உறங்கும் பேரழிவுகள் : உத்தரகாண்ட் பேரிடர் மற்றும் இமயமலை குறித்து . . .

 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வண்டல் மண் படிவதை அரசு கண்காணிக்க வேண்டும்.


உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட பேரிடர் இமயமலையில் நிரந்தர சீர்குலைவுக்கான அபாயத்தை நினைவூட்டுகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் கீர் கங்கை (Kheer Ganga) ஆற்றில் பெய்த கனமழையால் ஏற்பட்ட அதிகளவு நீர், குப்பைகள் மற்றும் சகதியால் அடித்துச் செல்லப்பட்டு குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 60 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,600 அடி உயரத்தில் அமைந்துள்ள தரலி நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை வெள்ளம் தாக்கியது, அங்கு குடியிருப்பாளர்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகள் அப்பகுதியில் பெரும் நீர் அலைகள் பாய்ந்து, மக்களையும் வீடுகளையும் மூழ்கடித்தன. முதற்கட்ட தகவல்களின்படி, பல இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


ஆகஸ்ட் 3 முதல் 5 வரை பெய்த மிக அதிகளவிலான மழைப்பொழிவுதான் பேரிடருக்கு முக்கியக் காரணம். மேலும், பருவமழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது மற்றும் வட இந்தியாவிலும் கனமழை காரணமாக இதே நிலை நிலவியுள்ளது. பேரிடர் சீற்றமும், நகரத்தின் வழியாகப் பாய்ந்த நீரின் அளவும், இது ஒரு திடீர் நிகழ்வாகத் தோன்றியது. இது ஒரு 'மேக வெடிப்பு' (cloudburst) என வகைப்படுத்த மாநில அதிகாரிகளைத் தூண்டியது. இருப்பினும், அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளரான இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இதை எவ்வாறு வரையறுக்கிறது என்பதில் ஒரு சில விளக்கத்தைக் கொண்டுள்ளது. மேக வெடிப்பு என்பது, 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 10 சென்டிமீட்டர் மழைப்பொழிவு என்று வரையறுக்கிறது. ஆனால் இதுபோன்ற உயரமான பகுதிகளில் வானிலை ரேடார்கள் இல்லை. இதன் பொருள் IMD அத்தகைய நிகழ்வுகளை துல்லியமாக அளவிடவும் உறுதிப்படுத்தவும் முடியாததற்கு காரணமாக அமைகிறது. எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை மண்ணைத் தளர்த்தியிருக்க வாய்ப்புள்ளது. 


இது, கரடுமுரடான மற்றும் சீரற்ற நிலப்பரப்புடன் இணைந்து, அதிக அளவு வண்டல் மண் மற்றும் கனமான நீர் ஓட்டத்தை வெளியிட்டிருக்கலாம். இது திடீர் நிகழ்வாக இருந்தாலும் அல்லது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டதன் விளைவாக இருந்தாலும், உயிரிழப்பு, வாழ்வாதாரம் மற்றும் உடைமை இழப்புகளைக் கருத்தில் கொண்டு விவாதமாக தோன்றலாம். இதை 'மேக வெடிப்பு' என முன்கூட்டியே வகைப்படுத்துவது, மாநில அரசுகளை பொறுப்பற்றவர்களாகக் காட்ட அனுமதிக்கிறது. இது ஒரு அசாதாரண நிகழ்வாகக் கருதப்படும்போது, பொது அரசு அதிகாரிகளிடமிருந்து சமூக ஊடகங்களில் ‘பிரார்த்தனைகள்’ மற்றும் ‘ஆழ்ந்த வருத்தம்’ என்ற வடிவில் மட்டுமே உணர்வுகள் வெளிப்படுகின்றன.


மேலும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சிறிய தொகை மட்டுமே நிவாரணமாக வழங்கப்படுகிறது. சமீபத்திய காலங்களில் இவை அரிதான நிகழ்வுகள் அல்ல என்பது தெளிவாகிறது. பருவநிலை மாற்றம் தீவிர மழை நிகழ்வுகளின் நிகழ்தகவை அதிகரித்துள்ளது, எனவே மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களும், அதன் விளைவாக ஏற்படும் குப்பைகளும், இத்தகைய மழையால் தூண்டப்படும் உள்ளார்ந்த வெடிபொருட்களாக செயல்படுகின்றன. நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மாநில அரசு — நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது — பருவநிலை மாற்றத்தால் தவிர்க்க முடியாத பாதிப்புகளைத் தணிக்க, மாநிலத்தின் முக்கியமான இடங்களில் குப்பைகள் மற்றும் வண்டல் படிவுகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.



Original article:

Share: