இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணை என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ் , குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— வன்முறைக்குப் பிறகு, லடாக்கின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 35 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லே நிர்வாகம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவதை தடை செய்துள்ளது.


— நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு அக்டோபர் 6-ஆம் தேதி ஒன்றிய அரசுக்கும் லே உச்ச அமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வன்முறை ஏற்பட்டது. பேச்சுவார்த்தைகளில் வாங்சுக்கை ஒரு தடையாகக் கருதி, அவரை பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைக்க அரசாங்கம் விரும்பியதாக ஒன்றிய அரசு  வட்டாரங்கள் தெரிவித்தன.


— இந்த பிரச்சினை 2019-ஆம் ஆண்டில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், (Jammu and Kashmir Reorganisation Act, 2019) நிறைவேற்றப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. இதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது: சட்டமன்றத்துடன் ஜம்மு காஷ்மீர், மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் பகுதிகளாகும்.


— லடாக்கின் அரசியல் மற்றும் சட்ட அங்கீகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. யூனியன் பிரதேச மக்கள் நேரடி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். லடாக்கின் 90%-க்கும் அதிகமான மக்கள் பட்டியல் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால், இப்பகுதியை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை இருந்து வருகிறது.


— இந்திய அரசியலமைப்பின் பிரிவு 244-ன் கீழ் உள்ள 6-வது அட்டவணை தன்னாட்சி பெற்ற மாவட்ட பகுதிகள் (Autonomous District Councils (ADCs)) எனப்படும் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள் அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. இவை சில வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி பெரும்பான்மை பகுதிகளை ஆட்சி செய்கின்றன.


— தன்னாட்சி பெற்ற மாவட்ட பகுதிகள் ஐந்து ஆண்டு காலத்துடன் 30 உறுப்பினர்கள் வரை கொண்டிருக்கும். மேலும், நிலம், காடு, நீர், விவசாயம், கிராம பகுதிகள், சுகாதாரம், தூய்மை, கிராம மற்றும் நகர அளவிலான காவல்துறை போன்ற விவகாரங்களில் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்க முடியும். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் 10 தன்னாட்சி பெற்ற  மாவட்ட பகுதிகள் உள்ளன. அசாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஒவ்வொன்றிலும் மூன்று வீதமும், திரிபுராவில் ஒன்றும் உள்ளன.


— சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர் மற்றும் நிலையான தயாரிப்புகளின் கண்டுபிடிப்பாளர் ஆவார். அவர் 2009-ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான’ 3 இடியட்ஸில்’ ஆமிர்கான் நடித்த கதாபாத்திரத்திற்கு உத்வேகம் அளித்ததற்காக மிகவும் பிரபலமானவர். 2018-ஆம் ஆண்டில், அவருக்கு மதிப்புமிக்க ராமன் மகசேசே விருது (Ramon Magsaysay Award) வழங்கப்பட்டது. "தொலைதூர வட இந்தியாவில் கற்றல் முறைகளின் தனித்துவமான முறையான, ஒத்துழைப்பு மற்றும் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தத்திற்காகவும், இதன் மூலம் லடாக்கி இளைஞர்களின் வாழ்க்கை வாய்ப்புகளை மேம்படுத்தியதற்காகவும், உள்ளூர் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளின் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்காகவும், உலகில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


- 6-வது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள் உள்ளன.


-லடாக் 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டால், அது தன்னாட்சி பெற்ற  மாவட்ட பகுதிகள் (Autonomous District Councils (ADCs)) மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையங்களை அமைக்க முடியும். இந்தக் குழுக்கள் பழங்குடிப் பகுதிகளை நிர்வகிக்கவும், காடுகள், விவசாயம், கிராமம் மற்றும் நகர நிர்வாகம், பரம்பரை, திருமணம், விவாகரத்து மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் போன்ற விவகாரங்களைப் பற்றிய விதிகளை உருவாக்கவும் அதிகாரம் பெறும்.


- ARC-கள் மற்றும் ADC-களுக்கு நில வருவாயை வசூலிப்பதற்கும், வரி விதிப்பதற்கும், பணக்கடன் வழங்குதல் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், உரிமங்கள் அல்லது அல்லது குத்தகைகளில் இருந்து கட்டணங்களை வசூலிக்கவும், பள்ளிகள், சந்தைகள் மற்றும் சாலைகள் போன்ற பொது வசதிகளை நிறுவவும் ARCகள் மற்றும் ADCகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.


- 2019-ஆம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் லடாக்கை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:


(i) லடாக்கில் 97 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் உள்ளனர்.


(ii) இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் லடாக்கில் நிலம் வாங்கவோ அல்லது சொந்தமாக வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.


(iii) லடாக் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.



Original article:

Share: