முக்கிய அம்சங்கள் :
நாடு முழுவதும் சீரான இடைவெளியில், சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision(SIR)) நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு-க்கு (Public Interest Litigation (PIL)) பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்-பிரமாணப் பத்திரத்தில் தேர்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது.
மனுவை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தவறாமல் நடத்துவதற்கான எந்தவொரு உத்தரவும் தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக அதிகார வரம்பை (exclusive jurisdiction) மீறும் என்று அது கூறியது.
"இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின்கீழ், ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்கான கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது" என்று தேர்தல் குழு சுட்டிக்காட்டியது.
இந்த விதியானது, வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் நடத்தை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதன் முழு அதிகாரத்திற்கும் அடித்தளமாக அமைகிறது என்று தேர்தல் ஆணையம் மேலும் கூறியது.
மேலும் தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதாவது, "வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் அவற்றை திருத்தம் செய்வதை மேற்பார்வையிடுவதற்கு அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் உள்ளன. இந்த சட்டப்பூர்வ அதிகாரங்களில் சூழ்நிலையைப் பொறுத்து வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தம் அல்லது சுருக்கத் திருத்தம் (intensive or summary revision) ஆகியவற்றை மேற்கொள்ளும் அதிகாரமும் அடங்கும்."
"மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர்கள் பதிவு விதிகள் 1960-ன் கீழ் செயல்படுத்தும் விதிகள், தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் தீவிரமான அல்லது சுருக்கமான திருத்தம் பொருத்தமானதா என்பதை தீர்மானிக்க இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரங்களை வழங்குகிறது" என்று ஆணையம் மேலும் குறிப்பிட்டது.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of People Act(RPA)), 1950 இன் பிரிவு 21, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும், திருத்துவதற்கும் வழங்குகிறது. மேலும், இந்தப் பிரிவு, திருத்தத்தின் நேரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விருப்புரிமையையும் வழங்குகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RPA) பிரிவு 21-ஐ, 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 25 உடன் ஒப்பிட வேண்டும். இதில் திருத்தம் மற்றும் அது நடத்தப்படும் விதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் அது குறிப்பிட்டதாவது, "விதி 25-ன் அடிப்படையில், வாக்காளர் பட்டியலின் சுருக்கம் அல்லது தீவிர திருத்தத்தை நடத்துவதற்கான முடிவு ECI-ன் விருப்பத்திற்கு விடப்படுகிறது என்பது மேலும் தெளிவாகிறது.”
உங்களுக்குத் தெரியுமா? :
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) என்பது ஒரு நிரந்தர, சுதந்திரமான மற்றும் அரசியலமைப்பு அதிகாரம் அமைப்பாகும். இது ஒன்றிய அரசு மற்றும் இந்திய மாநிலங்களில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பாகும்.
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கும், ஆணையத்தின் சாத்தியமான தன்மைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவை வழங்குவதற்கும் அரசியலமைப்பில் குறிப்பிடும் பிரிவாக 324-329 விளக்குகிறது.
பிரிவு 324 : ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்கள் ஆகியவற்றிற்கான தேர்தல்கள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் கண்காணிப்பு, மேற்பார்வையிடுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
பிரிவு 325 : மதம், இனம், சாதி, பாலினம் அல்லது இந்தக் காரணிகளில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு நபரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்க முடியாது.
பிரிவு 326 : வயது வந்தோர் வாக்குரிமை (Adult suffrage) என்பது மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
பிரிவு 327 : இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அவ்வப்போது சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
பிரிவு 328 : ஒரு மாநில சட்டமன்ற அவை அல்லது மாநில சட்டமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சட்டங்களை இயற்றலாம்.
பிரிவு 329 : தேர்தல் விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை இந்தப் பிரிவு தடை செய்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், சிறப்பு தீவிரத் திருத்தங்கள் நடைபெறுகின்றன. மேலும், ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.