பள்ளிகளில் கட்டாய சுகாதாரக் கல்வி என்பது இடைவெளியைக் குறைக்க உதவும் ஒரு படியாகும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், SDG அறிக்கையின் 2025 பதிப்பில், 167 நாடுகளில் 99-வது இடத்தைப் பெற்ற இந்தியா, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) குறியீட்டில் தனது சிறந்த நிலையைப் பெற்றது. இது 2024-ல் 109-வது தரவரிசையில் இருந்த நிலையில் தற்போது, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த அறிக்கையானது, 2021 முதல் நிலையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. அடிப்படை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கான அணுகல் போன்ற துறைகளில் இந்தியா முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆயினும்கூட, முக்கியத் துறைகளில், குறிப்பாக சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில், கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்களில் முன்னேற்றம் சீரற்றதாக இருக்கும் நிலையில் கடுமையான சவால்களையும் அறிக்கையானது எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன
இந்தப் பின்னணியில், SDG-3 பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியமானது. இதன் குறிக்கோளானது, "ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதும், எல்லா வயதினருக்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதும்" (ensure healthy lives and promote well-being for all at all ages) ஆகும். மேலும், இது இந்தியாவிற்கு மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். இது அடைய மிகவும் கடினமான ஒன்றாகும். இது 2030-க்குள் இந்தியா அடைய உறுதியளித்துள்ள குறிப்பிட்ட இலக்குகளை உள்ளடக்கியது. சில பகுதிகளில் முன்னேற்றங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்தியா அவற்றில் பெரும்பாலானவற்றை அடையும் நிலையில் இல்லை. உதாரணமாக, மகப்பேறு இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio (MMR)), ஆனது 100000 பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கை 97 உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-க்கான இலக்கு 70-ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (under-five mortality rate) கூட 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 25 என்ற இலக்குடன் ஒப்பிடும்போது 32 இறப்புகளாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில், இது இரண்டு முதல் ஆறு இறப்புகள் வரை உள்ளது. இந்தியாவின், ஆயுட்காலம் இப்போது 70 ஆண்டுகளாக உள்ளது. இது 73.63 ஆண்டுகள் என்ற இலக்குடன் குறைவாக உள்ளது. மொத்த நுகர்வில் 13%, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 7.83%-ஐ விட கிட்டத்தட்ட இருமடங்காக, வரம்பிற்கு மீறிய (Out-of-pocket) சுகாதாரப் பாதுகாப்புச் செலவுவானது குடும்பங்களுக்குச் சுமையாகத் தொடர்கிறது. நோய்த்தடுப்புக்கான சுகாதாரம்கூட, பாராட்டத்தக்க வகையில் 93.23% ஆக இருந்தாலும், உலகளாவிய இலக்கான 100%-ஐ இன்னும் எட்டவில்லை.
இந்த இடைவெளிகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை, முதலாவதாக, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரக் காரணிகளால் ஓரளவுக்கு தரமான சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் இல்லாதது ஆகும். இரண்டாவதாக, மோசமான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் துப்புரவு மற்றும் பிற வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவை அடங்கும். மூன்றாவது, கலாச்சார நடைமுறைகள் மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் சுற்றியுள்ள களங்கம் போன்ற பொருளாதாரமற்ற காரணிகளை உள்ளடக்கும். இந்த கலாச்சார நடைமுறைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட விழிப்புணர்வு சமூகங்கள் தங்களுக்குக் கிடைக்கும் சுகாதார சேவைகளை கூடப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன.
SDG இலக்கு 3-ல் இந்தியா முன்னேற்றத்தை விரைவுபடுத்த வேண்டுமானால், நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மும்முனை அணுகுமுறை (three-pronged approach) அவசியம். முதலாவது உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டை மக்களுக்கு வழங்குவதாகும். உலக வங்கி ஆய்வுகள், வலுவான காப்பீட்டு அமைப்புகளைக் கொண்ட நாடுகள் பேரழிவு தரும் சுகாதார-பராமரிப்பு செலவினங்களைக் குறைத்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், அவை சுகாதார சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்துள்ளன. இரண்டாவது, நாடு முழுவதும் உயர்தர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்புக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின், உலக சுகாதார புள்ளிவிவரங்கள்-2022 அறிக்கை, ஆரம்ப சுகாதார அமைப்புகள் நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், மருத்துவமனையில் சேர்க்கும் செலவைக் குறைப்பதற்கும் மற்றும் சிறந்த நீண்டகால விளைவுகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு, டிஜிட்டல் சுகாதார கருவிகளின் (digital health tools) உருமாறும் திறனைப் பயன்படுத்துவதும் தேவைப்படும்.
தொலை மருத்துவம் (Telemedicine) மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள் அணுகல் (integrated digital health records) இடைவெளிகளைக் குறைக்கலாம். குறிப்பாக, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இந்த நிலையை மேம்படுத்தலாம். லான்செட் டிஜிட்டல் சுகாதார ஆணையம் (Lancet Digital Health Commission) சான்றுகள், டிஜிட்டல் தளங்கள் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தாய்வழி சுகாதாரம் மற்றும் தடுப்பூசி கண்காணிப்பை எவ்வாறு மேம்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்தியா இந்த உதாரணங்களிலிருந்து கற்றுக்கொண்டு அவற்றை மாற்றியமைக்க முடியும்.
பள்ளி அளவில் சுகாதாரக் கல்வி
நோய்களுக்கு சிகிச்சையளிப்பதைவிட அவற்றைத் தடுப்பது செலவு குறைந்ததாகும். நோய்களைத் தடுக்க, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சுகாதார கல்வி வழங்க வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்து, நல்ல சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம், சாலைப் பாதுகாப்பு மற்றும் மனநலம் போன்ற தலைப்புகளில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
இந்த இளம் வயதில், அவர்கள் தங்கள் அறிவை மட்டுமல்ல, அவர்களின் ஆரோக்கிய நடத்தையை மேம்படுத்த வேண்டும். இந்த வயதில் அவர்கள் வளர்த்துக்கொள்ளும் ஆரோக்கியப் பழக்கவழக்கங்கள் அவர்கள் பெரியவர்களாக வளரும்போது பராமரிக்கப்படும். பெண்கள் தாயாகும்போது, அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் அறிந்தவர்களாக இருப்பார்கள் மற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இதை கற்பிக்கிறார்கள். நீண்டகாலமாக, பள்ளி சுகாதாரக் கல்வித் திட்டமானது, MMR விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு மற்றும் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இது ஆயுட்காலம் மற்றும் நோய்த்தடுப்பு காப்பீட்டை அதிகரிக்கும்.
பின்லாந்து 1970-களில் பள்ளி சார்ந்த சுகாதார சீர்திருத்தங்களை (school-based health reforms) அறிமுகப்படுத்தியது. இந்த சீர்திருத்தங்களில் பாடத்திட்டத்தில் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய பாடங்கள் அடங்கும். பிந்தைய காலகட்டங்களில் இருதய நோய் விகிதங்களைக் (cardiovascular disease rates) குறைப்பதில் அவை முக்கியப் பங்கு வகித்தன. ஜப்பானில், கட்டாய சுகாதாரக் கல்வி (compulsory health education) மேம்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகள் மற்றும் நீண்ட ஆயுட்காலம் (life expectancy) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மற்றும் முற்போக்கான பாடத்திட்டம் இதே போன்ற முடிவுகளை அடைய முடியும்.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் தேவை
எனவே, நிலையான வளர்ச்சி இலக்கு இடைவெளியை (SDG gap) குறைப்பதற்கு கொள்கை வகுப்பாளர்கள் (policymakers) மற்றும் தனிநபர்கள் (individuals) இருவரின் நடவடிக்கையும் தேவை. கொள்கை வகுப்பாளர்கள் பள்ளி பாடத்திட்டத்தில் சுகாதாரக் கல்வியைச் சேர்க்க வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் முதலீடு செய்ய வேண்டும்.
இளைஞர்களின் சுகாதார கல்வியில் அனைத்து பெற்றோர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தையின் பள்ளி பாடத்திட்டத்தை மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியம் பற்றிய தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க முடியும். இல்லை என்றால், கல்வித்துறைக்கு இது குறித்து தெரிவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட SDG தரவரிசை ஊக்கமளிக்கிறது. ஆனால், உலகளாவிய SDG இலக்குகளில் 17% மட்டுமே 2030-ம் ஆண்டிற்குள் அடையும் தன்மையில் உள்ளது என்ற யதார்த்தத்தை மறைக்கக் கூடாது. வலுவான சுகாதார-பராமரிப்பு அமைப்புகளால் ஆதரிக்கப்படும் ஆரோக்கியமான நடத்தை பற்றி அதன் இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது, நிலையான முன்னேற்றத்திற்கான அடித்தளமாக செயல்படும்.
மேலும், 2030 அடைய ஒரு முக்கியமான மைல்கல் என்றாலும், உண்மையான தொலைநோக்குப் பார்வை அதையும் தாண்டி செல்கிறது. ஆரோக்கியமான மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்குவதே குறிக்கோள். பள்ளி பாடத்திட்டத்தில் சுகாதாரக் கல்வியைச் சேர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தினால், அது இந்த இலக்கை அடைய உதவும். இது 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவின் (Viksit Bharat) கனவை நனவாக்கும் செயல்பாடாகும்.
உலகளாவிய சுகாதாரம் மற்றும் கல்விக்கான யுனெஸ்கோவின் தலைவரான ராகுல் மெஹ்ரா இந்தியாவின் தேசிய பிரதிநிதியாக உள்ளார். அவர் தரங் ஹெல்த் அலையன்ஸின் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார்.