பராமரிப்பு பொருளாதாரம் (care economy) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் :


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பானது, இந்தியர்கள் வெவ்வேறு செயல்பாடுகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறது. இதில் கற்றல், ஊதியம் பெறும் வேலை, ஊதியம் பெறாத வீட்டு வேலை மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். ஆண்களும் பெண்களும் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கிறார்கள் என்பதையும் அளவிடுவதே இந்தக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.


ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணியானது, பெண்களை வேலை செய்வதைத் தடுக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. "ஊதியம் பெறாத பராமரிப்புப் பணியின் இந்த விகிதாச்சாரமற்ற சுமை 'நேர வறுமை' (time poverty) என்று அழைக்கப்படுவதை உருவாக்குகிறது. இது ஊதியம் பெறும் வேலைக்கு நேரத்தை அர்ப்பணித்து சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்குத் தேவையான திறன்களைப் பெறுவதற்கான பெண்களின் திறனைத் தடுக்கிறது,” என்று 2022-ல் ஒரு அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Observer Research Foundation) அறிக்கை குறிப்பிட்டது.


பொருளாதார நிபுணர் மிதாலி நிகோர் எழுதிய அதே ஆய்வறிக்கையானது, 2014-ம் ஆண்டிற்கான உலகளாவிய மதிப்பீடுகளையும் வழங்கியது. ஊதியம் பெறாதப் பணி இரண்டு மணிநேரம் அதிகரித்தபோது, ​​பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation Rate (FLFPR)) 10 சதவீதம் குறைந்ததாக அது கூறியது.


இந்தியாவில் பணியாளர்களில் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவு. அரசாங்கத்தின் சமீபத்திய காலமுறை தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு, ஆகஸ்ட் மாதத்தில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 33.7 சதவீதம் மட்டுமே என்பதைக் காட்டுகிறது. அதே வயதுடைய ஆண்களுக்கு, இது 77 சதவீதமாக உள்ளது.


இளம் பெண்கள் அல்லது 15-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு, பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 21.4 சதவீதமாக இன்னும் குறைவாக இருந்தது. அதே வருவாய் விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக 60.7 சதவீதமாக இருந்தது.


2024-ம் ஆண்டிற்கான சமீபத்திய நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. வீட்டு உறுப்பினர்களுக்கு ஊதியம் பெறாத பராமரிப்பு சேவைகளைச் செய்யும் இந்தியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 116 நிமிடங்கள் ஆகும். அதாவது, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் செலவிட்டதாகக் காட்டுகிறது. பெண்கள் தினமும் 137 நிமிடங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டனர். அதே நேரத்தில், ஆண்கள் 75 நிமிடங்களில் மிகக் குறைவாகவே செலவிட்டனர் என்பதை குறிப்பிடுகிறது.


மேற்கூறிய குழு விவாதத்தில், நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் மூலம் புள்ளியியல் அமைச்சகத்திற்கு மேலும் இரண்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.


ஒன்று, குடும்ப உறுப்பினர்களின் டிஜிட்டல் அணுகல், பகிரப்பட்ட மற்றும் பிரத்தியேகமான பயன்பாட்டிற்கு இடையே உள்ள வேறுபாடு மற்றும் தனிப்பட்ட நேர-பயன்பாட்டு முறைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இது ஆய்வு செய்ய வேண்டும். இரண்டாவதாக, நிபுணர்கள் பெண்களின் செயலற்ற அல்லது மேற்பார்வை பராமரிப்புத் தேவைகளைக் பதிவு செய்வதாகும்.


உங்களுக்கு தெரியுமா? 


நேர பயன்பாட்டு கணக்கெடுப்பு (TUS) மற்ற வீட்டுக் கணக்கெடுப்புகளிலிருந்து வேறுபட்டது. அதாவது, அவை மக்கள் தங்கள் நேரத்தை வெவ்வேறு செயல்பாடுகளில் எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை இது பதிவு செய்கிறது. இந்த செயல்பாடுகளில் ஊதியம் பெறும் வேலை, ஊதியம் பெறாத வேலை மற்றும் பிற பணிகள் அடங்கும். பாலின புள்ளிவிவரங்களின் பல அம்சங்களை அளவிட உதவும் விரிவான தரவை இந்த கணக்கெடுப்பு வழங்குகிறது. மேலும் இது வீட்டு உறுப்பினர்கள் கற்றல், சமூகமயமாக்கல், ஓய்வு, சுய பாதுகாப்பு மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளுக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.


ஊதியம் பெறாத செயல்பாடுகள் பல பணிகளை உள்ளடக்கியது. அவற்றில் வீட்டில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். சொந்த பயன்பாட்டிற்கான சேவைகளை உற்பத்தி செய்தல், சொந்த பயன்பாட்டிற்கான பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் தன்னார்வப் பணிகளைச் செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த தன்னார்வப் பணி வீடுகளில் அல்லது சந்தை மற்றும் சந்தை அல்லாத நிறுவனங்களில் பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதற்காக இருக்கலாம். ஊதியம் பெறாத பயிற்சி வேலை மற்றும் பிற ஊதியம் பெறாத பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி ஆகியவை ஊதியம் பெறாத செயல்பாடுகளின் ஒரு பகுதியாகும்.


சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation (ILO)) பராமரிப்பு பொருளாதாரத்தை, "தனிப்பட்டவர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு, ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத வேலை உட்பட, பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளின் தொகுப்பு" என வரையறுக்கிறது. பராமரிப்புப் பொருளாதாரம் என்பது தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உழைப்பு மற்றும் வளங்களின் பரந்த அளவை உள்ளடக்கியது.


பராமரிப்பு பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இங்கு பெண்கள் விகிதாசாரமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சராசரியாக சுமார் 28% பாலின ஊதிய இடைவெளியுடன் சுகாதார மற்றும் சமூகத் துறைகளில் உள்ள மொத்த ஊழியர்களில் 70% பெண்கள் உள்ளனர். இது பராமரிப்பு பொருளாதாரத்தை ஊதியத்தின் அடிப்படையில் மிகவும் சமமற்ற துறைகளில் ஒன்றாக ஆக்குகிறது.


தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (LFPR)) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்திக்கான பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர தொழிலாளர்களை வழங்குவதற்கான மக்கள்தொகையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. எனவே, 'வேலையுள்ள' மற்றும் 'வேலையில்லாத' நபர்களை உள்ளடக்கியது. 


தற்போதைய வாராந்திர நிலை (CWS) அணுகுமுறையின் கீழ், தொழிலாளர் படை என்பது கணக்கெடுப்பு தேதிக்கு முந்தைய ஒரு வாரத்தில் சராசரியாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அல்லது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. LFPR என்பது 1000 நபர்கள்/நபர்-நாட்களுக்கு தொழிலாளர் வளத்தில் உள்ள நபர்கள்/நபர்-நாட்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.



Original article:

Share: