தென் சீனக் கடலில் உள்ள Scarborough Shoal அருகே இந்தியாவும் பிலிப்பைன்ஸும் இரண்டு நாள் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இந்தப் பயிற்சி எதைப் பற்றியது? தென் சீனக் கடல் ஏன் முக்கியமானது?
தற்போதைய செய்தி
பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், 2022-ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கான தனது முதல் பயணமாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி புதுடெல்லிக்கு வந்தார். இரு நாடுகளும் தென் சீனக் கடலில் தங்கள் முதல் இருதரப்பு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த சூழலில், தென் சீனக் கடலில் இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையேயான முதல் இருதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் அது தொடர்பான பிற முக்கிய அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. சீனாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான கடல்சார் தகராறின் மையப் புள்ளியான Scarborough Shoal-க்கு அருகிலுள்ள நீரில் இந்தியாவும் பிலிப்பைன்ஸும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரண்டு நாள் "இருதரப்பு கடல்சார் கூட்டுறவு நடவடிக்கையை" (bilateral maritime cooperative activity) தொடங்கின. தென் சீனக் கடல் உட்பட சீனாவின் வளர்ந்து வரும் கடல்சார் சக்தி குறித்த அதன் பகிரப்பட்ட கவலைகள் காரணமாக இந்தியா இந்த முயற்சிகளில் இணைகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2. பாதுகாப்பு ஒத்துழைப்பு (Defence cooperation) என்பது இருதரப்பு உறவுகளின் வலுவான தூண்களில் ஒன்றாகும். மேலும், இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கு ஒரு நம்பிக்கைக்குரிய பகுதியாகும் என்று மணிலாவில் உள்ள இந்திய தூதரகத்தின் வலைத்தளம் கூறுகிறது.
3. குறிப்பாக, இந்தியா ஏப்ரல் 19, 2024 அன்று BrahMos ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதியை பிலிப்பைன்ஸுக்கு வழங்கியது. இது ஏவுகணை ஆயுத அமைப்பைப் பெற்ற முதல் அயல் நாடாக அமைந்தது.
4. இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நவம்பர் 1949-ல் நிறுவப்பட்டன. இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, அதிபர் மார்கோஸ் ஜூனியரின் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. பிலிப்பைன்ஸுடனான இந்தியாவின் உறவுகள் அதன் "கிழக்கே செயல்படும்” (Act East) கொள்கையான திட்டம் மஹாசாகர் மற்றும் இந்தோ-பசிபிக் பற்றிய அதன் தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த தூணாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை கூறியது.
தென் சீனக் கடல்
1. தென் சீனக் கடல் சீன நிலப்பகுதிக்கு சற்று தெற்கே அமைந்துள்ளது மற்றும் புருனே, சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் எல்லையாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக கடலில் பிராந்தியக் கட்டுப்பாடு குறித்து நாடுகள் சண்டையிட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக பதட்டங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
2. தென் சீனக் கடல் மிகவும் இராஜதந்திர ரீதியாக முக்கியமான கடல்சார் பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இப்பகுதியில் அதிக அதிகாரத்தை நிலைநாட்ட சீனா அதன் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கிறது. 1947ஆம் ஆண்டில், தேசியவாத கோமின்டாங் கட்சியின் ஆட்சியின்கீழ், ஒன்பது வரி கோடு (nine-dash line) என்று அழைக்கப்படும் ஒரு வரைபடத்தை வெளியிட்டது.
3. ஒன்பது வரி கோடு அடிப்படையில் சீனா தென் சீனக் கடலின் உரிமை கோரப்பட்ட நீர்நிலைகள் மற்றும் தீவுகளைச் சுற்றி வருகிறது - கடலின் 90% சீனாவால் உரிமை கோரப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி (Chinese Communist Party (CCP)) ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இந்தக் கோடு தொடர்ந்து தோன்றியது.
4. கடந்த சில ஆண்டுகளில், கடல் அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் (Exclusive Economic Zone (EEZ)) கீழ் வருவதாகக் கூறி, மற்ற நாடுகள் தனது அனுமதியின்றி எந்தவொரு இராணுவ அல்லது பொருளாதார நடவடிக்கையையும் நடத்துவதைத் தடுக்கவும் சீனா முயற்சித்துள்ளது.
5. இருப்பினும், சீனாவின் பெரிய உரிமைகோரல்களை மற்ற நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா சில தீவுகளைப் பெரிதாக்கியுள்ளது அல்லது கடலில் புதிய தீவுகளைக் கட்டியுள்ளது என்று வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (Council on Foreign Relations (CFR)) கூறுகிறது.
தென் சீனக் கடலின் முக்கியத்துவம் என்ன?
1. அமெரிக்க எரிசக்தி தகவல் நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, தென் சீனக் கடலின் கீழ் 11 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் 190 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு படிவுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளன.
2. மேலும், கடல் வளமான மீன்பிடித் தளங்களுக்கு தாயகமாக உள்ளது - இது பிராந்தியம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வருமானத்தின் முக்கிய ஆதாரமாகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மீன்பிடி கப்பல்கள் இந்தப் பகுதியில் இயங்குகின்றன என்று BBC தெரிவித்துள்ளது.
3. மிக முக்கியமாக, கடல் ஒரு முக்கியமான வர்த்தக பாதையாகும். 2016-ஆம் ஆண்டில், உலக வர்த்தகத்தில் 21%க்கும் அதிகமானவை, இதன் மதிப்பு $3.37 டிரில்லியன் ஆகும். இந்த நீர்வழிகள் வழியாகக் இவை அனைத்தும் கடத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு மதிப்பிட்டுள்ளது என்று செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
01 "முத்துச் சரம்" (String of Pearls) மற்றும் "வைர நெக்லஸ்" (Necklace of Diamonds) என்றால் என்ன?
"முத்துச் சரம்" என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சுற்றியுள்ள துறைமுகங்கள் மற்றும் வசதிகளின் வலையமைப்பை உள்ளடக்கிய ஒரு சீன உத்தியாகும். சீனாவின் "முத்துச் சரம்" உத்திக்கு இந்தியாவின் இராஜதந்திர எதிர்வினை பெரும்பாலும் "வைர நெக்லஸ்" என்று விவரிக்கப்படுகிறது, இதில் பிராந்திய கடற்கரைகளுடன் இராஜதந்திரக் கூட்டாண்மை, துறைமுக உள்கட்டமைப்பில் முதலீடுகள் மற்றும் கடற்படை இராஜதந்திரம் மூலம் இருப்பு ஆகியவை அடங்கும்.
02. ஒன்பது வரி கோடு என்றால் என்ன?
ஒன்பது வரி கோடு சீன வரைபடங்களில் கடலில் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களை வரையறுக்கிறது. இது ஆரம்பத்தில் "பதினொரு-வரி கோடு" ஆக இருந்தது. ஆனால், 1953-ஆம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கம் "டோன்கின் வளைகுடாவை உள்ளடக்கிய பகுதியை நீக்கி, எல்லையை ஒன்பது கோடுகளாக எளிமைப்படுத்தியது" என்று வெளியுறவு கவுன்சில் (Council on Foreign Relations (CFR) கூறியது.
இந்தக் கோடு சீன நிலப்பரப்பில் இருந்து பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் வியட்நாமிலிருந்து சில நூறு கிலோமீட்டர்களுக்குள் 2,000 கிமீ தூரம் வரை செல்கிறது. எல்லைக்குள் உள்ள நீர் மற்றும் தீவுகள் மீதான சீனாவின் உரிமை அதன் ‘வரலாற்று கடல்சார் உரிமைகளை’ (historical maritime rights) அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், அந்த நாடு அந்தக் கோட்டின் சரியான ஆயத்தொலைவுகளை ஒருபோதும் தெளிவாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும், இந்தக் கோடு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் எல்லைகள் ஒப்பந்தத்தால் அனுமதிக்கப்பட்டவரம்புகளை தாண்டி பல மைல்கள் நீண்டுள்ளது. இதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
03. பாதை மற்றும் வருணா பயிற்சிகள் என்ன?
பாதைப் பயிற்சி (Passage Exercise) என்பது இந்திய கடற்படைக்கும் ராயல் கடற்படைக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை நிரூபிக்கும் ஒரு கூட்டுப் பயிற்சியாகும். இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இந்திய கடற்படையின் stealth frigate INS Tabar, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் P-8I கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வட அரேபியக் கடலில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் கேரியர் ஸ்ட்ரைக் குழுவுடன் ஒரு பாதைப் பயிற்சியில் (Passage Exercise (PASSEX)) பங்கேற்றன.
வருணா பயிற்சி (Varuna Exercise) என்பது இந்தியா மற்றும் பிரான்சின் இருதரப்பு கூட்டு கடல்சார் பயிற்சியாகும். இந்த ஆண்டு இது கோவா கடற்கரையில் 2025 மார்ச் 19 முதல் 22 வரை நடைபெற்றது. கடல்சார் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பின்தொடர்வதில் இந்திய மற்றும் பிரான்ஸ் கடற்படைகளை ஒன்றிணைக்கும் ஆழமான பிணைப்புகளின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக இது நிற்கிறது.
சாகர் மற்றும் மஹாசாகர் கோட்பாடுகள்
1. சாகர்: ‘பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (Security and Growth for All in the Region (SAGAR))) என்ற யோசனையை முதன்முதலில் 2015-ஆம் ஆண்டு மொரிஷியஸில் இந்தியப் பிரதமர் விளக்கினார். இந்த யோசனை இந்தியாவின் சுதந்திரமான, திறந்த, அமைதியான மற்றும் வெற்றிகரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. இது நியாயமான விதிகள், தெளிவான மற்றும் நிலையான உள்கட்டமைப்புத் திட்டங்கள், கடல் மற்றும் வான் வழியாக பயணிக்கும் சுதந்திரம், சுமூகமான வர்த்தகம், ஒவ்வொரு நாட்டின் சுதந்திரத்திற்கும் மரியாதை, பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்ப்பது மற்றும் அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
2. மகாசாகர்: இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் மொரிஷியஸ் பயணத்தின்போது, விரிவான இராஜதந்திரக் கூட்டாண்மையை மேம்படுத்துவதாகவும், சாகரை மஹாசாகராக மேம்படுத்துவதாகவும் அறிவித்தார். பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றமாக இது இருக்கும்.
3. மகாசாகரின் கோட்பாடு சாகரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இந்தியாவின் கடல்சார் ஈடுபாட்டின் பரந்த நோக்கத்தைக் குறிக்கிறது. இது உடனடி சுற்றுப்புறத்தை மட்டுமல்ல, பரந்த இந்தோ-பசிபிக் இடத்தையும் உள்ளடக்கியது மற்றும் நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue) உறுப்பினர்களான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் இராஜதந்திர ஒத்துழைப்புடன் இணைகிறது.