புதுப்பிக்கப்பட்ட கவனம் : இந்தியா-ஜப்பான் உறவுகள் குறித்து . . .

 உலகளாவிய மாற்றங்களின் போது இந்தியாவும் ஜப்பானும் தங்கள் உறவுகள் நிலையானதாக இருப்பதைக் காட்டியது.


தனது கிழக்குப் பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் 15-வது ஆண்டு உச்சி மாநாட்டிற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அதற்கு முன், SCO உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தியான்ஜின் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடைசியாக இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு 2022-ல் இந்தியாவில் நடைபெற்றது. இந்த வருகையின்போது, இரு தரப்பு நாடுகளும் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட (டஜன்) ஆவணங்களை வெளியிட்டன. 


இவற்றில், முக்கியமாக ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல் மற்றும் அவற்றுக்கு "அடுத்த தலைமுறை" (Next-Gen) என்ற கண்ணோட்டத்தில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஜப்பானிய வணிகங்கள் இந்தியாவில் தங்கள் முதலீட்டு இலக்குகளை 68 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளன மற்றும் இந்தியக் கூட்டமைப்பு நாடுகளுடன் சுமார் 170 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 


கூட்டு அறிக்கையைத் தவிர, பொருளாதாரப் பாதுகாப்பு (economic security), இயக்கம் (mobility) மற்றும் பசுமைத் தொழில்நுட்ப மாற்றம் (green technology transition) போன்ற எட்டு ஒத்துழைப்புக்கான பகுதிகள் உட்பட 2035 தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டது. 


இதில், "அடுத்த தலைமுறை மாநில-மாகாணக் கூட்டமைப்பு" (Next-Gen State-Prefecture Partnership) போன்ற அடிமட்ட உறவுகளை வலுப்படுத்துவதையும் நேரடி விமான இணைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இந்தியாவும், ஜப்பானும் தங்களின் 2008 பாதுகாப்பு கூட்டமைப்புகளை ஆண்டுதோறும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அளவிலான உரையாடல், குவாட், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு மற்றும் ஐ.நா. -வின் பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் ஆகியவற்றில் அதிக ஈடுபாட்டையும் உள்ளடக்கியது. 


அரியவகை பூமி காந்தங்களை (rare earth magnets) ஏற்றுமதி செய்வதில் இந்திய நிறுவனங்கள் சீன கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதால், ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் குறைமின்கடத்தி தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்து செயலாக்க உதவும் வகையில், மீள் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாத்தல் என்ற அவர்களின் பொருளாதார பாதுகாப்பு கூட்டமைப்பின் இலக்கு தீவிரமாக உள்ளது. 


இந்தியாவின் அதிவேக ரயில் "புல்லட் ரயில்" திட்டத்துடன் (Bullet Train project) ஜப்பானின் பணி சிறப்பிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் பிரதமர் இஷிபா ஆகியோர் மியாகி மாகாணத்திற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அங்கு அவர்கள் குறைமின்கடத்தி தொழிற்சாலையையும் ஆய்வு செய்தனர். 


கூட்டறிக்கையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுசக்தி திட்டம், மற்றும் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றைக் கண்டிக்கும் வலுவான உரையாடலும் அடங்கும். இருப்பினும், பாகிஸ்தானைக் குறிப்பிடவில்லை. இந்தியாவிற்கு எதிரான அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து நிச்சயமற்ற தன்மையின் கீழ் வரும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் தலைவர்களின் குவாட் உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் வலியுறுத்தினர்.


இந்தியா-ஜப்பான் சந்திப்புகளின் உரையாடல் பெரும்பாலும் இருதரப்பு உறவுகளைப் பற்றியதாக இருந்தாலும், அதன் பின்னணி புவிசார் அரசியல் தொடர்புடையதாக இருந்தது. இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய வரிவிதிப்புகளை அமெரிக்கா அறிவித்த பிறகு பிரதமர் மோடி டோக்கியோவிற்கு பயணத்தை மேற்கொண்டார். 


ஆகஸ்ட் 31, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு முன்பு, அவர் தனது முதல் பயணமாக ஜப்பானைத் தேர்ந்தெடுத்தார். இந்த சந்திப்பு, நான்கு ஆண்டுகால மோதலுக்குப் பிறகு உறவுகளை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஜப்பானும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து கவலை கொண்டுள்ளது, மேலும் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் பதற்றங்கள் இருப்பதால், வாஷிங்டனுக்கு வர்த்தக பேச்சுவார்த்தை குழு பயணத்தை ரத்து செய்தது. மோடியும்  இஷிபாவும் வெளியிட்ட செய்தி என்னவென்றால், உலகளாவிய வல்லரசுகளால் ஏற்படும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தியா-ஜப்பான் உறவு நிலையாக இருந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.



Original article:

Share: