பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா, மக்கள்தொகை பலனை பொது செழிப்பாக மாற்றுவதற்கு ஒரு உறுதியான படியாகும்.
இந்தியாவின் வளர்ச்சிக் கதை எப்போதுமே அதன் ஷ்ரம் சக்தி (Shram Shakti) / தொழிலாளர் சக்தியால் (labour power) வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
2014-ல் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இன்று 4-வது பெரிய பொருளாதாரத்திற்கு உயர்ந்துள்ளது. இது உலக அரங்கில் இந்தியா ஒரு வலுவான நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், அதன் மனித வளத்தின் வலிமை இந்த சாதனையில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்பு விரிவாக்கத்துடன் இணைந்துள்ளது என்பது இந்த வெற்றிக் கதைக்கு உந்துசக்தியாக உள்ளது. RBI-KLEMS-ன் கூற்றுப்படி, 2004-2014-க்கு இடையில் 2.9 கோடி வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் 17 கோடிக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டன. EPFO தரவு காட்டியுள்ளபடி, வேலைகளை முறைப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
முழு சமூக பாதுகாப்பு
எவ்வாறாயினும், உண்மையான மாற்றம் என்பது முழு சமூகப் பாதுகாப்பில் உள்ளது. 2015-ல், 19% இந்தியர்கள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இருந்தனர். 2025-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 64.3%-ஆக உயர்ந்துள்ளது. இதன்பொருள், 94 கோடி பயனாளிகளை இப்போது இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்.
இது, இந்தியாவை உலகின் இரண்டாவது பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்பாக (social security system) மாற்றுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) இந்த சாதனையை உலகளவில் முழுப் பாதுகாப்பு விரிவாக்கங்களில் ஒன்றாக ஒப்புக் கொண்டுள்ளது.
நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, நாட்டின் எதிர்காலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மட்டும் சார்ந்திருக்காது. நாம் உருவாக்கும் வேலைகளின் தரம், தொழிலாளர்களுக்கு நாம் வழங்கும் பாதுகாப்பு மற்றும் நமது இளைஞர்களுக்கு நாம் வழங்கும் வாய்ப்புகள் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படும் என்பது தெளிவாகிறது.
உலகளவில் அதிகரித்து வரும் தன்னியக்கமயமாக்கல் (automation), செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) தூண்டப்பட்ட நிச்சயமற்ற தன்மைகள், விநியோகச் சங்கிலி மாற்றங்கள் (supply-chain shifts) மற்றும் உலகளவில் வேலைகளை மறுவடிவமைக்கும் புதிய பாதிப்புகள் ஆகியவற்றின் உலகளாவிய பின்னணியில், இந்தியா ஒரு மக்கள்தொகை திருப்புமுனையில் நிற்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகையில், சுமார் 65% பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். இது ஒரு முக்கியமான மக்கள்தொகை ஈவுத்தொகையை (demographic dividend) உருவாக்குகிறது. இது மேற்குகத்திய நாடுகளில் உள்ள நாடுகள் வயதான மக்கள்தொகையை பிரதிபலிக்கும்போது நமது பொருளாதாரத்திற்கு ஒரு கவலையை அளிக்கிறது.
பல ஆண்டுகளாக, இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையானது அதன் யுவ சக்தியின் அதன் மிகப்பெரிய பலமாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இந்த திறன் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் (Viksit Bharat) இலக்கை நோக்கி நாம் செயல்படுகையில், நம் முன் இருக்கும் பணி தெளிவாக உள்ளது. நாம் 'சாத்தியத்திலிருந்து' 'செழிப்பு'க்கு நகர வேண்டும்.
இந்த சூழலில், வேலைவாய்ப்பு என்பது வெறும் பொருளாதாரக் குறிகாட்டியாக மட்டும் இல்லை, அது கண்ணியம், சமத்துவம் மற்றும் தேசிய வலிமையின் அடித்தளமாகும். இதற்கு பல படிகள் தேவை. நமது இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்ற வேண்டும்.
நாம் அவர்களை முறையான பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு நிதி கல்வியறிவை வழங்க வேண்டும். வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நமது மக்கள்தொகை நன்மைகள் உண்மையிலேயே நீடித்த தேசிய பலனாக (national dividend) மாறும்.
ஒரு இலட்சிய திட்டம்
இந்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் ”பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா” (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஆர்வத்திற்கும் வாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் 2024-25 ஒன்றிய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், பிரதமர் தனது 12-வது சுதந்திர தின உரையில் (Independence Day address) அறிவித்தார். இந்தத் திட்டம் அளவு மற்றும் வடிவமைப்பு இரண்டிலும் கடந்த காலத்திலிருந்து ஒரு பெரிய திருப்புமுனையாகும். ₹1 லட்சம் கோடி செலவில், இந்திய வரலாற்றில் இது மிகவும் லட்சியத் திட்டமாகும். இது இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை வேறுபடுத்துவது அதன் கட்டமைப்பாகும். வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரிக்கும் முந்தைய திட்டங்களைப் போலல்லாமல், இந்தத் திட்டம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் நிறுவன போட்டித்தன்மை ஆகியவற்றின் இரண்டு சவாலை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்கிறது.
இது ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் நேரடி நிதி ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. பகுதி A-ன் கீழ், முதல் முறையாக ஊழியர்கள் இரண்டு தவணைகளில் ₹15,000 வரை பெறலாம். பகுதி B-ன் கீழ், முதலாளிகள் ஒரு புதிய பணியமர்த்தலுக்கு மாதத்திற்கு ₹3,000 வரை பெறலாம். அதே வேளையில், தொழிலாளர்களுக்கான நுழைவுத் தடைகளைக் குறைக்கிறது. இது வணிகங்களுக்கான பணியமர்த்துதலுக்கான அபாயங்களையும் குறைக்கிறது.
இந்தத் திட்டம் முறைப்படுத்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை நோக்கி வெளிப்படையான உந்துதலை அளிக்கிறது. நேரடி பலன் பரிமாற்றம், மூலம் நன்மைகள் வழங்கப்படும். மேலும், இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
இது புதிய தொழிலாளர்களை அவர்களின் முதல் நாளிலிருந்தே சமூகப் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைக்கிறது. இத்திட்டம் முறையான, பாதுகாப்பான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர் சந்தையை நோக்கிய கட்டமைப்பு ரீதியான தூண்டுதலாகும். மேலும், உற்பத்தித் துறையில் முதலாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைகள் மீதான கூடுதல் கவனம், பாரதத்தை ஆத்மநிர்பர் (சுயசார்பு) ஆக்குவதற்கு மேலும் ஒரு உந்து சக்தியாக உள்ளது.
பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்ட அடிப்படையிலான தலையீடுகளிலிருந்து ஒரு விரிவான வேலைவாய்ப்பு சூழலை நோக்கி மாறுவதைக் குறிக்கிறது.
உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive), தேசிய உற்பத்தித் திட்டம் (National Manufacturing Mission) மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) போன்ற முந்தைய முன்முயற்சிகளின் கற்றல்களை இது உருவாக்குகிறது. மேலும், இது போட்டி நிறைந்த உலகளாவிய அமைப்பில் பணியின் மாறிவரும் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
இந்தத் திட்டம் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், வேலை உருவாக்கம் என்பது பகிரப்பட்ட பொறுப்பு (shared responsibility) என்பதை இத்திட்டம் அங்கீகரிக்கிறது.
டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாற முயல்வதால், இந்தத் திட்டத்தின் மூலம் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்கிறது. இது மிகச்சிறிய நிறுவனமும், புதிதாகப் பணிபுரியும் நிறுவனமும்கூட தேசிய வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
ஒரு புதிய இந்தியா
இந்தத் திட்டம் வெறும் கொள்கை அறிவிப்பு அல்ல. மக்கள்தொகை பலனை பொது வளமாக மாற்றுவதற்கான ஒரு உறுதியான படியாகும். ஒவ்வொரு இளைஞனுக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்கும், ஒவ்வொரு வேலைக்கும் கண்ணியம் உண்டு,
மேலும் ஒவ்வொரு இளைஞனும் தன் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெறும் வளர்ந்த இந்தியாவின் பார்வையை நனவாக்கும் அடித்தளத்தின் ஒரு பகுதியாகும். வேலைவாய்ப்பு என்பது அதன் உண்மையான அர்த்தத்தில், தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த முன்முயற்சியின் மூலம், மோடி அரசாங்கம் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எந்தவொரு லட்சியமும் ஆதரிக்கப்படாமல் இருக்காது, எந்த இளைஞர்களும் வாய்ப்பு இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
மன்சுக் மாண்டவியா, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், இந்திய அரசு.