நீதித்துறை பரிசோதனைவாதத்திற்கு எதிராக நீதிக்கான உரிமை -நீரஜ் திவாரி, பிரியன்ஷி சிங்

 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்திய தண்டனைச் சட்டம் 498A பிரிவின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் அங்கீகரிப்பது, பாதிக்கப்பட்டவரின் நீதியைப் பின்தொடர்வதைப் பாதிக்கிறது.


ஜூலை 22, 2025 உச்சநீதிமன்றம், ஷிவாங்கி பன்சால் vs சாகிப் பன்சால் (Shivangi Bansal vs Sahib Bansal) வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் 498A பிரிவின் (இப்போது பாரதீய நியாய சன்ஹிதா பிரிவு 85-ஆக உள்ளது.) தவறான நீதித்துறை நடவடிக்கைகளை தடுக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு  முகேஷ் பன்சால் vs உத்தரப்பிரதேச மாநில வழக்கில் வழங்கிய வழிகாட்டுதல்களை அங்கீகரித்தது. முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) அல்லது குற்றவியல் நீதிபதியிடம் (magistrate) புகாரை பதிவு செய்தபிறகு எந்தவொரு கட்டாய நடவடிக்கைக்கும் உயர்நீதிமன்றம் இரண்டு மாத 'அமைதிப் பருவ காலத்தை' (cooling period) அறிமுகப்படுத்தியது. 


'அமைதிப் பருவ காலத்தின்' போது, இந்த வழக்கு குடும்ப நலக் குழுவிற்கு (Family Welfare Committee (FWC)) பரிந்துரைக்கப்படும். இருப்பினும், 'அமைதிப் பருவ காலம்' அறிமுகப்படுத்தப்படுவதும், இந்த வழக்கை குடும்ப நலக் குழுவிற்க்கு பரிந்துரைப்பதும் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உடனடியாக வழங்குவாதற்குமான உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் குற்றவியல் நீதி நிறுவனங்களின் செயல்பாட்டு சுயாட்சியைப் பாதிக்கிறது.


சோதனைகளின் அடிப்படை


பிரிவு 498A சட்டமாக்கம் திருமண சூழலில் பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான கொடுமைகளை தண்டிக்கும் நோக்கத்துடன் இருந்தது. அப்படி இருந்தாலும், நீதிமன்றங்கள், தொடர்ச்சியான வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை பதிவுகள் மற்றும் அடுத்தடுத்த கைதுகள் விவகாரத்தில் பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அதிகரிக்கும் போக்கு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளன. நீதிமன்றங்கள் அதற்கேற்ப 'அப்பாவி' கணவன் மற்றும் அவனது குடும்பத்தை பாதுகாக்க நடைமுறை பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவியுள்ளன. 


உச்ச நீதிமன்றம், லலிதா குமாரி வழக்கில், திருமண சர்ச்சைகளில் இருந்து எழும் வழக்குகளை முதல் தகவல் அறிக்கை பதிவுக்குமுன் 'ஆரம்ப விசாரணை' (Preliminary Inquiry) செய்யும் வகையில் வைத்துள்ளது. சமீபத்திய, குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களும் கணவனின் கொடுமை வழக்குகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பு, முதலில் ஆரம்ப விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன.


போலியான அல்லது தேவையற்ற புகார்கள் முதல் தகவல் அறிக்கைக்கு வழிவகுப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, பிரிவு 498A-ல் உள்ள மற்றொரு சிக்கலையும் நீதிமன்றங்கள் கவனித்துள்ளன - பல கணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யும் அதிகாரம் இரண்டு நிலைகளில் நியாயப்படுத்தப்பட்டது. முதலாவதாக, 2008-ஆம் ஆண்டில்  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure) ஒரு சட்டப்பூர்வ மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமும், இரண்டாவதாக, 2014-ஆம் ஆண்டில் அர்னேஷ் குமார் வழக்கில்  நீதித்துறை ஆணையின் மூலமும் கைது செய்யும் அதிகாரம் நியாயப்படுத்தப்பட்டது. 

2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளபட்ட திருத்தம் கைது விவகாரங்களில் 'தேவையான கொள்கையை' (principle of necessity) அறிமுகப்படுத்தியது. அர்னேஷ் குமார் வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கி, ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்வதற்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டதன் மூலம், பிரிவு 498A வழக்குகளில் காவல்துறையினர் எளிதாகக் கைது செய்வதைத் தடுத்தது.


2022ஆம் ஆண்டு சதேந்தர் குமார் வழக்கில், நீதிமன்றம் அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் (bail) விடுவிக்க உத்தரவிடுவதன் மூலம் நிறுவன சோதனைகளை மேலும் வலுப்படுத்தியது.


'கைது குற்றம்' (arrest offence) என்ற வகை



தேசிய குற்ற ஆவண பணியகத்தின் (National Crime Record Bureau - NCRB) ‘இந்தியாவில் குற்றங்கள்’ அறிக்கையின்படி, பிரிவு 498A, 2016 வரை முதல் ஐந்து ‘அதிக கைது’ குற்றங்களில் ஒன்றாக இருந்தது. அதன்பிறகு, இது முதல் 10 இடங்களுக்குள் இருந்தது, இது சட்டரீதியான மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் குறிக்கிறது. 


இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 2015-ல் 1,13,403 இல் இருந்து 2022-ல் 1,40,019-ஆக உயர்ந்தாலும், அதே காலகட்டத்தில் NCRB தரவுகளின்படி கைதுகள் 1,87,067 இல் இருந்து 1,45,095 ஆகக் குறைந்தன. இது, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான அணுகல் உரிமையை சமரசம் செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது.


ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் கைதுகள் மீதான கட்டுப்பாடுகளுடன், ஒரு பகுதி-நேர நீதிமன்றக் குழுவை (quasi-judicial committee) அறிமுகப்படுத்தும் திட்டம், காகிதத்தில் ஒரு லட்சிய நடவடிக்கையாக நிரூபிக்கப்படலாம். இந்த உத்தரவுகளை செயல்படுத்த ஒரு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாததாலும், அவற்றின் அதிகார வரம்பு பொருந்தக்கூடிய தன்மை வரையறுக்கப்படாததாலும் இந்த சூழல் ஏற்பட்டிருக்கலாம். 

சமீபத்திய, நீதிமன்றத்தின் தீர்ப்பு பாதிக்கப்பட்டவரின் புகாரை சரியான நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை மறுப்பதன் மூலம், அவருக்கு விரைவாக நீதி கிடைப்பதை கடினமாக்குகிறது.


முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR))/புகார் தாக்கல் செய்த போதிலும், ‘அமைதியான காலம்’ முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதனால் புகார் பதிவு செய்த பின்பும் பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமடைகிறது. 'அமைதி காலம்' அறிமுகப்படுத்துவதும் புகாரை குடும்ப நலக் குழுவிற்கு (Family Welfare Committee (FWC)) அனுப்புவதும் சட்டரீதியான மற்றும் நிறுவனக் கட்டமைப்பின் வரம்பிற்கு வெளியே வருகிறது.


இது நீதித்துறை பரிசோதனைவாதத்தின் மற்றொரு நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. 2017-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம், ராஜேஷ் ஷர்மா வழக்கில், குடும்ப நலக் குழுக்களை அமைப்பதற்கும், அத்தகைய குடும்ப நலக் குழுக்களுக்கு புகார்களை அனுப்புவதற்கும் இதேபோன்ற வழிகாட்டுதல்களை வழங்கியது. ராஜேஷ் ஷர்மா வழக்கில் குடும்பநலக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு மாத காலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட 'அமைதி காலம்' போன்றது.


 ராஜேஷ் வழக்கில் உள்ள வழிகாட்டுதல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தால் வரவேற்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவை 'பிற்போக்குத்தனமானவை’ (regressive) மற்றும் 'நீதித்துறை தகுதிக்கு' (judicial competence) அப்பாற்பட்டவை என்று அழைக்கப்பட்டன. இதன் காரணமாக, உச்சநீதிமன்றம் ஒரு வருடத்திற்குள் அதன் வழிமுறைகளைத் திரும்பப் பெற்றது.


மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சமூக நடவடிக்கை மன்றம் மனவ் அதிகார் என்ற 2018-ஆம் ஆண்டு  வழக்கில், ராஜேஷ் ஷர்மாவின் உத்தரவுகளை ரத்து செய்தது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியைப் பெறுவதற்கான உரிமையை மீண்டும் வழங்கியது மற்றும் குற்ற அறிக்கைகளைக் கையாள்வதிலும் நீதி வழங்குவதிலும் குற்றவியல் நீதித்துறை அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தியது.




தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்


பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது மற்றும் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்த கவலைகள் ஏற்கனவே புதிய சட்டங்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளால் கையாளப்பட்டுவிட்டதால், உச்சநீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியமானதாகிறது. குடும்ப நலக் குழுக்களுக்கு (FWCs) புகார்களை அனுப்புவது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது. குற்றவியல் நீதி நிறுவனங்களின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துகிறது. மேலும், பாதிக்கப்பட்டவரின் நீதியைப் பெறும் திறனைப் பாதிக்கிறது.


நீரஜ் திவாரி டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராக உள்ளார். பிரியான்ஷி சிங் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் சட்டம் தொடர்பான கே.எல். அரோரா தலைவராக கல்வி உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share: