இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சி அடைந்தது, இது கடந்த ஐந்து காலாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். -ஷிஷிர் சின்ஹா

 உற்பத்தி மற்றும் சேவைகள் வலுவாக வளர்ச்சி அடைந்துள்ளன. அதே நேரத்தில் வேளாண்மை மற்றும் சுரங்கத் துறைகள் பலவீனமான வளர்ச்சியைக் காட்டின. 2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (Q1) இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியடைந்ததாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-24ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 8.4%-க்குப் பிறகு இது மிக விரைவான வளர்ச்சியாகும்.


சிறப்பம்சங்கள்:


* 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சியடைந்தது. இது 2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5% வளர்ச்சியைவிட அதிகமாகும். 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8% வளர்ச்சியடைந்தது.


* வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் 1.5% உடன் ஒப்பிடும்போது 3.7% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்தன.


* இரண்டாம் நிலைத் துறை வலுவான வளர்ச்சியைக் காட்டியது. உற்பத்தி 7.7% ஆகவும் கட்டுமானம் 7.6% ஆகவும் இருந்தது. இரண்டும் நிலையான விலையில் 7.5%-க்கு மேல் வளர்ச்சியைப் பதிவு செய்தன.


* சுரங்கம் மற்றும் குவாரி 3.1% குறைந்துள்ளது. அதே நேரத்தில் மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாடுகள் முதல் காலாண்டில் 0.5% சற்று வளர்ந்தன.


* மூன்றாம் நிலைத் துறை 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் 9.3% வளர்ச்சியடைந்தது. 2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.8% ஆக இருந்தது.


* அரசாங்க இறுதி நுகர்வுச் செலவு (GFCE) 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெயரளவு அடிப்படையில் 9.7% அதிகரித்துள்ளது, இது 2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4% வளர்ச்சியிலிருந்து கூர்மையான உயர்வு ஆகும்.


* உண்மையான தனியார் இறுதி நுகர்வுச் செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) 202025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.0% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 8.3% வளர்ச்சியைவிடக் குறைவு ஆகும்.


* மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation (GFCF)) 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைவிட, நிலையான விலையில் 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.


வலுவான வளர்ச்சி


ICRA-வின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.4%-ஆக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8%-ஆக உயர்ந்துள்ளது. 


இது எதிர்பார்த்ததைவிட அதிகமாகும். ஏனெனில் முந்தைய குறிகாட்டிகள் மந்தநிலையைக் குறிப்பிட்டன. உற்பத்தி மற்றும் சேவைகளில் எதிர்பார்த்ததைவிட வலுவான செயல்திறன் GVA-வில் 7.6% வளர்ச்சியை ஆதரித்ததாக அவர் விளக்கினார். இருப்பினும், வேளாண்மை மற்றும் சுரங்கம் கணிக்கப்பட்ட அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.


வருமான வரி நிவாரணம், 100-அடிப்படை-புள்ளி விகிதக் குறைப்பு, காரீப் விதைப்பில் நல்ல முன்னேற்றம் மற்றும் வரவிருக்கும் GST மாற்றங்கள் காரணமாக தனியார் நுகர்வு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 இருப்பினும், பண்டிகைக் காலத்தில் வரி குறைப்புக்கள் நடைமுறைக்கு வரும்வரை அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வீட்டுச் செலவு தாமதமாகலாம். மேலும், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஏற்படக்கூடிய வேலை இழப்புகள் வீட்டு நம்பிக்கையைப் பாதிக்கலாம்.


2026 நிதியாண்டின் முதல் காலாண்டு எதிர்பார்த்ததைவிட வலுவாக இருந்தாலும், அரசாங்க மூலதனச் செலவு குறைவாகவும், அமெரிக்க வரிகள் மற்றும் அபராதங்கள் காரணமாக ஏற்றுமதிகள் பலவீனமாகவும் இருப்பது வரவிருக்கும் காலாண்டுகளில் வளர்ச்சியைக் குறைக்கலாம். GST மாற்றங்கள் சில நிவாரணங்களை வழங்கக்கூடும். 


ஆனால், அதிலும் நிச்சயமற்றத் தன்மை நீடிக்கிறது. ICRA, நிதியாண்டு 2026-க்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 6%-ஆக வைத்திருக்கிறது. மேலும், வலுவான காலாண்டு வளர்ச்சி 2025 அக்டோபரில் எந்தவொரு பணவியல் கொள்கை தளர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் குறைத்துள்ளது என்று நாயர் குறிப்பிட்டார்.



Original article:

Share:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


— 1980ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் ((Sanrakshan Evam Samvardhan) Adhiniyam) சிறப்பு விலக்கு அளித்து, ஒன்றிய அரசு மட்டும் ஒப்புதல் வழங்கப்படாமல், மாநில அரசால் எல்லைச் சாலை அமைப்புக்கு (Border Roads Organisation (BRO)) ஒப்புதல் வழங்கப்பட்டது.


— இந்த விதி ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, முக்கியமான நேரியல் திட்டங்களை’ (strategic linear projects of national importance) ஒன்றிய அரசின் ஆய்வில் இருந்து விலக்கு அளிக்கிறது. அதற்குப் பதிலாக, இத்தகைய திட்டங்கள் மாநில அளவிலான ஆய்வு குழுவால் அனுமதிக்கப்படுகின்றன. இறுதி அனுமதி ஈடுசெய்ய வனவளர்ப்பு மற்றும் வன உரிமைகள் தீர்வு ஆகியவற்றுக்கு உட்பட்டது.


— உத்தரகாசி மாவட்டத்தில் NH-34-ல் Hina மற்றும் Tekhla இடையே முன்மொழியப்பட்ட இந்த சுற்றுப்பாதை, பலவீனமான பாகீரதி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (Bhagirathi Eco-Sensitive Zone (BESZ)) என்னும் 4,157 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கங்கோத்திரி மற்றும் உத்தரகாசி நகரத்திற்கு இடையே உள்ளது.


— பாகீரதி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் ஆனது 2012-ல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தாராசு-கங்கோத்ரி பாதையில் 17.5 ஹெக்டேர் வன நிலத்தைத் திருப்பிவிடுவதை உள்ளடக்கியது. இதனால் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருக்கும் காடுகளில் (untouched forests) ஏறக்குறைய 2,750 மரங்களை வெட்ட வேண்டும்.


— 2020 ஆம் ஆண்டில், சூழலியல் நிபுணர் ரவி சோப்ரா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் உயர் அதிகாரக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அடிப்படையில் அதே புறவழிச்சாலையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக தற்போதுள்ள NH-34-ஐ அகலப்படுத்த பரிந்துரைத்தது.


— குழு அரசின் 900 கிலோமீட்டர் சார்தாம் திட்டத்தை (Chardham project) மறு ஆய்வு செய்தது. இது யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கி மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. குழு அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவான பரிந்துரைகளை சமர்ப்பித்தது.


— தாராலி பேரழிவுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உயர் அதிகாரக் குழுவின் உறுப்பினர்களான புவியியலாளர் நவீன் ஜுயல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சாரகர் ஹேமந்த் தியானி ஆகியோர், சார்தாம் நெடுஞ்சாலையை அதன் தற்போதைய வடிவத்தில் தொடர வேண்டாம் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தை வலியுறுத்தினர். நெட்டாலா புறவழிச்சாலை திட்டத்தை (Netala bypass) கைவிட வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.


— கங்கோத்திரி பகுதியில் புதிய வன அழிப்பிற்கு எதிராக ஏற்கனவே போராட்டம் நடத்திவரும் உத்தரகாசி மாவட்ட மக்கள், நெட்டாலா சுற்றுப்பாதை அனுமதியை ரத்து செய்யவும் சார்தாம் திட்டத்தின் பணிகளை நிறுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.


உங்களுக்குத் தெரியுமா?


— 900 கிலோமீட்டர் சார்தாம் திட்டம் நான்கு புனித யாத்திரை மையங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கி மேம்படுத்தும் பணியில் உள்ளது. உச்சநீதிமன்றம் 2021-ல் இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.


— சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) என்பது நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இடையே சமநிலை காக்க உதவும் ஒரு வழிமுறையாக உருவாகியுள்ளது. இது வளர்ச்சி சூழலியல் நிலைத்தன்மையை கெடுக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.


—சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது முன்மொழியப்பட்ட திட்டம் அல்லது மேம்பாட்டின் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை - நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் - அது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு மதிப்பிடும் ஒரு முறையான செயல்முறையாகும்.


— EIA-ன் முதன்மை நோக்கங்கள் மேம்பாட்டு திட்டங்களின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை முன்கணிப்பு மற்றும் மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.


— முன்மொழியப்பட்ட திட்டத்தின் ஆழமான பகுப்பாய்வை வழங்குவதன் மூலம் தகவலறிந்த முடிவெடுப்பதை இது எளிதாக்குகிறது மற்றும் திட்டமிடல் ஆரம்பகட்டத்தில் சாத்தியமான எதிர்மறை விளைவுகளை அடையாளம் காண்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதே, நேரத்தில் பொருத்தமான மாற்று வழிகள் மற்றும் தணிப்பு வழிமுறைகளையும் பரிந்துரைக்கிறது.


— ஒரு திட்டம் குறித்த பொதுக் கூட்டங்களில் மக்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், வளர்ச்சி முடிவுகளில் பங்கேற்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) உதவுகிறது.



Original article:

Share:

மின்னணு உயில் (e-will) குறித்து… -எல் எஸ் நாராயணசுவாமி

 காலாவதியான சட்டங்கள் மற்றும் காகித ஆவணங்கள் காரணமாக பல இந்தியர்கள் தங்கள் நியாயமான மரபுரிமையை இழக்கின்றனர். மின்னணு உயில்கள் (Electronic wills) இந்த சூழ்நிலையை மாற்றக்கூடும்.


பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும்போது, அதில் முக்கியமானது டிஜிட்டல் தளங்களின் தொகுப்பாகும் — ஜன் தன், ஆதார் மற்றும் அலைபேசி மும்மை (trinity) — இவை மற்ற எந்த நாடும் செய்யாத வகையில் சமூக நலனுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தியுள்ளன. 


இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தை கருத்தில் கொண்டு, பரம்பரை மற்றும் உயில் தொடர்பான சீர்திருத்தம் பெரும்பாலும் தீண்டப்படாமல் உள்ள ஒரு பகுதியாகும், இது சமத்துவம், நியாயம் மற்றும் பொருளாதார நீதிக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


இந்தியர்களில் மிகக் குறைந்த பகுதியினர் மட்டுமே உயில் எழுதுகின்றனர்; அவர்களில்கூட பெரும்பாலானோர் பெரிய பெருநகரங்களில் மிகவும் குவிந்துள்ளனர். இதனால் ஊரகப் பகுதி மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. மக்கள் உயில் எழுதும்போதுகூட, போலி உயில்கள், உயிலின் அதிகப்படியான பதிப்புகள் மற்றும் நீதிமன்றங்களில் தொடர்புடைய சவால்கள் பரவலாக  உள்ளன.


சிறிய நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் சட்ட நிபுணத்துவத்திற்கான அணுகல் மற்றும் விருப்பம் குறைந்துள்ளது. மேலும், கையால் கையெழுத்திடப்பட்ட காகித உயில்கள் (paper wills) மற்றும் நேரடி சாட்சிகளின் பயன்பாடு ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.


இது மின்னணு உயில்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எழுப்புகிறது. இவை அதிகாரத்துவ தடைகளை அகற்றி அணுகலை விரைவுபடுத்தும் பல தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளன. மின்னணு/டிஜிட்டல் உயில்கள் பாரம்பரிய காகித அடிப்படையிலான உயில்களுக்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான மாற்றாக செயல்படுகின்றன. 


இது பொருள் காப்பகம் (Physical storage), அணுகல் மற்றும் சாத்தியமான தவறான மாற்றத்தின் சவால்களை நிவர்த்தி செய்கிறது. உயில் எழுதுபவர்கள் மற்றும் சாட்சிகள் இந்த செயல்முறையை மெய்நிகர் முறையில் முடிக்க முடியும். இது புவியியல் தடைகளை நீக்கி நேரடி தொடர்புகளுடன் தொடர்புடைய நேரம் மற்றும் செலவைக் குறைக்கிறது. 


ஒரு டிஜிட்டல் செயல்முறை நீதிமன்றங்களின் மீதான சுமையை பெரும் அளவில் குறைக்கும். குறைந்தபட்சம் செயல்படுத்தல் மற்றும் நம்பகத்தன்மைக்கான சவால்களின் அடிப்படையில், இது கணினி உள்கட்டமைப்பில் தணிக்கை செய்யக்கூடிய பாதைகளைப் பயன்படுத்தி மறுக்க முடியாத அங்கீகாரத்தின் கவலையை நிவர்த்தி செய்யும். தொலைதூர மற்றும் ஊரகப் பகுதிகளில் சரியான சட்ட உள்கட்டமைப்பை அணுக முடியாத பிரச்சினையும் இதன் மூலம் கணிசமாகக் குறைக்கப்படும்.


வெவ்வேறு வடிவங்களில், பல்வேறு நாடுகளில் பயன்பாட்டு நிகழ்வுகள் உள்ளன. மேலும், இந்தியாவிலும் வடிவம் எடுக்க ஆரம்பித்துள்ளன. இவற்றில் சில: உத்தராகண்டின் ஒரே மாதிரியான குடியுரிமை சட்ட விதிகள் 2025-இன் (Uniform Civil Code (UCC)) அத்தியாயம் 4, வலைத்தளம் அல்லது அலைபேசி மூலம் உயில்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் போன்ற செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. 


இந்த விதிகள் சோதனையாளர்கள் தங்கள் உயில்கள் அல்லது குறியீடுகளை (wills/codicils) இணைய வழி செயல்முறை மூலம் பதிவு செய்ய அனுமதிக்கின்றன. இது நடைமுறையை நெறிப்படுத்துகிறது மற்றும் உடல் ஆவணங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.


ஒரு மனுதாரர் தமது முன்னர் பதிவு செய்யப்பட்ட உயிலை/சொத்துப் பிரித்திடலை நீக்கவோ அல்லது புதிதாக ஒரு பதிப்பை இறுதியாகும் உயில் என அறிவிக்கவோ இணைய பதிவு மூலம் செய்ய முடியும். இதனால் அணுகல் மற்றும் தெளிவுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. 


இந்த விதிமுறைகள் பதிவு செய்யும் பல்வேறு வழிகளை வழங்குவதன் மூலம் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளன. அதில் வலைதளம்/அலைபேசி செயலி, ஆவணப் பதிவேற்றம் மற்றும் காணொளி உயில் அறிவிப்பு அடங்கும். இது ஒரு பெரிய முன்னேற்றமாக இருப்பினும், இந்த விதிமுறைகள் இன்னும் முழுமையான டிஜிட்டல் உயில்களை, மின்னணு கையொப்பங்கள், பிளாக்செயின் அடிப்படையிலான சான்றிதழ் ஆகியவற்றை வழங்கவில்லை..


அமெரிக்காவில், சீரான மின்னணு உயில்கள் சட்டம் (Electronic Wills Act) ஒரு மாதிரி சட்டமாகும். இது மின்னணு முறையில் சேமிக்கப்பட்ட உயில்களை சரிபார்க்கிறது. தொலைதூர சாட்சியத்தை அனுமதிக்கிறது. 


மேலும், உரையாக படிக்கக்கூடியதாகவும், உயிலாகச் செயல்பட நோக்கம் கொண்டதாகவும் இருக்கும் வரை, செயல்படுத்தல் தேவைகளை சரியாகப் பூர்த்தி செய்யாத உயில்களை சரிபார்க்க அனுமதிக்கும் ‘பாதிப்பில்லாத பிழை’ (harmless error) விதியையும் உள்ளடக்கியது.


சீரான மின்னணு உயில்கள் சட்டத்தை  (Uniform Electronic Wills Act (UEWA)) ஏற்றுக்கொள்வது சட்டத்தை நவீனமயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெளிவான அமைப்பை உருவாக்குவதன் மூலம், அதிகமான மக்கள் உயில்களை உருவாக்கவும், கையால் எழுதப்பட்ட உயில்களை அங்கீகரிப்பதில் உள்ள சிக்கல்களை சரிசெய்யவும் இது உதவும். இது முதன்முதலில் 2019-ல் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் கொலராடோ, வடக்கு டகோட்டா, உட்டா, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இயற்றப்பட்டது.


கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய இரண்டு மாகாணங்கள் மின்னணு உயில்களை செல்லுபடியாகும் உயில் கருவிகளாக அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளன. இவை முறையே டிசம்பர் 1, 2021 மற்றும் மே 17, 2023-ல் செய்யப்பட்டன.


பிரிட்டிஷ் கொலம்பியாவின் மசோதா 21, 2009-ல் நிறைவேற்றப்பட்ட ஏற்கனவே உள்ள உயில்கள், சொத்துக்கள் மற்றும் வாரிசுரிமைச் சட்டத்தை பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் புதுப்பித்தது. டிஜிட்டல் உயில்கள், தொலைதூர மெய்நிகர் சாட்சியம், உயில்களின் டிஜிட்டல் சேமிப்பு மற்றும் ஒரு உயிலை டிஜிட்டல் முறையில் ரத்து செய்யும் அல்லது புதுப்பிக்கும் திறன் போன்றவற்றை உருவாக்கியுள்ளது.


இந்தியாவில், எந்தத் தீர்வும் டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தி உயில் உருவாக்க அனுமதிக்க வேண்டும் - குறிப்பாக மொபைல், மொழிவாரி மொழிகள் உட்பட; மறுக்க முடியாத அங்கீகாரத்தை உறுதி செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். 


மேலும் கடுமையான தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஆதார் ஒருமுறை கடவுச்சொல்/மின்னணு கையொப்பம் (Aadhaar OTP/eSign) ‘கையொப்பமிடுதல்’ (Signing) உயில் மற்றும் சாட்சிகளால் அல்லது ஒரு டிஜிட்டல் அங்கீகாரம், வீடியோ சாட்சியத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும்.


இந்தியாவில் மின்னணு உயில்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது மேற்கண்ட ஒரு தீர்வான செயல்பாடுகள் வேண்டுமானால், பாரதீய சாக்ஷ்ய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam, 2023); இந்திய வாரிசுரிமை சட்டம் (Indian Succession Act,1925); தகவல் தொழில்நுட்ப சட்டம் (Information Technology Act, 2000); இந்து வாரிசுரிமை சட்டம் (Hindu Succession Act, 1956), மற்றும் பதிவு சட்டம் (Registration Act, 1908) ஆகிய சட்டங்களில் பொருத்தமான திருத்தங்கள் தேவைப்படும்.


இந்தியா பல்வேறு துறைகளில் டிஜிட்டல்மயமாக்கலை நோக்கி நகர்ந்து செல்லும்போது, மின்னணு உயில்களின் அங்கீகாரம் சொத்துக்களை பராமரிக்கும் திட்டமிடல் (Estate Planning)  செயல்முறையை நவீனமயமாக்கும் மற்றும் அதிகமான தனிநபர்களை தங்கள் வாரிசுரிமை திட்டங்களை முறைப்படுத்த ஊக்குவிக்கும். 


டிஜிட்டல் கருவிகளின் தற்போதைய அணுகல் மற்றும் சட்ட அங்கீகார இடைவெளிகளை நிவர்த்தி செய்யும். விதவைகள், குழந்தைகள் போன்றோர் - எந்த உயில் இல்லாததால் அல்லது வாரிசுரிமை அனுமதிக்கப்படாததால் இறந்தவருடன் தொடர்புடைய சந்தர்ப்பவாத குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் தங்கள் நியாயமான மரபுரிமையில் இருந்து வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சீர்திருத்தங்கள், நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் பொருட்டு, பாரம்பரியத்தைப் பெறும் குடிமக்களுக்கு முழுமையான நீதியை வழங்கும்.


எழுத்தாளர், முன்னாள் வங்கியாளர், ஒரு தொழில்முனைவோர், முதலீட்டாளர் மற்றும் ராஜதந்திர பயிற்சியாளர்.



Original article:

Share:

இணையவழி விளையாட்டுச் சட்டம் 2025 -குஷ்பூ குமாரி

 2025ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டுச் சட்டம், அனைத்து வகையான இணையவழி  பணம் சம்பந்தமான விளையாட்டுகளுக்கும் முழுமையான தடை விதிக்கிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? இந்தப் பிரச்சினையில் நீதிமன்றத்தின் கடந்தகால தீர்ப்புகள் என்ன?


2025ஆம் ஆண்டு, இணைய வழி விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா (Promotion and Regulation of Online Gaming Bill) ஆகஸ்ட் 22 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இது இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் இணையவழி விளையாட்டுத் துறைக்கு விரிவான சட்ட கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது. இது மின்னணு விளையாட்டுகள் (e-sports) மற்றும் இணையவழி சமூக விளையாட்டுகள் போன்ற பிரிவுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து இணையவழி விளையாட்டுகளுக்கும் முழுமையான தடையை விதிக்கிறது.


முக்கிய அம்சங்கள்:


1. இணையவழி விளையாட்டு மீதான தடை: சமூக, நிதி, உளவியல் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் இணையவழி விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த விளையாட்டுகள், ‘கையாளும் வடிவமைப்பு அம்சங்கள், அடிமையாக்கும் வழிமுறைகள் (addictive algorithms), தானியங்கி கருவிகள் (bots) மற்றும் வெளிப்படுத்தப்படாத முகவர்களைப் பயன்படுத்தி, நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் பாதுகாப்பை பாதுகாப்பற்றதாகவும் ஆக்குகின்றன. அதேநேரத்தில் நிதி இழப்பிற்கு வழிவகுக்கும் நடத்தையை ஊக்குவிக்கின்றன’ என்று சட்டம் கூறுகிறது.


2. நிதி மோசடி மற்றும் பணமோசடியைத் தடுப்பது (Curb on financial fraud and money laundering): 


இந்த விளையாட்டுகளின் ‘கட்டுப்பாடில்லாத விரிவாக்கம்’ (unchecked expansion) நிதி மோசடி, பணமோசடி, வரி ஏய்ப்பு, மற்றும் சில சமயங்களில் பயங்கரவாத நிதியுதவி உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அரசின் நேர்மைக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது


3. இணையவழி விளையாட்டு (online money game) வரையறை: 


‘இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டு’ என்பது ஒரு பயனர் கட்டணம் செலுத்தி, பணம் அல்லது பிற பங்குகளை வைப்புத் தொகையாக கட்டி வெற்றி பெறும் எதிர்பார்ப்பில் விளையாடும் சேவை என வரையறுக்கப்பட்டுள்ளது. இது பணம் அல்லது பிற பங்குகளுக்கு பதிலாக பணம் மற்றும் பிற செழுமையை உள்ளடக்கியது. ஆனால் இதில் மின்னணு விளையாட்டுகள் (e-sports) சேர்க்கப்படாது. இது ஒரு விரிவான வரையறையாகும். மேலும், இது Dream11, Winzo, MPL போன்ற அனைத்து முக்கிய இணையவழி விளையாட்டு தளங்களையும் உள்ளடக்கியது.


4. மின்னணு விளையாட்டுகளை (esports) விளையாட்டாக அங்கீகரிப்பது: இந்தச் சட்டத்தில், மின்னணு விளையாட்டு என்பது முன் வரையறுக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படும் பல வீரர்களைக் கொண்ட விளையாட்டுப் போட்டியாக வரையறுக்கப்படுகிறது. 


மேலும், அதன் விளைவு உடல் திறமை, மன சுறுசுறுப்பு, ராஜதந்திர சிந்தனை போன்ற காரணிகளை மட்டுமே சார்ந்துள்ளது. இந்த விதி வெற்றியாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் பரிசுத் தொகையை அனுமதிக்கிறது. ஆனால் பந்தயம் கட்டுதல் அல்லது வேறு ஏதேனும் ஆபத்துகளைத் தடை செய்கிறது.


ஒன்றிய அரசு மேலும் மின்னணு விளையாட்டுகளை (e-sports) ஒரு முறையான போட்டி விளையாட்டாக ஊக்குவிக்க பயிற்சி மையங்களை உருவாக்குதல் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைப்பதன் மூலமும், ஊக்குவிப்பு திட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்களை பரப்புதல், மாநில அரசுகள் மற்றும் விளையாட்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மின் விளையாட்டுகளை உண்மையான விளையாட்டாக ஆதரிக்க அரசாங்கம் விரும்புகிறது.


5. ஒன்றிய அதிகார நிறுவனம் உருவாக்கம்: போட்டித்தன்மை வாய்ந்த மின்னணு விளையாட்டை (e-sports) ஊக்குவிக்கவும், சட்டத்துடன் ஒட்டுமொத்த இணக்கத்தை உறுதிப்படுத்தவும் ஒரு ஒன்றிய அதிகார நிறுவனத்தை உருவாக்க சட்டம் வழிவகுக்கிறது. 


ஒன்றிய அரசு ‘இணையசமூக விளையாட்டுகளை’ (online social games) அதிகாரசபையிடம் அங்கீகரித்து, வகைப்படுத்தி, பதிவுசெய்து, பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக அத்தகைய விளையாட்டுகளின் மேம்பாடு மற்றும் கிடைக்கும் தன்மையை எளிதாக்கும்.


ஒரு இணையவழி விளையாட்டு, இணையவழி பண விளையாட்டாக தகுதி பெறுகிறதா என்பதை அதிகாரி முடிவு செய்வார். மேலும், அது தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பதை அதிகாரி தீர்மானிப்பார்.


6. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு வழங்கப்பட்ட அதிகாரம்: 


இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், அதிகாரபூர்வமான ஆவணம் (Warrant) இல்லாமலேயே கூட, நேரடி மற்றும் மெய்நிகர் இடங்களில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. 


‘எந்த இடமும்’ என்பது எந்தவொரு வளாகம், கட்டிடம், வாகனம், கணினி வளம், மெய்நிகர் டிஜிட்டல் இடம், மின்னணு பதிவுகள் அல்லது மின்னணு சேமிப்பு சாதனங்களை உள்ளடக்கியது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எந்தவொரு அணுகல் கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பு குறியீட்டையும் மீறி அத்தகைய கணினி வளங்களை அணுகலாம்.

7. சட்டத்தை மீறுவதற்கான தண்டனைகள் (Penalties for violating the law): இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டு சேவையை வழங்குவது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதத்திற்கு வழிவகுக்கும். மீண்டும் குற்றம் செய்தால், சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதம் ரூ.2 கோடி வரை இருக்கலாம்.


 சமூக ஊடக செல்வாக்குடையவர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட இத்தகைய விளையாட்டுகளை விளம்பரப்படுத்துவது அல்லது ஊக்குவிப்பது இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதத்திற்கு வழிவகுக்கும்.


 மீண்டும் குற்றம் செய்பவர்கள் மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதத்தை எதிர்கொள்ளலாம்.


வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டு சேவைகளுக்கு எந்த பரிவர்த்தனைகளையும் எளிதாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவது மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ 1 கோடி வரை அபராதத்திற்கு வழிவகுக்கும்.


திறமை மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் பற்றிய நீதிமன்றத்தின் கருத்து


1. பல சூழல்களில், நீதிமன்றங்கள் இரண்டு வகையான விளையாட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை எடுத்துக்காட்டியுள்ளன.


2. திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் விளையாட்டுகள் என்பது சட்டப்பூர்வமான வர்த்தகம் மற்றும் வணிக வடிவம் என்றும், அவை அரசியலமைப்பின் பிரிவு 19(1)(g)-ஆல் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த பிரிவு எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளும் உரிமையை அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது.


3. 2021ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம், கற்பனை கிரிக்கெட் ஆப் ட்ரீம்11-ஐ தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை உறுதி செய்தது. உச்சநீதிமன்றம், கற்பனை விளையாட்டுகள் திறன் சார்ந்த விளையாட்டுகளாகும் என்று மும்பை மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை குறிப்பிட்டது.


4. இந்த இரு உயர் நீதிமன்றங்களின் கூற்றுப்படி, கற்பனை விளையாட்டுகளில் வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட அணி ஒரு போட்டியில் வெற்றி பெறுவது அல்லது தோல்வியடைவது என்பதைப் பொறுத்தது அல்ல - மாறாக, இது விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து வீரர்களின் செயல்திறன் குறித்து பங்கேற்பாளர்களின் அறிவு, கவனம் மற்றும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.



Original article:

Share:

இந்தியா சீனாவைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டிய நேரம் இது. -அக்ஷய் பாம்ப்ரி

 இந்தியா தனது அண்டை நாடுகளை உண்மையாக அறிந்து கொள்ளக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதில் முதலீடு செய்ய வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் எதிர்வினை கொள்கைகளின் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.


ஆகஸ்ட் 31 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் தரையிறங்குவார். பலர் கேட்கும் கேள்வி: இந்தியா-சீனா உறவு எந்த திசையில் செல்லும்? செய்தித்தலைப்புகள் கவனமாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளையும் மேம்படுத்தப்பட்ட காட்சி அமைப்புகளையும் மையப்படுத்தும். ஆனால், நாம் கேட்க வேண்டிய கடினமான கேள்வி இதுவாகும்: நமக்கு சீனாவைப் பற்றி பதிலளிக்கும் அளவுக்கு புரிதல் உள்ளதா?


இந்தப் பிரச்சினை புதியதல்ல. இந்தியாவின் தீவிர சீன நிபுணத்துவம் இல்லாதது குறித்து அறிஞர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர். ”உங்கள் அண்டை வீட்டாரை அறிந்து கொள்ளுங்கள்” (IE, ஜனவரி 20, 2021) என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில், அருணாப் கோஷ் மற்றும் தான்சென் சென் ஆகியோர் இந்தியாவில் சீன வரலாற்றைப் படிப்பது “நெருக்கடியில்” (in crisis) இருப்பதாக விவரித்தனர். 


அவர்கள் மூன்று முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர். அவை மொழிப் பயிற்சி இல்லாமை (lack of language training), பலவீனமான ஆராய்ச்சி முறைகள் (methodological rigour) மற்றும் சீன ஆதாரங்களுடன் ஈடுபடுவதற்கான மோசமான திறன் (research capacity to engage meaningfully with Chinese sources) ஆகும். 


இந்தத் திறன் இல்லாமல், இந்தியா வெளிநாட்டு புலமையைச் சார்ந்து இருக்கும் என்று அவர்கள் வாதிட்டனர். இதன் விளைவாக, சீனா குறித்த தேசிய விவாதம் அறியாமை, மேலோட்டமான உண்மைச் சரிபார்ப்புகள் மற்றும் அரசியல் கதைகளை குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வது என குறைக்கப்படும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த எச்சரிக்கையின் அவசரம் அதிகரித்துள்ளது.


பெரிய வல்லரசு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் மாறி வருகின்றன. டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மறு ஈடுபாடு ஒரு எச்சரிக்கையான ஆனால் முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், மறுபக்கத்தைப் பற்றிய ஆழமான மற்றும் தன்னிச்சையான அறிவால் ஆதரிக்கப்படாவிட்டால், இந்த தருணத்தை ஆபத்தானதாக ஆக்குகிறது. 


வரும் ஆண்டுகளில், ஈடுபாடானது, இரண்டு தேர்வுகளைச் சார்ந்தது. ஒரு வழி சீனாவிலிருந்து விலகி, அதனுடன் தொடர்புடைய எதிலிருந்தும் விலகுவதாகும். 


மற்றொன்று சீனாவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அதைப் பற்றிய உண்மையான புரிதலை உருவாக்குவதில் முதலீடு செய்வதாகும். இந்தப் புரிதல் இராணுவம், வர்த்தகம் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. இது சீனாவின் சமூக மற்றும் அரசியல் அமைப்பின் பரந்த சிக்கல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


சீனா இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான ஒப்பீட்டு கண்ணாடியை வழங்குகிறது. இரண்டும் பெரிய, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் மக்கள்தொகை கொண்ட நாடுகள். இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேரும் சவால்களை எதிர்கொள்கின்றன மற்றும் பெரிய லட்சியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா $5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது. 


இதன் சீனாவின் மதிப்பு ஏற்கனவே $18 டிரில்லியனை எட்டியுள்ளது. வறுமை ஒழிப்பு, காலநிலை தழுவல், தொழில்துறை கொள்கை அல்லது தொழில்நுட்ப தன்னம்பிக்கை போன்ற விஷயங்களில் வேறு எந்த நாடும் இந்த அளவிலான நிபந்தனைகளை வழங்கவில்லை. முக்கியமாக, சுற்றுச்சூழல் கொள்கை, நகரமயமாக்கல் மற்றும் நிதி இடர் மேலாண்மை ஆகியவற்றில் சீனாவின் தவறான வழிமுறைகள் சமமாக அறிவுறுத்துகின்றன. 


நாடுகளின் உத்திகள் மிக அதிகமாக, மிக வேகமாகத் உந்தப்படும்போது என்ன நடக்கும் என்பதைக் காட்டுகிறது. அவற்றை உன்னிப்பாகக் கவனிப்பது, கடினமான வழியைக் கற்றுக்கொள்வதற்கான விலையைக் கொடுக்காமல், விலையுயர்ந்த மாற்றுப்பாதைகளைத் தவிர்க்க இந்தியா அனுமதிக்கிறது.


இருப்பினும், சீனாவைப் பற்றிய இந்தியாவின் பகுப்பாய்வு பெரும்பாலும் நபர்களின் நகர்வுகள், வர்த்தக எண்கள் அல்லது சமீபத்திய அரசியல் அறிக்கை போன்ற மேற்பரப்பு குறிகாட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது. "அவமானத்தின் நூற்றாண்டு" (Century of Humiliation), மாவோயிஸ்ட் புரட்சிகரமான அனுபவம், கன்பூசியன் நிர்வாகக் கருத்துக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் உள் அரசியல் மற்றும் சமகால சீன அரசியல் நடவடிக்கைகளை வடிவமைக்கும் சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் டிஜிட்டல் தேசியவாதத்தின் அழுத்தங்கள் போன்ற வரலாற்று இணைப்பை நாங்கள் தவறவிட்டோம். 

ஜி ஜின்பிங் காலத்தில், இவை சீனாவின் எழுச்சி பற்றிய தொழில்நுட்ப-தேசியவாத பார்வையால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதன் இயல்பிலேயே, சீனாவைப் புரிந்துகொள்வதற்கு, கொள்கை ஆவணங்களில் உள்ள மௌனங்களைப் பிடிப்பதும், அதிகாரப்பூர்வ கதைகளில் பொதிந்துள்ள வரலாற்று மற்றும் கலாச்சாரக் குறிப்புகளை அங்கீகரிப்பதும் தகவலறிந்த ஈடுபாட்டிற்கு முக்கியமானதாகும்.


அமெரிக்கா சீனா ஆய்வுகளை அனைத்து துறைகளிலும் மற்றும் பெரும்பாலான பெரிய பல்கலைக்கழகங்களிலும் சேர்த்துள்ளது. அதே சமயம், சீனாவைத் தவறாகப் படிப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறைவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவும் அதையே செய்து ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது. 


இந்தியா, சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும், சீன ஆய்வுகளுக்கான மையங்கள் மிகக் குறைவு. அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு மட்டுமே உள்ளன. இவை முக்கியமாக டெல்லி மற்றும் ஒரு சில பெரிய நகரங்களில் உள்ளன. 


இவை தில்லி மற்றும் சில முக்கிய நகரங்களில், நீண்டகாலமாக நிதி பற்றாக்குறையால், முக்கியமாக பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன. நமது சொந்த நிபுணத்துவம் இல்லாமல், இந்தியா மற்ற நாடுகளின் முன்னுரிமைகளால் வடிவமைக்கப்பட்ட விளக்கங்களைப் பொறுத்தே இருக்கும்.


பிரச்சனை வெளியுறவுக் கொள்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் சொந்த வரலாற்றுக்கும் சீன மொழிப் பொருட்கள் முக்கியம் என்று சென் மற்றும் கோஷ் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கேள்விகளுக்கு பதில்களை வழங்குகிறார்கள் அல்லது இந்தியப் பதிவுகள் அமைதியாக இருக்கும் நிகழ்வுகளை விவரிக்கிறார்கள். 


எனவே, சீன வளங்களைப் படிக்கக் கற்றுக்கொள்வது சீனாவைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. இது இந்திய வரலாற்றின் இழக்கப்படக்கூடிய பகுதிகளை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது பற்றியது.


நமது போட்டியாளர்களை கற்றுகொள்ளுவது முதலீடு செய்வதற்கான தீவிரமான காரணம் நம்பிக்கையைப் பற்றியது. இது ஒரு பாதுகாப்பான தேசத்தைப் பற்றியது. அது அதன் போட்டியாளர்களைவிட முன்னதாகவே திட்டமிடுகிறது. மேலும், பாதுகாப்பின்மையால் அல்ல, அதன் வலிமையிலிருந்து செயல்படுகிறது. 


இருப்பினும், அறிவு இல்லாமல் அந்த தொலைநோக்கு சாத்தியமற்றது. மேலும், அதற்கு மொழிப் பயிற்சி, விரிவான ஆராய்ச்சி மற்றும் கல்வி, பொது விவாதம் மற்றும் கொள்கை வகுப்பிற்கு இடையில் செல்லக்கூடிய நிபுணர்களின் வளர்ப்பு உள்ளிட்ட நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.


அத்தகைய நிபுணத்துவத்தை வளர்க்கக்கூடிய சூழலை உருவாக்க முதலீடு இருக்க வேண்டும். தற்போது, ​​இந்த அமைப்பு மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது. இதில், ஏறக்குறைய பல்கலைக்கழக வேலைகள் இல்லாமல் மற்றும் ஒரு சில பெல்லோஷிப்கள் (fellowships) மட்டுமே இருப்பதால், மொழிப் பயிற்சி அல்லது நீண்டகால ஆராய்ச்சியில் முதலீடு செய்ய மாணவர்களுக்கு சிறிய ஊக்கம் உள்ளது. 


பகுதி ஆய்வுகளுக்கு அப்பால், புறக்கணிப்பு இன்னும் வியக்க வைக்கிறது. அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில், மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் கூட சீனாவை மையமாகக் கொண்ட பாடங்களை அரிதாகவே வழங்குகின்றன.


இந்தப் பாதையை நாம் மாற்றலாம், ஆனால் இப்போதே தொடங்க வேண்டும். அதாவது, பெரிய பல்கலைக்கழகங்களில் நன்கு நிதியளிக்கப்பட்ட சீன ஆய்வு மையங்கள், கடுமையான மாண்டரின் பயிற்சியில் தொகுத்து வழங்கப்படுகின்றன மற்றும் இடைநிலை ஆசிரியர்களால் பணியாற்றப்படுகின்றன.


 இந்திய அறிஞர்கள் சீன ஆதாரங்களுடன் பல ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கும் ஆய்வு உதவிகளும், கல்வி நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான கொள்கை வகுப்பாளர்களுக்கான கட்டமைக்கப்பட்ட சேனல்களும் இதில் அடங்கும். முக்கியமாக, இந்த அறிவு ஆங்கில மொழியில் மட்டும் இருக்கக்கூடாது. இந்திய மொழிகளில் ஆராய்ச்சியை மொழிபெயர்ப்பது பரந்த பார்வையாளர்களை அடைய உதவும்.


பல்கலைக்கழகங்களுக்கு அப்பாற்பட்ட சீனா தொடர்பான நிபுணத்துவத்தை நிலைநிறுத்த இந்தியாவிற்கு நீடித்த உள்கட்டமைப்பு தேவை. இதில், முதன்மை ஆதாரங்களின் முறையான மொழிபெயர்ப்பு, அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு அணுகக்கூடிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நுண்ணறிவுகளை தெளிவுபடுத்தும் வழக்கமான கொள்கை விளக்கங்கள் தயாராக இருக்க வேண்டும். 


பரிமாற்றத் திட்டங்கள் (Exchange programmes) நீண்டகால ஈடுபாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்திய ஆராய்ச்சியாளர்கள் சீன காப்பகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், கொள்கை மற்றும் வரலாற்றை நுணுக்கத்துடன் விளக்குவதற்குத் தேவையான மொழியியல் மற்றும் கலாச்சார சரளத்தைப் பெற வேண்டும்.


 இறுதியாக, சீன ஆய்வுகள் இந்தியாவை மையமாக வைத்து இருக்க முடியாது. மாநில அளவிலான மையங்கள், குறிப்பாக எல்லைப் பகுதிகள் மற்றும் சிறிய மாநிலங்களில், உள்ளூர் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கு நிதியளிக்கப்பட வேண்டும்.


இந்தியாவின் எதிர்காலம் இராணுவம் அல்லது பொருளாதார வலிமையை மட்டும் சார்ந்தது அல்ல மாறாக அது பெரும் வல்லரசுகளை, குறிப்பாக அதன் மிக சக்திவாய்ந்த அண்டை நாடான சீனாவை தெளிவாக புரிந்து கொள்வதைச் சார்ந்துள்ளது. அந்தத் தெளிவு எல்லைப் பிரச்சனைகள் அல்லது வர்த்தகப் பிரமுகர்களால் மட்டும் வராது. 


மாறாக அதன் மொழி, வரலாறு, அரசியல் மற்றும் சமூகத்தை அவற்றின் தனிப்பட்ட வார்த்தைகளில் புரிந்து கொள்வதில் இருந்து வரும். எனவே, சீனாவைப் புரிந்துகொள்வது இனி விருப்பத்திற்குரியது அல்ல. அது அவசரமானது மற்றும் தவிர்க்க முடியாதது. தேர்வு தெளிவாக உள்ளது. சீனாவை புரிந்துகொள்ளும் திறனில் இந்தியா இப்போது முதலீடு செய்ய வேண்டும் அல்லது நிகழ்வுகளுக்கு மட்டுமே எதிர்வினையாற்றக்கூடிய எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.


எழுத்தாளர் ஹார்வர்ட்-யென்சிங் நிறுவனத்தில் சீன ஆய்வுகள் நிறுவனத்தில் முனைவர் பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.



Original article:

Share:

சமுத்திரயான் திட்டத்தின் நோக்கம் என்ன? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி: 


இந்த மாத தொடக்கத்தில், இரண்டு இந்திய "நீர்நிலை ஆய்வாளர்கள்" பிரெஞ்சு கப்பலான நாட்டிலில் பயணித்து, அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்திற்கு சென்றனர். இது வரவிருக்கும் சமுத்திரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடல் ஆய்வுக்கான தயாரிப்பாகும், இதில் இந்தியா 2027-ஆம் ஆண்டுக்குள் மூன்று மனிதர்களை 6,000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. கமாண்டர் (ஓய்வு) ஜதிந்தர் பால் சிங் மற்றும் ஆர்.ரமேஷ் ஆகியோர் முறையே 5,002 மீட்டர் மற்றும் 4,025 மீட்டர் கடல் மட்டத்திற்கு கீழே பயணித்தனர்.


முக்கிய அம்சங்கள்:


— இந்தியா 11,098 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அரசாங்கம் நீலப் பொருளாதாரக் கொள்கையை ஊக்குவித்து வருகிறது, அதாவது பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களைப் பயன்படுத்துதல், ஆழ்கடலில் ஆராயப்படாத பல கனிமங்கள், எரிபொருள்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை கண்டறிதல் ஆகும்.


— கடலுக்கு அடியில் கேபிள்கள் பதிக்கப்படுவதால், நவீன உலகளாவிய தொலைத்தொடர்புகளுக்கும் கடல் தளம் முக்கியமானது.


— தற்போது, ​​அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற சில நாடுகள் மட்டுமே ஆழ்கடல் ஆய்வு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.


— சமுத்திரயான் திட்டத்துடன், இந்தியாவும் இந்தக் குழுவில் இணையும். இந்தத் திட்டம் 2021-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


— ஆழ்கடல் சுரங்கம், நீருக்கடியில் வாகனங்கள், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஒரு குழு நீர்மூழ்கிக் கப்பல் (ஒரு பெரிய கப்பலால் ஆதரிக்கப்படும் ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பல்) ஆகியவற்றிற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதை ஆழ்கடல் பணி நோக்கமாகக் கொண்டுள்ளது.


— இந்த பணிக்கு ஐந்து ஆண்டுகளில் ரூ. 4,077 கோடி செலவாகும். இதில் ஆழ்கடல் ஆய்வுகள் அடங்கும், முக்கியமாக கனிம வைப்புகளைத் தேடுவது. இரும்பு, மாங்கனீசு, நிக்கல், கோபால்ட் மற்றும் அரிய மண் பொருட்களைக் கொண்ட கடல் தளத்திலுள்ள பாறைகளான பாலிமெட்டாலிக் முடிச்சுகள் ஒரு முக்கிய கவனம் செலுத்தப்படும்.


உங்களுக்குத் தெரியுமா?


— மத்ஸ்யா-6000 என்பது நீர்மூழ்கி வீரர்களை ஏற்றிச் செல்லும் வாகனமாகும். இது ஒரு பெரிய மீனைப் போல வடிவமைக்கப்பட்டு, மனிதர்களை வைப்பதற்காக 2.1 மீட்டர் விட்டமுள்ள “நீர்மூழ்கி வீரர் கோளம்” ஒன்றை உள்ளடக்கியிருக்கும். இந்த வாகனம் மூன்று மனிதர்களை 12 மணி நேர பயணங்களுக்கு தாங்கும் திறன் கொண்டதாக இருக்கும், மேலும் அவசரகாலத்தில் 96 மணி நேரம் வரை அவர்களை ஆதரிக்கும் அமைப்புகளை உள்ளடக்கியிருக்கும்.


— முதல் சோதனைக்காக, மனிதர்கள் எஃகு கோளத்தைப் பயன்படுத்தி 500 மீட்டர் ஆழத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பிப்ரவரியில் சென்னை கடற்கரையில் ஒரு  சோதனை ஏற்கனவே செய்யப்பட்டது.


— கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்தில் எஃகு மிக அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாது, இது கடல் மட்டத்தில் உள்ள அழுத்தத்தைவிட 600 மடங்கு அதிகம். எனவே, இறுதி பணியாளர் கோளம் டைட்டானியம் அலாய் பயன்படுத்தி தயாரிக்கப்படும்.


— ஆழ்கடல் சூழ்நிலையில் மக்களை உயிருடன் வைத்திருக்கக்கூடிய ஒரு வாகனத்தை உருவாக்குவதே முக்கிய சவால் ஆகும். 80 மிமீ தடிமன் கொண்ட டைட்டானியம் அலாய் அதன் வலிமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த உலோகம் அரிதானது. மேலும் பல நாடுகள் அதைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.


— தொடர்பு என்பது மற்றொரு பெரிய சவாலாகும். சாதாரண தகவல்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகள், நீருக்கடியில் ஆழமாக பயணிக்க முடியாது. அதற்கு பதிலாக, ஒலி அலைகள் நீரின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள ஒரு பெறுநருக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் ஒலி தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன.


— மற்ற நாடுகள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயங்கியதால், இந்தியா தனது சொந்த ஒலி தொலைபேசியை உருவாக்கியுள்ளது. ஒரு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப சோதனை தோல்வியடைந்தது, ஏனெனில் நீரின் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை போன்ற காரணிகள் அதன் செயல்திறனைப் பாதித்தன. பின்னர், இது திறந்த கடலில் வெற்றிகரமாக இயங்கியது



Original article:

Share: