைட்ரோ திறன்கள் 49 ஜிகாவாட் பங்களித்தன. மேலும், அணுசக்தி 9 ஜிகாவாட் சேர்த்தது, மொத்த புதைபடிவமற்ற எரிபொருள் திறனை பாதிக்கு மேல் எடுத்தது. அனல் மின்சாரம், பெரும்பாலும் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலானது, மீதமுள்ள 242 ஜிகாவாட் அல்லது 49.9 சதவீதம் ஆகும். 2015-ல் தெர்மலின் பங்கு 70 சதவீதமாக இருந்தது.
4. குறிப்பிடத்தக்க வகையில், 2024ஆம் ஆண்டில், பெரிய நீர்மின்சாரம் உட்பட புதுப்பிக்கத்தக்க நிறுவப்பட்ட திறனில் சீனா, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு, இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்தது,
5. இந்தியாவின் ஆற்றல் கலவையில் புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்களிப்பு அதிகரிப்பு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்றாலை சக்தியின் விரைவான சேர்க்கையால் இயக்கப்படுகிறது. இருப்பினும், நிறுவப்பட்ட வெப்பத் திறன் பாதி அளவை விடக் குறைவாக இருப்பதால், இந்தியாவின் வெப்ப மின்சாரத்தை நம்பியிருப்பது 50 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அதற்கு மாறாக, சூரிய சக்தி மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் இடைவிடாது செயல்படுவதாலும், 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அனல் மின் நிலையங்கள் நாட்டின் மின்சாரத்தில் 70%-க்கும் அதிகமாக உற்பத்தி செய்கின்றன.
6. 2030-ஆம் ஆண்டுக்குள் அனல் மின் பயன்பாட்டைக் குறைத்து, 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் இலக்கை அடைய, மின் கட்டமைப்பை வலுவாகவும் நிலையானதாகவும் மாற்றுவதில் தொடங்கி, இந்தியா இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகள்
1. சூரிய ஆற்றல்: சூரிய சக்தி சூரியனின் கதிர்களிலிருந்து வருகிறது. சூரிய ஒளிமின்னழுத்த மின்கலன்களைப் பயன்படுத்தி (photovoltaic cells) மின்சாரமாக மாற்றலாம் அல்லது மாற்றாக சூரிய வெப்ப அமைப்புகள் மூலம் வெப்பத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம். அதன் மிகுதியான இருப்பு காரணமாக, சூரிய சக்தி மிகவும் பரவலாகக் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை உலகின் முன்னணி சூரிய சக்தி உற்பத்தியாளர்களில் முக்கிய நாடுகளாகும்.
2. நீர் மின்சாரம்: இது ஆறுகள், அணைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றில் பாயும் நீரின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பழமையான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வடிவங்களில் ஒன்றாகும்.
3. உயிர்த்திரள் ஆற்றல் (Biomass energy): தாவர எச்சங்கள், விலங்குக் கழிவுகள் மற்றும் மரம் போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்து உயிர்த்திரள் வருகிறது. இதை சூடாக்கவோ அல்லது திரவ அல்லது வாயு எரிபொருளாகவோ மாற்ற முடியும். இதன் பயன்பாட்டில் வெப்பமாக்கல், மின்சார உற்பத்தி அல்லது போக்குவரத்துக்கான உயிரி எரிபொருள்கள் அடங்கும். இந்தப் பொருட்கள் மீண்டும் வளரலாம் அல்லது மாற்றப்படலாம் என்பதால் இது புதுப்பிக்கத்தக்கது என்று கருதப்படுகிறது.
4. காற்றாலை: காற்று விசையாழிகள் (wind turbines) பயன்படுத்தி காற்றின் இயக்க ஆற்றலை (kinetic energy) மின்சாரமாக மாற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையில் கடலோர மற்றும் கடல் காற்றாலைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக மாறியுள்ளன.
5. புவிவெப்ப ஆற்றல் (Geothermal Energy): இந்த ஆற்றல் வடிவம் பூமியின் உள் வெப்பத்திலிருந்து பெறப்படுகிறது. இவை இயற்கையாக நிகழும் சூடான நீர் தேக்கங்களாக இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். பூமியின் மேற்பரப்பிற்கு கீழே பல்வேறு ஆழங்கள் மற்றும் வெப்பநிலைகளில் காணப்படுகிறது. இந்த புவிவெப்ப வளங்கள் மின்சாரம் உற்பத்தி மற்றும் நேரடி வெப்ப பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படலாம். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புவிவெப்ப மின் நிலையங்கள், பொதுவாக நிலத்தடி நீர்த்தேக்கங்களிலிருந்து நீராவி அல்லது சூடான நீரைப் பயன்படுத்துகின்றன.
6. கடல் அலை ஆற்றல்: இது மின்சாரத்தை உருவாக்க கடல் நீரின் இயக்கத்தைப் பயன்படுத்துகிறது. அலை ஆற்றல் சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பிலிருந்து வருகிறது. அதே, நேரத்தில் அலை ஆற்றல் நீரின் மேற்பரப்பில் அலைகளின் இயக்கத்திலிருந்து வருகிறது.
ஆற்றல் மாற்றத்தில் முன்னணியில் உள்ள முதல் 10 நாடுகள் யாவை?
உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டு ஆற்றல் மாற்றக் குறியீடு (Energy Transition Index (ETI)), நிலையான, மலிவு மற்றும் பாதுகாப்பான ஆற்றல் எதிர்காலத்தை நோக்கிய முன்னேற்றத்தின் அடிப்படையில் 120 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, ஆற்றல் மாற்றத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் இங்கே உள்ளன.
2024-ஆம் ஆண்டில், உலகளாவிய எரிசக்தி மாற்றக் குறியீட்டில் 120 நாடுகளில் இந்தியா 63வது இடத்தைப் பிடித்தது. 2023ஆம் ஆண்டில் 67வது இடத்தில் இருந்து முன்னேறியது.
02 ஆற்றல் மாற்றத்தில் கடைசி 10 நாடுகள் எவை?
WEF இன் ஆற்றல் மாற்றம் குறியீட்டில் கீழ் 10 நாடுகள்:
இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)) மற்றும் முன்னேற்றம்
1. அக்டோபர் 2, 2015 அன்று, இந்தியா தனது முதல் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை (NDC) ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) சமர்ப்பித்தது. இந்தியா UNFCCC மற்றும் அதன் பாரிஸ் உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இது 2015-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது NDC என அழைக்கப்படும் பெருகிய முறையில் அதிக லட்சிய காலநிலை நடவடிக்கை திட்டங்களின் ஐந்து ஆண்டு சுழற்சியில் செயல்படுகிறது.
2. இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு, தொடக்கத்தில் இரண்டு முக்கிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது: முதலாவதாக, 2005-ஆம் ஆண்டு அளவைவிட 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 33-35 சதவீதம் குறைப்பது, இரண்டாவதாக, 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனில் சுமார் 40 சதவீதத்தை புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் வளங்களிலிருந்து அடைவதாகும்.
3. ஆகஸ்ட் 2022-ல், இந்தியா இந்த இலக்குகளை புதுப்பித்தது: 2005 உடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 45% ஆக உயர்த்தப்பட்டது மேலும், புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான இலக்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 50% ஆக அதிகரிக்கப்பட்டது.
4. மேலும், இந்தியா 2030-ஆம் ஆண்டிற்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடையும் இலக்கை வைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடந்த 26வது காலநிலை மாநாட்டில் அறிவித்தார். மேலும், 2035-ஆம் ஆண்டுக்குள் 1 TW (500 GWஇல் இருந்து) மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைய அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள்
இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதில் பங்களித்துள்ள சில முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:
பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் திட்டம் (Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan scheme (PM-KUSUM)): இந்தத் திட்டம் சிறிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின்சக்தி பம்புகள் அமைப்பதை ஊக்குவிக்கிறது. மேலும், கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள மின்சார பம்புகளை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மாற்றுகிறது.
பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar: Muft Bijli Yojana): இது இந்திய குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மக்கள் தங்கள் வீட்டு கூரைகளில் சூரிய மின்கலங்களை (solar panels) வைப்பதற்கு தள்ளுபடி அளிக்கிறது. இது சூரிய மின்சக்தி பேனல்களின் விலையில் 40% வரை மானியம் செலுத்தும் மற்றும் இந்தத் திட்டம் இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
கிரிட் இணைக்கப்பட்ட கூரை சூரிய சக்தி திட்டம் (பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா): இந்தத் திட்டத்தில், ஒரு கட்டிடத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக ஒரு கட்டிடத்தின் கூரையில் சூரிய சக்தி பேனல்கள் வைக்கப்படுகின்றன. கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அதை மின்சார கட்டமைப்புக்கு அனுப்பலாம்.
பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டம் (Green Energy Corridor Scheme): புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின்சாரத்தை இந்தியாவின் முக்கிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கான பல திட்டங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission (NGHM)) : புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை அடையும் இலக்குடன் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்தியது. இது நமது நாட்டில் சுமார் 125 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்க உதவும்.