இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் இரயிலை உருவாக்குவதற்கான தேடல் -ரோஷ்னி யாதவ்

 இந்திய இரயில்வே சமீபத்தில் தனது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல்  இரயில் பெட்டியை சோதித்த நிலையில், இந்தத் திட்டம் எதை உள்ளடக்கியது?, ஹைட்ரஜன் ஏன் எதிர்காலத்தின் எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


இந்த வார தொடக்கத்தில், இந்திய இரயில்வே சென்னையில் உள்ள அதன் ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory (ICF)) முதல் ஹைட்ரஜன் இயங்கும் இரயிலை வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் இரயிலை (hydrogen-powered train) உருவாக்குவதற்கான தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் சோதனையில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது உலகின் சில இரயில்வே நிர்வாகங்கள் மட்டுமே முயற்சித்த ஒன்று மற்றும் பெரும்பாலான திட்டங்கள் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளன. இந்த சூழலில், இந்த திட்டம் மற்றும் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission) பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நாட்டின் இலக்கை ஆதரிப்பதால்,  ICF  திட்டம் இந்திய ரயில்வேக்கு முக்கியமானது. தூய்மையான எரிபொருளான ஹைட்ரஜனை அதிகமாகப் பயன்படுத்துவது புதைபடிவ எரிபொருட்களின் தேவையைக் குறைக்க உதவும்.


2. இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலம் இந்த திட்டத்தை 2020-21 ஆம் ஆண்டில் தொடங்கியது. இது இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில் இரண்டு வழக்கமான 1600 குதிரைத்திறன் (HorsePower (HP)) டீசல் என்ஜின்களை ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களில் இயக்க மாற்றுவது அடங்கும். இரண்டாவது பகுதியில் ஹரியானாவின் ஜிந்தில் ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை (refuelling station) அமைப்பதும் அடங்கும்.


3. திட்டத்தின் மொத்த செலவு தோராயமாக ரூ. 136 கோடி ஆகும். இதன் முதன்மையான வடிவமைப்பு, சரிபார்ப்பு மற்றும் சோதனை ஆகியவை இந்திய இரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (Research Design & Standards Organisation (RDSO)) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.


4. இந்த ஹைட்ரஜன் இரயில் ஹரியானாவில் உள்ள வடக்கு இரயில்வேயில் 356 கி.மீ தொலைவைக் கொணட ஜிண்ட் (Jind) மற்றும் சோனேபட் நிலையங்களுக்கு (Sonepat stations) இடையே இயங்கும். மேலும், இது இரண்டு சுற்று பயணங்களை மேற்கொள்ளும். ஜிண்டில் உள்ள ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.


5. இரயில்வேயில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் புதியது. மேலும், ஹைட்ரஜன் மிகவும் எரியக்கூடியது என்பதால் பல சவால்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுடன் வருகிறது. இந்த திட்டத்தில், இரண்டு டீசல் ரயில் பெட்டிகள் ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் இயங்கும் வகையில் மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியும் 220 கிலோ ஹைட்ரஜனை சிறப்பு சிலிண்டர்களில் கொண்டு செல்லும். அவை உயர் அழுத்தத்தில் (350 பார்) சேமிக்கப்படும். ஹைட்ரஜன் சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் செல்களை வைத்திருக்கும் அமைப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இது பல முறை சோதிக்கப்படுகிறது.


6. ஹைட்ரஜன் மிகவும் இலகுவான தனிமம் ஆகும். இது நிறமற்றது, மணமற்றது, சுவையற்றது மற்றும் அதிக எரியக்கூடியது. அதன் பொதுவான பண்புகள் காரணமாக, ஹைட்ரஜனைக் கையாளும் போது பாதுகாப்பு நடவடிக்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


7. ஹைட்ரஜன் இரயிலில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும். இவற்றில் அழுத்தத்தை சரிசெய்யும் வால்வுகள், கசிவு கண்டறிதல் அமைப்புகள் மற்றும் நெருப்பு கண்டறியும் சென்சார்கள் ஆகியவை அடங்கும். இது வெப்பநிலை கண்டறிதல் அமைப்புகளையும் கொண்டிருக்கும். கூடுதலாக, இரயிலில் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட காற்றோட்டம் பொருத்தப்பட்டிருக்கும்.


8. பாதுகாப்பு தொடரபான தரங்களை உறுதி செய்வதற்காக ஒரு தனிபட்ட முறையில் மூன்றாம் தரப்பு பாதுகாப்பு தணிக்கையாளர் கொண்டுவரப்பட்டுள்ளார். இந்த தணிக்கையாளர் ஜெர்மனியைச் சேர்ந்த 'டெக்னிஷர் உபர்வாச்சுங்ஸ்வெரின் சுட்' (Technischer Überwachungsverein Süd’ (TUV-SUD)) ஆவார். பொறியியல் வடிவமைப்பு மற்றும் மாற்றும் பணி சென்னையின் ICF இல் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணியை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேதா சர்வோ டிரைவ்ஸ் (Medha Servo Drives) என்ற நிறுவனம் கையாள்கிறது.



எரிபொருளாக ஹைட்ரஜன்


1. இயற்கையில் மிகவும் பொதுவான தனிமமான ஹைட்ரஜன், மற்ற தனிமங்களுடன் இணைந்து மட்டுமே இருக்கும். மேலும், நீர் போன்ற இயற்கையாக நிகழும் சேர்மங்களிலிருந்து (இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவின் கலவையாகும்) பிரித்தெடுக்கப்பட வேண்டும். இது ஒரு சுத்தமான மூலக்கூறு. ஆனால், அதைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆற்றல் மிகுந்தது.


2. சுத்தமான எரிபொருளாக ஹைட்ரஜனின் ஆற்றல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக அறியப்படுகிறது. இருப்பினும், 1970ஆம் ஆண்டுகளின் எண்ணெய்யின் விலை உயர்வுக்கு பிறகுதான், ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களை மாற்றும் என்று மக்கள் தீவிரமாக நினைத்தனர்.


3. ஹைட்ரஜனை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலங்கள் மற்றும் முறைகள் வண்ண லேபிள்களைப் பயன்படுத்தி வகைப்படுத்தப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்போது, அது சாம்பல் ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. இன்று உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான ஹைட்ரஜன் இந்த வகையின் கீழ் வருகிறது.


4. ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பை (carbon capture and storage) உள்ளடக்கியது என்றால், அது நீல ஹைட்ரஜன் (blue hydrogen) என்று அழைக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் எலக்ட்ரோலைசர்களைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்போது, அது பசுமை ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது.


5. பசுமை ஹைட்ரஜனுக்கு குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன :


(i) போக்குவரத்து, இரசாயனங்கள் மற்றும் இரும்பு மற்றும் எஃகு போன்ற பல்வேறு தொழில்களை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கப் பயன்படுத்தக்கூடிய தூய எரியும் மூலக்கூறாகும்.


(ii) புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம். இந்த ஆற்றல் கட்டத்தால் சேமிக்கவோ பயன்படுத்தவோ முடியாத அதிகப்படியான ஆற்றலாகும்.


தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்


1. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission (NGHM)) 2023இல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா எரிசக்திக்கான சுதந்திரத்தை அடைய உதவுவதில் பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது. 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இந்தியாவின் இலக்கையும் இது ஆதரிக்கிறது.


2. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) ஆதரவுடன், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (NGHM), பசுமை ஹைட்ரஜனை இந்தியாவிற்கு வளர்ந்து வரும் மற்றும் நம்பிக்கைக்குரிய துறையாகக் கருதுகிறது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே இதன் குறிக்கோள் ஆகும்.


3. இந்த இலக்குகளை அடைய, 2030ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய போதுமான திறனை உருவாக்க இந்த திட்டத்தின் மூலம் திட்டமிட்டுள்ளது.



Original article:

Share: