2023ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பக (National Crime Records Bureau (NCRB)) அறிக்கை, இணையவழி குற்றங்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.
குற்றம் மற்றும் சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) ஆண்டு அறிக்கைகளை கவனமாகப் படிக்க வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான எண்களை மாநிலங்களுக்கு இடையே நேரடியாக ஒப்பிட முடியாது, ஏனெனில் அவை பெரும்பாலும் குற்றங்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன அல்லது பதிவாகின்றன என்பதைப் பொறுத்தது.
இருப்பினும், சில தேசிய போக்குகள் மற்றும் மாநிலங்களுக்குள் ஏற்படும் திடீர் வருடாந்திர மாற்றங்கள் இன்னும் அரசாங்க நடவடிக்கை தேவைப்படும் பயனுள்ள வடிவங்களைக் காட்டக்கூடும். ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய NCRB அறிக்கை, தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கீழ் ஒத்திவைக்கப்பட்ட ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுத்துக்காட்டுகிறது.
கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான எண்கள் உள்ளன. அவை, இந்தியா முழுவதும் கொலை வழக்குகளில் 2.8% குறைவு, பட்டியல் பழங்குடியினருக்கு (STs) எதிரான குற்றங்களில் 28.8% கூர்மையான அதிகரிப்பு மற்றும் இணையவழி குற்றங்களில் 31.2% அதிகரிப்பு போன்றவை உள்ளன.
கொலை வழக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி சட்ட அமலாக்கத்திற்கு ஒரு நிம்மதியாகும். ஏனெனில், பெரும்பாலான கொலைகள் தகராறுகள், தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது நிதி ஆதாயத்துடன் தொடர்புடையவை. இருப்பினும், பட்டியல் பழங்குடியினருக்கு (STs) மற்றும் இணையவழி குற்றங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு கவலை அளிக்கிறது.
பட்டியல் பழங்குடியினருக்கு (STs) எதிரான குற்றங்களில் ஏற்பட்ட பெரிய அதிகரிப்பு முக்கியமாக மணிப்பூரில் நடந்த இன வன்முறை காரணமாகும். அங்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டிலிருந்து 2023-ல் 3,399 ஆக உயர்ந்தது. இது மிகவும் திறமையான அரசாங்கம் இருந்தால் தடுத்திருக்க முடியும்.
மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தானிலும் பழங்குடி சமூகங்களுக்கு எதிராக அதிக குற்ற விகிதங்கள் பதிவாகியுள்ளன. இது மத்திய இந்தியாவில் அவர்களின் தொடர்ச்சியான பாதிப்பைக் காட்டுகிறது. இந்தப் போக்கு புதியதல்ல; முந்தைய NCRB அறிக்கைகள் அதிக பழங்குடி மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அதிக குற்ற விகிதங்களைக் காட்டியுள்ளன.
நாடு முழுவதும் இணைய பயன்பாடு (Internet penetration) அதிகமாக இருப்பதால், இணையக் குற்றங்களில், குறிப்பாக நிதி மோசடி (financial fraud) மற்றும் பாலியல் சுரண்டல் (sexual exploitation) தொடர்பான குற்றங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்வுகளின் அடிப்படையில், இந்த எண்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தினசரி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீட்டில் டிஜிட்டல் நிதிக் கருவிகளின் அதிக பயன்பாட்டுடன் மேலும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
சிறப்பு பிரிவுகளுடன் காவல்துறை வளர்ந்து வரும் இணையக் குற்ற அச்சுறுத்தலுடன் தொடர முயன்றாலும், டிஜிட்டல் குற்றங்களின் எங்கும் நிறைந்த தன்மை மற்றும் ஆழமான பரவலுக்கு எதிராக அவற்றை எதிர்கொள்ள காவல்துறையால் அதிக நுட்பம் (sophistication) மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023ஆம் ஆண்டில் 9.2% அதிகரித்தன. இதில 96% வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவருக்கு நெருங்கிய தொடர்பில் இருப்பவராக உள்ளார். இந்த அதிகரிப்பு மாநிலங்கள் முழுவதும் மேம்பட்ட புகார் அளிப்பதன் விளைவாக இருக்கலாம் என்றாலும், அதிக எண்ணிக்கையிலான (1,77,335 வழக்குகள்) இந்த குற்றங்கள் மற்றும் பெரியவர்களின் தவறான நடத்தை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
போக்சோ (Protection of Children from Sexual Offences Act (POCSO)) சட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். மேலும், இது வழக்குத் தொடரும் நபர் மற்றும் காவல்துறையினரால் கவனமாகக் கையாளப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 0.4% சிறிதளவு அதிகரித்துள்ளன. ஆனால், வரதட்சணை தொடர்பான குற்றங்களில் (dowry-related crimes) 14.9% உயர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நிலவும் சமூகப் பிரச்சினையை (societal problem) சுட்டிக்காட்டுகிறது.