இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சி அடைந்தது, இது கடந்த ஐந்து காலாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். -ஷிஷிர் சின்ஹா

 உற்பத்தி மற்றும் சேவைகள் வலுவாக வளர்ச்சி அடைந்துள்ளன. அதே நேரத்தில் வேளாண்மை மற்றும் சுரங்கத் துறைகள் பலவீனமான வளர்ச்சியைக் காட்டின. 2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (Q1) இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியடைந்ததாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-24ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 8.4%-க்குப் பிறகு இது மிக விரைவான வளர்ச்சியாகும்.


சிறப்பம்சங்கள்:


* 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சியடைந்தது. இது 2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5% வளர்ச்சியைவிட அதிகமாகும். 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8% வளர்ச்சியடைந்தது.


* வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் 1.5% உடன் ஒப்பிடும்போது 3.7% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்தன.


* இரண்டாம் நிலைத் துறை வலுவான வளர்ச்சியைக் காட்டியது. உற்பத்தி 7.7% ஆகவும் கட்டுமானம் 7.6% ஆகவும் இருந்தது. இரண்டும் நிலையான விலையில் 7.5%-க்கு மேல் வளர்ச்சியைப் பதிவு செய்தன.


* சுரங்கம் மற்றும் குவாரி 3.1% குறைந்துள்ளது. அதே நேரத்தில் மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாடுகள் முதல் காலாண்டில் 0.5% சற்று வளர்ந்தன.


* மூன்றாம் நிலைத் துறை 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் 9.3% வளர்ச்சியடைந்தது. 2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.8% ஆக இருந்தது.


* அரசாங்க இறுதி நுகர்வுச் செலவு (GFCE) 2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெயரளவு அடிப்படையில் 9.7% அதிகரித்துள்ளது, இது 2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4% வளர்ச்சியிலிருந்து கூர்மையான உயர்வு ஆகும்.


* உண்மையான தனியார் இறுதி நுகர்வுச் செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) 202025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.0% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 8.3% வளர்ச்சியைவிடக் குறைவு ஆகும்.


* மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation (GFCF)) 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைவிட, நிலையான விலையில் 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.


வலுவான வளர்ச்சி


ICRA-வின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.4%-ஆக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8%-ஆக உயர்ந்துள்ளது. 


இது எதிர்பார்த்ததைவிட அதிகமாகும். ஏனெனில் முந்தைய குறிகாட்டிகள் மந்தநிலையைக் குறிப்பிட்டன. உற்பத்தி மற்றும் சேவைகளில் எதிர்பார்த்ததைவிட வலுவான செயல்திறன் GVA-வில் 7.6% வளர்ச்சியை ஆதரித்ததாக அவர் விளக்கினார். இருப்பினும், வேளாண்மை மற்றும் சுரங்கம் கணிக்கப்பட்ட அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.


வருமான வரி நிவாரணம், 100-அடிப்படை-புள்ளி விகிதக் குறைப்பு, காரீப் விதைப்பில் நல்ல முன்னேற்றம் மற்றும் வரவிருக்கும் GST மாற்றங்கள் காரணமாக தனியார் நுகர்வு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 இருப்பினும், பண்டிகைக் காலத்தில் வரி குறைப்புக்கள் நடைமுறைக்கு வரும்வரை அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வீட்டுச் செலவு தாமதமாகலாம். மேலும், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஏற்படக்கூடிய வேலை இழப்புகள் வீட்டு நம்பிக்கையைப் பாதிக்கலாம்.


2026 நிதியாண்டின் முதல் காலாண்டு எதிர்பார்த்ததைவிட வலுவாக இருந்தாலும், அரசாங்க மூலதனச் செலவு குறைவாகவும், அமெரிக்க வரிகள் மற்றும் அபராதங்கள் காரணமாக ஏற்றுமதிகள் பலவீனமாகவும் இருப்பது வரவிருக்கும் காலாண்டுகளில் வளர்ச்சியைக் குறைக்கலாம். GST மாற்றங்கள் சில நிவாரணங்களை வழங்கக்கூடும். 


ஆனால், அதிலும் நிச்சயமற்றத் தன்மை நீடிக்கிறது. ICRA, நிதியாண்டு 2026-க்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 6%-ஆக வைத்திருக்கிறது. மேலும், வலுவான காலாண்டு வளர்ச்சி 2025 அக்டோபரில் எந்தவொரு பணவியல் கொள்கை தளர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் குறைத்துள்ளது என்று நாயர் குறிப்பிட்டார்.



Original article:

Share: