2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் (Amrit Bharat Station Scheme (ABSS)) இந்திய ரயில்வே வலையமைப்பில் உள்ள நிலையங்களை மேம்படுத்துவதைநோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தபோது, நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளதாகக் கூறினார். ஜூலை 26 அன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே மேம்படுத்தல் திட்டத்தில் தமிழ்நாடு ஒரு முக்கிய பகுதியாகும். அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 நிலையங்களை அரசு மறுவடிவமைப்பு செய்து வருகிறது என்றார்.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் இந்திய ரயில்வே வலையமைப்பில் உள்ள நிலையங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் ஒரு நீண்டகால தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. இதில் முக்கிய திட்டங்களை உருவாக்குதல், பல்வேறு வகையான இணைப்பை ஊக்குவித்தல், பயணிகளுக்கு சிறந்த ரயில் நிலைய அணுகல் போன்றவை அடங்கும்.
அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டம் ஏன் தொடங்கப்பட்டது?
ரயில் நிலையங்களை தூய்மையாகவும், வசதியாகவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாற்றுவதற்காக அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டது. மேம்படுத்தல்களுக்குப் பிறகு, ரயில் நிலையங்களில் சிறந்த திறந்தவெளிப் பகுதிகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், மின்தூக்கி, மின்படிக்கட்டுகள், இலவச வைஃபை, ஓய்வறைகள், சந்திப்பு இடங்கள், தோட்டங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒவ்வொரு நிலையத்திலும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன?
ரயில்வே அமைச்சகம், அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 1,300க்கும் மேற்பட்ட நிலையங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மே மாதத்தில், பிரதமர் மோடி 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் அமைந்துள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார். இந்த நிலையங்கள் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்கள்
இந்த ரயில் நிலையங்கள் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன:
ஆந்திரப் பிரதேசம் : சூல்லூர்பேட்டை
அசாம் : ஹைபர்கான்
பீகார் : பிர்பைண்டி, தாவே
சத்தீஸ்கர் : டோங்கர்கர், பானுபிரதாப்பூர், பிலாய், உர்குரா, அம்பிகாபூர்
குஜராத் : சமகியாலி, மோர்பி, ஹப்பா, ஜாம் வந்தலி, கனலஸ் சந்திப்பு, ஓகா,
மிதாபூர், ரஜூலா சந்திப்பு, சிஹோர் சந்திப்பு, பாலிதானா, மஹுவா, ஜாம் ஜோத்பூர், லிம்ப்டி, டெரோல், கரம்சாத், உத்ரான், கொசம்பா சந்திப்பு, டாகோர்
ஹரியானா : மண்டி டப்வாலி
இமாச்சல பிரதேசம் : பைஜ்நாத் பப்ரோலா
ஜார்கண்ட் : சங்கர்பூர், ராஜ்மஹால், கோவிந்த்பூர் சாலை
கர்நாடகா : முனிராபாத், பாகல்கோட், கடக், கோகக் சாலை, தார்வாட்
கேரளா : வடகரா, சிராயின்கீழ்
மத்தியப் பிரதேசம் : ஷாஜாபூர், நர்மதாபுரம், கட்னி தெற்கு, ஸ்ரீதம், சியோனி, ஓர்ச்சா
மகாராஷ்டிரா : பரேல், சின்ச்போக்லி, வடலா சாலை, மாட்டுங்கா, ஷஹாத்,
லோனந்த், கெட்கான், லாசல்கான், முர்திசாபூர் சந்திப்பு, தேவ்லாலி,
துலே, சவ்தா, சந்தா கோட்டை, NSCB இத்வாரி சந்திப்பு, அம்கான்
புதுச்சேரி : மாஹே
ராஜஸ்தான் : ஃபதேபூர் ஷேகாவதி, ராஜ்கர், கோவிந்த் கர், தேஷ்னோக்,
கோகமேரி, மாண்டவர் மஹுவ சாலை, பூண்டி, மண்டல் கர்
தமிழ்நாடு : சமல்பட்டி, திருவண்ணாமலை, சிதம்பரம், விருத்தாசலம் சந்திப்பு,
மன்னார்குடி, போளூர், ஸ்ரீரங்கம், குளித்துறை, செயின்ட் தாமஸ் மவுண்ட்
தெலுங்கானா : பேகம்பேட், கரீம்நகர், வாரங்கல்
உத்தரப்பிரதேசம் : பிஜ்னோர், சஹாரன்பூர் சந்திப்பு, இத்கா ஆக்ரா சந்திப்பு, கோவர்தன், ஃபதேஹாபாத், கர்ச்சனா, கோவிந்த்புரி, பொக்ராயன், இஸ்ஸத்நகர், பரேலி நகரம், ஹத்ராஸ் நகரம், உஜானி, சித்தார்த் நகர், சுவாமிநாராயண் சாப்பியா, மைலானி சந்திப்பு, கோலா கோகரநாத், ராம்காட் ஹால்ட், சுரைமான்பூர், பல்ராம்பூர்
மேற்கு வங்காளம் : பனகர், கல்யாணி கோஷ்பரா, ஜாய்சண்டி பஹார் போன்றவையாகும்.