இந்தியாவில் ஊரக பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? -ரித்விகா பட்கிரி

 2025-26ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) செலவினத்திற்கான 60 சதவீத வரம்பு, திட்டத்தின் தேவை சார்ந்த தன்மையை கவனிக்காமல் விடுகிறதா? MGNREGS பணிகளுக்கான தேவை அதிகரிப்பு எவ்வாறு ஒரு பெரிய ஊரக நெருக்கடியை பிரதிபலிக்கிறது?


அரசு சமீபத்தில் 2025-26 நிதியாண்டின் முதல் பாதிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MGNREGS) கீழ் செலவினத்தில் 60 சதவீத வரம்பை விதித்துள்ளது. இதுவரை, இந்த திட்டம் இத்தகைய செலவு வரம்பு இல்லாமல் தேவை-சார்ந்த திட்டமாக (demand-driven programme) செயல்பட்டு வந்தது.


குறிப்பாக,  வேளாண்மை பருவத்தில், அதைச் சார்ந்திருக்கும் ஊரக சமூகங்களுக்கு இந்த வரம்பு சவாலாக இருக்கும். மேலும், வரவு செலவு அறிக்கையின் முதல் பாதியில் 20% முந்தைய ஆண்டின் மீதமுள்ள ஊதியத்தை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது என்றும் வாதிடப்படுகிறது.


ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலை கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தரவுகள் காட்டியுள்ள நேரத்தில் இந்த உத்தரவு வந்துள்ளது. ஜூன் 2024இல், சுமார் 26.39 மில்லியன் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 27.59 மில்லியனாக உயர்ந்துள்ளது.


வேலைக்கான தேவை கிடைப்பதை விட அதிகமாக உள்ளது


2025ஆம் ஆண்டு, ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு குறைந்தது 100 நாட்கள் உத்தரவாதமான கூலி வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் (economic liberalisation) பிறகு உண்மையான வேளாண் வருமானம் குறைந்து வருவதால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், வறுமை குறைப்பு மற்றும் மூலதன உருவாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஊரக தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த திட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறத. மேலும், COVID-19 பொது முடக்கத்தின் போது, வீடு திரும்பிய பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருந்தது.


இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், இந்தத் திட்டம் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமை மற்றும் தாமதமான ஊதிய விநியோகம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டது. 2018-19ஆம் ஆண்டு நிலவரப்படி, ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களில் சராசரியாக 7.4 சதவீதம் பேர் மட்டுமே 100 நாட்கள் வேலை பெற்றனர். 2023-24ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், சராசரியாக ஒரு குடும்பம் 52 நாட்கள் மட்டுமே வேலை செய்தது.


தொற்றுநோய்க்குப் பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் வேலை கேட்கும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது. இருப்பினும், வேலைக்கான தேவை மற்றும் அதன் கிடைக்கும் தன்மைக்கு இடையில் வளர்ந்துவரும் இடைவெளி, பொதுமுடக்கத்திற்கு பிறகு வேலைவாய்ப்பை பெறுவது கடினமாகிவிட்டது.


இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவு இந்த நெருக்கடியின் முக்கிய குறிகாட்டிகளை வெளிப்படுத்துகிறது. அவை:


—ஊரக ஊதிய குறைவு


— அதிக ஊரக பணவீக்கம்


— மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) கீழ் வேலைவாய்ப்புக்கான அதிக தேவை


— மந்தமான ஊரக நுகர்வு.


இந்தப் பிரச்சினைகள் வேளாண் துறையின் வளர்ச்சிகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை.


வேளாண்மை மற்றும் ஊரக வேலைவாய்ப்பு


இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக வேளாண்மை உள்ளது. 2023-24ஆம் ஆண்டில் 46 சதவீதமாக இருந்தது. அதே, நேரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில், விவசாயத்தின் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது.


2025 நிதியாண்டில் வேளாண்மை 4.6% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024இல் 2.7% ஆக இருந்தது. இருப்பினும், வேளாண் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் பெரும்பாலும் அப்படியே உள்ளது. இந்த வளர்ச்சி நல்ல காரீஃப் பயிர் மற்றும் நல்ல ரபி (குளிர்கால) பயிரையும் சார்ந்துள்ளது. இது வானிலையையும் சார்ந்து உள்ளது.


இந்தியாவில், வேளாண்மையில் வேலை செய்பவர்கள்   உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் என இரண்டு வகையினராக உள்ளனர். வேளாண் தொழிலாளர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் வேலை செய்து, பணம் அல்லது பொருட்களாக ஊதியம் பெறுகிறார்கள். உழவர்கள் தாங்களாகவே நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் அல்லது வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுத்து நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


வேளாண் தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்களில் தேக்கநிலை, வேளாண்மையின் வேலைவாய்ப்பு பங்கு 2018-19இல் 42.5 சதவீதத்திலிருந்து 2023-24இல் 46.1 சதவீதமாக அதிகரித்ததுடன், துறை மற்றும் பரந்த இந்திய பொருளாதாரத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது.


கோவிட்-19 பொது முடக்கத்தின் காலத்தில், வேளாண்மை பலருக்கு ஒரு மாற்றுத் தேர்வாகச் செயல்பட்டது. மற்ற வேலைகள் கிடைக்காதபோது, கிராமப்புறக் குடும்பங்கள் வேளாண்மையை நோக்கித் திரும்பியதாக ஆய்வுகள் காட்டுகின்றன. வீடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஒரு மாற்றுத் தொழிலாக வேளாண்மை வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.


இது ஊரக தொழிலாளர்களுக்கு வேளாண்மை இன்னும் முக்கியமானதாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. அதே நேரத்தில், நிலையான வேளாண் வளர்ச்சி மற்றும் உழவர்களின் வருமானத்தில் உயர்வு ஆகியவை பொது முதலீடு மற்றும் இந்தத் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது.



பசுமைப் புரட்சிக்குப் பிறகான ஊரக பொருளாதாரம்


தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் அறிக்கையின் படி, அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்க கணக்கெடுப்பு (2021-22), வேளாண் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.13,661 ஆகவும்,  வேளாண்  அல்லாத குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.11,438 ஆகவும் இருந்தது.  வேளாண் குடும்பங்களைப் பொறுத்தவரை, சாகுபடி வருமானம் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும். இது அவர்களுக்கு முதன்மையான ஆதாரமாகும்.

 வேளாண் குடும்பங்கள்  வேளாண்  அல்லாத குடும்பங்களுடன் ஒப்பிடும்போது பிற வருமான ஆதாரங்களில் அதிக பன்முகத்தன்மையைக் காட்டியுள்ளன. ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களில் பண்ணை அல்லாத வேலைவாய்ப்பு தோன்றிய கதை பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய ஊரகப் பொருளாதாரத்தின் மாற்றத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.


1960ஆம் ஆண்டு மற்றும் 1980ஆம் ஆண்டுக்கு இடையிலான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மறைந்த பொருளாதார நிபுணர் ராஜ் கிருஷ்ணா "இந்து வளர்ச்சி விகிதம்" (Hindu rate of growth) என்று அழைத்தார். இது சராசரியாக 4 சதவீதமாக இருந்த குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. 1960ஆம் ஆண்டுகளில், வேளாண்மையில் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் சுமார் 1 சதவீதமாக இருந்தது. இது 1968-69 மற்றும் 1975-76ஆம் ஆண்டுக்கு இடையில் 2.2 சதவீதமாக  சிறிதளவு அதிகரித்தது.


1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியா தனது மக்களுக்கு உணவளிக்க போதுமான அரிசி மற்றும் கோதுமையை உற்பத்தி செய்ய உதவியது. ஆனால், அதன் பலன்கள் அனைவருக்கும் சமமாக இல்லை. அவை:


– வெவ்வேறு பகுதிகளில் சமமற்ற வளர்ச்சி

– வேளாண்மைக்கு மழையை நம்பியிருக்கும் பகுதிகளைப் புறக்கணித்தல்

– தினை மற்றும் பிற தானியமற்ற உணவுகள் போன்ற சத்தான பயிர்களில்  குறைவான கவனம் செலுத்துதல்

– வளங்கள் இல்லாத ஏழை உழவர்களை விட்டுவிடுதல் போன்ற  காரணங்களுக்கு வழிவகுத்தது.


மேலும், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கவலைகளையும் இது எழுப்பியது.


ஊரக பண்ணை சாராத வேலைவாய்ப்பு அதிகரிப்பு


இந்தியாவில் பசுமைப் புரட்சி பற்றி மற்றொரு விவாதம் உள்ளது. அது வேளாண்மைக்கு வெளியே கிராமப்புற வேலைகளின் வளர்ச்சிக்கு உதவியதா என்பது தான். பண்ணை உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம், பசுமைப் புரட்சி கிராமங்களில் அதிக செலவினங்களுக்கு வழிவகுத்தது என்பது பொதுவான நம்பிக்கை. இது, சிறு, உழைப்பு மிகுந்த கிராமப்புற வணிகங்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரித்தது.


இந்த செலவின அதிகரிப்பு பதப்படுத்தப்பட்ட பண்ணை பொருட்கள் போன்ற பொருட்களுக்கான தேவையையும் அதிகரித்தது. பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இந்த வகையான வளர்ச்சியால் பயனடைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், அதிகரித்து வரும் விவசாய செலவுகள் மற்றும் பசுமைப் புரட்சி நன்மைகளை சமமற்ற முறையில் பகிர்ந்து கொள்வது பல ஊரக குடும்பங்களை வாழ்க்கைக்காக வேளாண் அல்லாத வேலைகளைத் தேட கட்டாயப்படுத்தியது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.


வேளாண்மையில் ஏற்படும் நெருக்கடி காரணமாக கிராமப்புற பண்ணை சாராத வேலைகள் பெரும்பாலும் வளர்கின்றன என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். கிராமப்புற பண்ணை சாராத வேலைகள் வளர்ந்து வரும் விதம் இன்னும் விவாதத்திற்குரியது. ஆனால், கூலித் தொழிலாளர்கள், உரங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதால், வேளாண்மையைத் தொடர பல விவசாயிகள் இப்போது அதிக கடன்களை வாங்குகிறார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.


தற்போதைய, ஊரக பிரச்சனை குறித்த பெரிய கேள்வி என்னவென்றால், வேளாண் துறையில் வளர்ச்சி இருந்தபோதிலும், கிராமப்புற தொழிலாளர்கள் போதுமான வேலைவாய்ப்பைக் கண்டறிய போராடுகின்றனர். கடன் அணுகலை எளிதாக்குதல், நேரடி வரிகளைக் குறைத்தல் (பெருநிறுவன வரிகள் போன்றவை), மற்றும் வணிகம் செய்வதற்கான எளிமையை ஊக்குவித்தல் போன்ற விநியோக  கொள்கைகள் முக்கியமானவையாக இருந்தாலும், அவை வேலை உருவாக்கம் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பின் தரம் போன்ற அடிப்படைக் கவலைகளை நிவர்த்தி செய்வதில் குறைவாகவே உள்ளன.


உதாரணமாக, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், செலவு வரம்பு இந்தத் திட்டத்தின் தேவை-உந்துதல் தன்மையை புறக்கணிக்கிறது. குறிப்பாக, நீர்ப்பாசனம், சேமிப்பு மற்றும் காலநிலை-எதிர்ப்பு வேளாண் நடைமுறைகள் போன்ற பகுதிகளில் வேளாண்மையில் பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் மற்றும் வேளாண்மை இரண்டும் கோவிட்-19 பொது முடக்கத்தின் போது, மக்கள் உயிர்வாழ உதவியது. எனவே எதிர்கால கொள்கைகள் இதை மனதில் கொள்ள வேண்டும்.



Original article:

Share: