மின்கலத்தின் மறுசுழற்சி விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் -அர்பிதா முகர்ஜி

 முறையற்ற முறையில் மறுசுழற்சி செய்பவர்களுக்கு கடுமையான தணிக்கைகள் மற்றும் அதிக அபராதங்கள் விதித்தல் போன்றவை இந்தியா அதன் நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைய உதவும்.


இந்தியா இப்போது உலகில் மூன்றாவது பெரிய மின்னணுக் கழிவு உற்பத்தியாளராக உள்ளது. இதனால் வட்டப் பொருளாதாரம் என்ற கருத்து மிகவும் முக்கியமானது. மின்சார வாகனங்கள் (EVகள்) மற்றும் பல மின்னணுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள், இந்த மின்கழிவுகளில் பெரும பகுதியை உருவாக்குகின்றன. 


மின்கலங்களை முறையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 98 சதவீதம் வரை குறைக்க முடியும். மேலும், 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதன் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய உதவும்.


இதை நிவர்த்தி செய்ய, இந்தியா 2022-ல் மின்கல கழிவு மேலாண்மை (Battery Waste Management Rules) விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் மின்கல மறுசுழற்சி மற்றும் புதுப்பித்தலுக்கான குறிப்பிட்ட கடமைகள் மற்றும் இலக்குகளை அமைக்கின்றன. 


இந்த விதிகளின் முக்கிய பகுதி விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) கட்டமைப்பாகும். மின்கல  உற்பத்தியாளர்கள் மின்கலக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி செய்பவர்களுக்கு அனுப்ப வேண்டும் மற்றும் சரியான மறுசுழற்சியை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஈடாக, உற்பத்தியாளர்கள் மறுசுழற்சி செய்பவர்களிடமிருந்து EPR சான்றிதழ்களைப் பெறுகிறார்கள். இது அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றியதை உறுதிப்படுத்துகிறது.                     

        

இந்தியாவின் EPR விலை, தொழில்துறை நிபுணர்கள் பரிந்துரைத்தபடி, ஒரு கிலோவிற்கு ₹120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்பவர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச தொகை இதுவாகும். இது அவர்களின் முதலீடுகள், ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் முறையான மறுசுழற்சிக்குத் தேவையான திறமையான தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. ஆனால், இந்தியாவின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, EV மின்கலங்களை மறுசுழற்சி செய்வதற்கு இங்கிலாந்து ஒரு கிலோவிற்கு ₹500-600 வசூலிக்கிறது என்று கூறப்படுகிறது.


இந்த பெரிய வேறுபாடு சிக்கல்களை உருவாக்குகிறது. குறைந்த விலை, மறுசுழற்சி செய்பவர்கள் தரத்தை குறைக்கவோ அல்லது சந்தையை விட்டு வெளியேறவோகூட தள்ளக்கூடும். இது சிறந்த மறுசுழற்சி வசதிகளில் புதிய முதலீட்டை ஊக்கப்படுத்தாது மற்றும் போலி சான்றிதழ்களை வழங்குவது போன்ற மோசடிக்கு வழிவகுக்கும். EPR கட்டமைப்பு சரியாகப் பின்பற்றப்படாவிட்டால், அது இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.         


மோசடி மறுசுழற்சி செய்பவர்கள்


மோசடி மறுசுழற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மலிவான, மேம்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இது உண்மையான மறுசுழற்சி செய்பவர்களைவிட குறைந்த விலையில் விற்க அனுமதிக்கிறது. 


இதனால் நியாயமற்ற போட்டியை உருவாக்குகிறது. அவர்கள் உற்பத்தியாளர்களுக்கு போலி சான்றிதழ்களை வழங்குகிறார்கள், EPR-ன் (விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு) கீழ் தங்கள் மறுசுழற்சி பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றியதாக பொய்யாகக் காட்ட உதவுகிறார்கள்.


2024-ஆம் ஆண்டில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நெகிழி துறையில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான போலி சான்றிதழ்களுடன் ஒரு பெரிய மோசடியைக் கண்டறிந்தது. 


மறுசுழற்சி செய்பவர்கள் தங்கள் உண்மையான திறனை விட 38 மடங்கு அதிகமாக செயலாக்குவதாக பொய்யாகக் கூறி, இணக்கத்தைத் தவிர்க்க விரும்பும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ்களை விற்றனர். இந்த மோசடி தேசிய மறுசுழற்சி தரவை சிதைத்தது, சான்றிதழ் விலைகளைக் குறைத்தது மற்றும் EPR அமைப்பின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்தியது.


இன்னும் மோசமாக, 7,35,840 டன் பிளாஸ்டிக் வெளிப்படையாக எரிக்கப்பட்டது. டையாக்ஸின்கள் மற்றும் ஃபுரான்கள் போன்ற நச்சு மாசுபாடுகளை வெளியிட்டது.  இது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தது. 


இதன் விளைவாக, CPCB மீறுபவர்களுக்கு ₹355 கோடி அபராதம் விதித்தது. இது கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றத் தவறியதற்கான அதிக செலவைக் காட்டுகிறது. இந்தியாவின் கழிவு மேலாண்மை அமைப்பில் வலுவான கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்திற்கான அவசரத் தேவையை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.


தயாரிப்பாளர்கள் தாங்கள் பணிபுரியும் மறுசுழற்சி செய்பவர்களைச் சரிபார்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். மறுசுழற்சி செய்பவர்களை சிறிய விற்பனையாளர்களாகப் பார்க்கக்கூடாது. மாறாக தணிக்கை செய்யப்பட வேண்டிய மற்றும் இணக்கத் தரங்களைப் பூர்த்தி செய்யவேண்டிய முக்கியமான கூட்டாளர்களாகப் பார்க்க வேண்டும்.


இது மின்-கழிவுத் துறையில் போலி EPR சான்றிதழ்கள் இணக்கத்தை பலவீனப்படுத்தலாம் மற்றும் "மாசுபடுத்துபவர் பணம் செலுத்துகிறார்" என்ற கொள்கையை பலவீனப்படுத்தலாம். அவை மின்-கழிவுகளை முறையற்ற முறையில் கொட்டுவதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தலாம். 


மேலும், மதிப்புமிக்க கனிமங்களை இழப்பதற்கும் இந்தியாவிற்கு பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும். போலி சான்றிதழ்கள் முறையான மறுசுழற்சியையும் தடுக்கின்றன. இது லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற முக்கியமான கனிமங்களை மீட்டெடுப்பதை நிறுத்துகிறது. மேலும், இந்த கனிமங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கிறது.


EPR கட்டமைப்பை அமல்படுத்துவதை நிகழ்நேர தணிக்கைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் மூலம் மேம்படுத்தலாம். விற்பனை விலைப்பட்டியல் தரவு மற்றும் மூலதனச் செலவுத் தரவைச் சரிபார்ப்பதன் மூலம் தணிக்கைகள் சிறந்த முடிவுகளைத் தரும். 


செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் blockchain போன்ற முறைகளைப் பயன்படுத்தி ஒரு தேசிய டிஜிட்டல் கழிவு கண்காணிப்பு அமைப்பு கண்டறியும் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த முடியும். முறைசாரா அல்லது பெருநிறுவனம் அல்லாத துறையை EPR அமைப்பில் சேர்க்க வேண்டும், 


அவர்களுக்கு முறையான அங்கீகாரம் அளித்து, அதிகாரப்பூர்வ கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இந்தக் குழுக்களைச் சேர்ப்பது கழிவு கசிவைக் குறைக்கவும், நிகர பூஜ்ஜிய இலக்கைத் தாண்டி இந்தியாவின் பெரிய இலக்குகளை ஆதரிக்கவும் உதவும்.


அர்பிதா முகர்ஜி எழுத்தாளர் மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் (ICRIER) பேராசிரியர் ஆவார்.



Original article:

Share: