காடுகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியம்? - குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— வனங்களை பற்றிய மாநிலத்தின் வரையறை, கடந்த கால உச்சநீதிமன்ற தீர்ப்புகளைப் பின்பற்றுவதாகவும், நீதித்துறை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


— இருப்பினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  இது ஒரு குறுகிய வரையறையாகும், என்றும், இது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த ஆரவல்லி மலைத் தொடர் பாதுகாப்பிலிருந்து விலக்கி, கட்டுப்பாடற்ற வளர்ச்சி, சட்டவிரோத சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புக்கு ஆளாகக்கூடியதாக ஆக்குகிறது என்று கூறுகிறார்கள்.


— ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஹரியானாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குத் துறை கூறியது: ஒரு நிலப்பகுதி பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அது "(அகராதி அர்த்தத்தின்படி) காடு" என்று அழைக்கப்படும்:


தனியாக இருந்தால் நிலம் குறைந்தது 5 ஹெக்டேராக இருக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வனங்களுக்கு அருகில் இருந்தால் குறைந்தது 2 ஹெக்டேராக இருக்க வேண்டும்.


அதில் 0.4 (40%) அல்லது அதற்கு மேற்பட்ட மேலாண்மை அடர்த்தி (canopy density) இருக்க வேண்டும்.


— மார்ச் 4 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ‘வனம்’ என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுத்து, தங்கள் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளைக் கண்டறிய கணக்கெடுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து ஹரியானா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.


— மேலும், இந்த செயல்முறை 2011-ஆம் ஆண்டு லஃபார்ஜ் உமியம் சுரங்க வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த வழிகாட்டுதல்களில் விரிவான தரவுத்தளத்தை உருவாக்க கணினி அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பு (Geographic information system (GIS)) ஆதரவு தரவுத்தளத்தை கட்டாயமாக்க வேண்டும். 


காடுகள் (பாதுகாப்பு) சட்டம், 1980 (Forest (Conservation) Act)-இன் கீழ் ‘வனம்’ என்று தகுதி பெறக்கூடிய மாவட்ட வாரியான நிலங்கள்; முக்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், சுற்றியுள்ள இடையக மண்டலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள்; 


வனவிலங்குகள் நடமாடும் முக்கியமான பாதைகள்; ஒரு காலத்தில் வனமாக இருந்த பகுதிகள் பின்னர் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் இந்திய வன ஆய்வின் நிலப்பரப்புத் தாள்கள் மற்றும் வரைபடங்கள் போன்ற பயனுள்ள வரைபடங்கள் அடங்கும்.


— வனப் பாதுகாப்புச் சட்டத்தில் (Forest Conservation Act (FCA)) 2023-ஆம் ஆண்டு திருத்தம், உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வரும் அசோக் குமார் சர்மா, IFS (ஓய்வு) & மற்றவர் vs. இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் சவால் செய்யப்படுகிறது. திருத்தம் மற்றும் சவால் இரண்டிலும் உள்ள முக்கியப் பிரச்சினை: "வனங்கள் என்றால் என்ன?"


— 1980ஆம் ஆண்டின் வனம் பாதுகாப்பு சட்டம் வனங்களை பாதுகாக்க, வன நிலத்தை வனத்திற்கும் புறம்பான பயன்பாட்டிற்கு மாற்றுவதையும் தடுப்பதாகும். ஒன்றிய அரசிடம் முதலில் அனுமதி பெறாவிட்டால், வன நிலத்தை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்று சட்டம் கூறுகிறது.


 — ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஹரியானாவின் வரையறையை விமர்சித்து வருகின்றனர். ஏனெனில், இந்த வரையறை ஒரு நிலத்தை வனம் என வகைப்படுத்த மிகவும் கடுமையான நிபந்தனையை (a very high threshold) உருவாக்குகிறது.


— வன ஆய்வாளர் சேதன் அகர்வால், ஒரு பகுதியை ‘சட்டப்படி கருதப்படும் வனம்’ (deemed forest) என்று வகைப்படுத்த குறைந்தபட்ச வனப்பகுதியாக 40% வனப்பகுதியை நிர்ணயிப்பதில் கோவா போன்ற மாநிலங்களை ஹரியானா பின்தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.


— ஹரியானா போன்ற வறண்ட மாநிலத்திற்கு குறைந்தபட்ச பரப்பளவு 2 மற்றும் 5 ஹெக்டேர் அளவு நியாயமற்ற முறையில் அதிகமாக உள்ளது. மேலும், இது முறையே 1 மற்றும் 2 ஹெக்டேர்களில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அகர்வால் மேலும் கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


— 1996-ல், டி.என். கோதாவர்மன் வழக்கில், உச்சநீதிமன்றம் வன (பாதுகாப்பு) சட்டம் அனைத்து வனங்களுக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியது. நாட்டின் சில பகுதிகளில், இயற்கை காடுகளைக் கொண்ட நிலம் சட்டப்படி அதிகாரப்பூர்வமாக ‘வனம்’ என்று அழைக்கப்படுவதில்லை. எனவே, அந்த நிலத்தை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.


— ஒரு மதிப்பீட்டின்படி, இது நாட்டின் மொத்த காட்டுப் பரப்பளவில் 25 சதவீதம் வரை இருக்கலாம். நீதிமன்றம், உண்மையான தாவரவளர்ப்பு FCA-வின் பொருந்துதன்மையை தீர்மானிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த நிலத்தை FCA-வின் கீழ் கொண்டு வந்தது. இது இறுதியில் ‘சட்டப்படி கருதப்படும் வன’ நிலம் என்ற புதிய சட்டப்பிரிவை உருவாக்க வழிவகுத்தது.


— வனப் பரப்பு (Forest cover): காடுகள் என்பது குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அல்லது குறைந்தபட்சம் 10% மரங்கள் கொண்ட எந்தவொரு நிலத்தையும் குறிக்கிறது. 


இதில் பழத்தோட்டங்கள், மூங்கில் மற்றும் பனை மரங்கள் அடங்கும். அது யாருக்குச் சொந்தமானது அல்லது அது அதிகாரப்பூர்வமாக வன நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் இது அனைத்து நிலங்களிலும் உள்ள மரங்களைக் குறிக்கிறது.


— மரப் பரப்பு (Tree cover): இது வனப் பகுதிக்கு வெளியே மரங்களால் மூடப்பட்ட பகுதியாகும்.  இது 1 ஹெக்டேருக்கும் குறைவான மரத் துண்டுகளை பதிவு செய்கிறது. ஏனெனில், 1 ஹெக்டேருக்கு மேற்பட்ட மர பரப்பு ஏற்கனவே வன பரப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


— அடர்ந்த காடுகள் (Dense Forests): 40% மற்றும் அதற்கு மேற்பட்ட மேலாண்மை அடர்த்தி உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகளாக கருதப்படுகின்றன.


— திறந்த காடுகள் (Open Forests (OF)): 10-40% மேலாண்மை அடர்த்தி உள்ள பகுதிகள் திறந்த காடுகள் ஆகும்.



Original article:

Share: