— இந்தத் திட்டத்தின் மூலம், மொரீஷியஸில் மருத்துவமனைகள், சாலைகள் கட்டுவதற்கும் ஹெலிகாப்டர்கள் வழங்குவதற்கும் இந்தியா உதவி செய்யும். வாரணாசியில் பிரதமர் மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் இடையேயான சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
— இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வெறும் ‘உதவி’ இல்லாமல் ‘நமது பகிரப்பட்ட எதிர்காலத்தில் முதலீடு’ என்று அழைத்த பிரதமர் மோடி, ‘அதே நேரத்தில், சாகோஸ் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி; SSR சர்வதேச விமான நிலையத்தில் ATC கோபுரம், நெடுஞ்சாலைகள் மற்றும் ரிங் சாலைகளின் விரிவாக்கம் போன்ற திட்டங்களையும் நாங்கள் முன்னேற்றுவோம் என்றார்.
— மொரீஷியஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் (Exclusive Economic Zone (EEZ)) பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், அதன் கடல்சார் திறனை மேம்படுத்துவதிலும் இந்தியா ‘முழு அர்ப்பணிப்புடன் உள்ளது’ என்று பிரதமர் மோடி கூறினார்.
— தீவு நாட்டின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் ‘சரியான நேர ஆதரவுக்கு’ ராம்கூலம் பாராட்டு தெரிவித்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
— மேற்கு இந்தியப் பெருங்கடலில் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள மொரீஷியஸ் தீவு நாடு இந்தியாவுக்கு முக்கியமான அண்டை நாடு ஆகும். இந்த சிறப்பு உறவுக்கான முக்கிய காரணம், 1.2 மில்லியன் மக்கள்தொகையில் ஏறக்குறைய 70% இந்திய வம்சாவளியினர் உள்ளனர்.
— 1948ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியா இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் சில நாடுகளில் மொரீஷியஸும் ஒரு நாடாகும். 1968ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, மொரீஷியஸ் முக்கியமாக இரு பெரிய அரசியல் குடும்பங்களால் ஆளப்பட்டது. ராம்கூலம் குடும்பம் (சீவூசகர் ராம்கூலம் மற்றும் அவரது மகன் நவின்) மற்றும் ஜுக்நாத் குடும்பம் (அனிரூத் ஜுக்நாத் மற்றும் மகன் பிரவீந்த்) ஆகும்.
— இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2005–06ஆம் ஆண்டுகளில் USD 206.76 மில்லியனிலிருந்து 2023–24-இல் USD 851.13 மில்லியனாக அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில், நிதியாண்டில் இந்திய ஏற்றுமதி USD 778.03 மில்லியன் மற்றும் மொரீஷியஸ் ஏற்றுமதி USD 73.10 மில்லியன் மதிப்பு கொண்டது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் மருந்துகள், தானியங்கள், பருத்தி, இறால் மற்றும் இறைச்சி உள்ளன. மொரீஷியஸ் வெனிலா, மருத்துவ கருவிகள், அலுமினியம் கலவைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட செம்பு ஏற்றுமதி செய்கிறது.
— மொரிஷியஸ் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டின் (Foreign Direct Investment (FDI)) முக்கிய ஆதாரமாகவும் இருந்து வருகிறது. 2000ஆம் ஆண்டு முதல் 175 பில்லியன் அமெரிக்க டாலர்கள், மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தோராயமாக 25% ஆகும்.
2016ஆம் ஆண்டிற்க்குப் பிறகு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மாநாட்டின் (Double Taxation Avoidance Convention (DTAC)) சீர்திருத்தங்கள் சரிவுக்கு வழிவகுத்தாலும் (2016–17 இல் 15.72 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2022–23இல் 6.13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக), 2023–24இல் அந்நிய நேரடி முதலீடு 7.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மீண்டும் உயர்ந்தது. இது மொரிஷியஸின் இந்தியாவின் 2-வது பெரிய அந்நிய நேரடி முதலீட்டு மூலமாக மாறியது. 2024–25ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.
— பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லானது பிப்ரவரி 22, 2021ஆம் ஆண்டுகளில் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation and Partnership Agreement (CECPA)) கையெழுத்தானது. ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.
இது ஒரு ஆப்பிரிக்க நாட்டுடனான இந்தியாவின் முதல் வர்த்தக ஒப்பந்தமாகும். விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் 310 இந்திய ஏற்றுமதி பொருட்கள் மற்றும் 615 மொரீஷியஸ் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. இதில் சர்க்கரை, பழச்சாறுகள், மதுபானங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் உள்ளன.