2025ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டுச் சட்டம், அனைத்து வகையான இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டுகளுக்கும் முழுமையான தடை விதிக்கிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? இந்தப் பிரச்சினையில் நீதிமன்றத்தின் கடந்தகால தீர்ப்புகள் என்ன?
2025ஆம் ஆண்டு, இணைய வழி விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா (Promotion and Regulation of Online Gaming Bill) ஆகஸ்ட் 22 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இது இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் இணையவழி விளையாட்டுத் துறைக்கு விரிவான சட்ட கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது. இது மின்னணு விளையாட்டுகள் (e-sports) மற்றும் இணையவழி சமூக விளையாட்டுகள் போன்ற பிரிவுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து இணையவழி விளையாட்டுகளுக்கும் முழுமையான தடையை விதிக்கிறது.
முக்கிய அம்சங்கள்:
1. இணையவழி விளையாட்டு மீதான தடை: சமூக, நிதி, உளவியல் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் இணையவழி விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுகள், ‘கையாளும் வடிவமைப்பு அம்சங்கள், அடிமையாக்கும் வழிமுறைகள் (addictive algorithms), தானியங்கி கருவிகள் (bots) மற்றும் வெளிப்படுத்தப்படாத முகவர்களைப் பயன்படுத்தி, நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் பாதுகாப்பை பாதுகாப்பற்றதாகவும் ஆக்குகின்றன. அதேநேரத்தில் நிதி இழப்பிற்கு வழிவகுக்கும் நடத்தையை ஊக்குவிக்கின்றன’ என்று சட்டம் கூறுகிறது.
2. நிதி மோசடி மற்றும் பணமோசடியைத் தடுப்பது (Curb on financial fraud and money laundering):
இந்த விளையாட்டுகளின் ‘கட்டுப்பாடில்லாத விரிவாக்கம்’ (unchecked expansion) நிதி மோசடி, பணமோசடி, வரி ஏய்ப்பு, மற்றும் சில சமயங்களில் பயங்கரவாத நிதியுதவி உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அரசின் நேர்மைக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது
3. இணையவழி விளையாட்டு (online money game) வரையறை:
‘இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டு’ என்பது ஒரு பயனர் கட்டணம் செலுத்தி, பணம் அல்லது பிற பங்குகளை வைப்புத் தொகையாக கட்டி வெற்றி பெறும் எதிர்பார்ப்பில் விளையாடும் சேவை என வரையறுக்கப்பட்டுள்ளது. இது பணம் அல்லது பிற பங்குகளுக்கு பதிலாக பணம் மற்றும் பிற செழுமையை உள்ளடக்கியது. ஆனால் இதில் மின்னணு விளையாட்டுகள் (e-sports) சேர்க்கப்படாது. இது ஒரு விரிவான வரையறையாகும். மேலும், இது Dream11, Winzo, MPL போன்ற அனைத்து முக்கிய இணையவழி விளையாட்டு தளங்களையும் உள்ளடக்கியது.
4. மின்னணு விளையாட்டுகளை (esports) விளையாட்டாக அங்கீகரிப்பது: இந்தச் சட்டத்தில், மின்னணு விளையாட்டு என்பது முன் வரையறுக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படும் பல வீரர்களைக் கொண்ட விளையாட்டுப் போட்டியாக வரையறுக்கப்படுகிறது.
மேலும், அதன் விளைவு உடல் திறமை, மன சுறுசுறுப்பு, ராஜதந்திர சிந்தனை போன்ற காரணிகளை மட்டுமே சார்ந்துள்ளது. இந்த விதி வெற்றியாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் பரிசுத் தொகையை அனுமதிக்கிறது. ஆனால் பந்தயம் கட்டுதல் அல்லது வேறு ஏதேனும் ஆபத்துகளைத் தடை செய்கிறது.
ஒன்றிய அரசு மேலும் மின்னணு விளையாட்டுகளை (e-sports) ஒரு முறையான போட்டி விளையாட்டாக ஊக்குவிக்க பயிற்சி மையங்களை உருவாக்குதல் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைப்பதன் மூலமும், ஊக்குவிப்பு திட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்களை பரப்புதல், மாநில அரசுகள் மற்றும் விளையாட்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மின் விளையாட்டுகளை உண்மையான விளையாட்டாக ஆதரிக்க அரசாங்கம் விரும்புகிறது.
5. ஒன்றிய அதிகார நிறுவனம் உருவாக்கம்: போட்டித்தன்மை வாய்ந்த மின்னணு விளையாட்டை (e-sports) ஊக்குவிக்கவும், சட்டத்துடன் ஒட்டுமொத்த இணக்கத்தை உறுதிப்படுத்தவும் ஒரு ஒன்றிய அதிகார நிறுவனத்தை உருவாக்க சட்டம் வழிவகுக்கிறது.
ஒன்றிய அரசு ‘இணையசமூக விளையாட்டுகளை’ (online social games) அதிகாரசபையிடம் அங்கீகரித்து, வகைப்படுத்தி, பதிவுசெய்து, பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக அத்தகைய விளையாட்டுகளின் மேம்பாடு மற்றும் கிடைக்கும் தன்மையை எளிதாக்கும்.
ஒரு இணையவழி விளையாட்டு, இணையவழி பண விளையாட்டாக தகுதி பெறுகிறதா என்பதை அதிகாரி முடிவு செய்வார். மேலும், அது தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பதை அதிகாரி தீர்மானிப்பார்.
6. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு வழங்கப்பட்ட அதிகாரம்:
இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், அதிகாரபூர்வமான ஆவணம் (Warrant) இல்லாமலேயே கூட, நேரடி மற்றும் மெய்நிகர் இடங்களில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
‘எந்த இடமும்’ என்பது எந்தவொரு வளாகம், கட்டிடம், வாகனம், கணினி வளம், மெய்நிகர் டிஜிட்டல் இடம், மின்னணு பதிவுகள் அல்லது மின்னணு சேமிப்பு சாதனங்களை உள்ளடக்கியது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எந்தவொரு அணுகல் கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பு குறியீட்டையும் மீறி அத்தகைய கணினி வளங்களை அணுகலாம்.
7. சட்டத்தை மீறுவதற்கான தண்டனைகள் (Penalties for violating the law): இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டு சேவையை வழங்குவது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதத்திற்கு வழிவகுக்கும். மீண்டும் குற்றம் செய்தால், சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதம் ரூ.2 கோடி வரை இருக்கலாம்.
சமூக ஊடக செல்வாக்குடையவர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட இத்தகைய விளையாட்டுகளை விளம்பரப்படுத்துவது அல்லது ஊக்குவிப்பது இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதத்திற்கு வழிவகுக்கும்.
மீண்டும் குற்றம் செய்பவர்கள் மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதத்தை எதிர்கொள்ளலாம்.
வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் இணையவழி பணம் சம்பந்தமான விளையாட்டு சேவைகளுக்கு எந்த பரிவர்த்தனைகளையும் எளிதாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவது மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ 1 கோடி வரை அபராதத்திற்கு வழிவகுக்கும்.
திறமை மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் பற்றிய நீதிமன்றத்தின் கருத்து
1. பல சூழல்களில், நீதிமன்றங்கள் இரண்டு வகையான விளையாட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை எடுத்துக்காட்டியுள்ளன.
2. திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் விளையாட்டுகள் என்பது சட்டப்பூர்வமான வர்த்தகம் மற்றும் வணிக வடிவம் என்றும், அவை அரசியலமைப்பின் பிரிவு 19(1)(g)-ஆல் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த பிரிவு எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளும் உரிமையை அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது.
3. 2021ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம், கற்பனை கிரிக்கெட் ஆப் ட்ரீம்11-ஐ தடை செய்யக் கோரிய பொதுநல வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை உறுதி செய்தது. உச்சநீதிமன்றம், கற்பனை விளையாட்டுகள் திறன் சார்ந்த விளையாட்டுகளாகும் என்று மும்பை மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை குறிப்பிட்டது.
4. இந்த இரு உயர் நீதிமன்றங்களின் கூற்றுப்படி, கற்பனை விளையாட்டுகளில் வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட அணி ஒரு போட்டியில் வெற்றி பெறுவது அல்லது தோல்வியடைவது என்பதைப் பொறுத்தது அல்ல - மாறாக, இது விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து வீரர்களின் செயல்திறன் குறித்து பங்கேற்பாளர்களின் அறிவு, கவனம் மற்றும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.